இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை - நுண்புழை ஏற்ற முறையில் பரப்பு இழுவிசை காணல் | 11th Physics : Practical Experiment
நுண்புழை ஏற்ற முறையில் பரப்பு இழுவிசை காணல்
நோக்கம்
நுண்புழை ஏற்ற முறையில் ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுதல்
தேவையான கருவிகள்
நீர் உள்ள முகவை, நுண்புழைக்குழாய், வெர்னியர் நுண்ணோக்கி, துளையிடப்பட்ட இரப்பர் அடைப்பான் நீண்ட பின்னலூசி, ஓர் குட்டையான இரப்பர் குழாய் மற்றும் பற்றுக்கருவி
வாய்ப்பாடு
திரவத்தின் பரப்பு இழுவிசை T = hrσg/2 N m-1
T → திரவத்தின் பரப்புஇழுவிசை (N m–1)
h → நுண்புழைக்குழாயில் திரவத்தின் உயரம் (m)
r → நுண்புழைக்குழாயின் ஆரம் (m)
σ → நீரின் அடர்த்தி (σ = 1000 kg m–3)
g → புவியீர்ப்பு முடுக்கம் (g = 9.8 m s–2)
விளக்கப்படம்
நுண்புழை ஏற்றமுறையில் பரப்பு இழுவிசை காணும் சோதனை அமைப்பு
செய்முறை
• ஒரு தூய்மையான மற்றும் உலர்ந்த நுண்புழைக்குழாய் ஒரு தாங்கியில் பொருத்தப்படுகிறது.
• ஒரு நீர்நிரம்பியுள்ள முகவை சரி செய்யக்கூடிய மேடையில் சிறிய அளவிலான நீர் குழாயினுள் உயரும் வகையில் வைக்கப்படுகிறது. எனவே திரவத்தின் பரப்பை தொடுமாறு நுண்புழைக்குழாயின் அருகில் ஊசியை பொருத்தவேண்டும்.
• வெர்னியர் நுண்ணோக்கியால் நீரின் பிறைத்தளம் கீழப்பகுதி நோக்கப்படுகிறது. பிறைத்தள மட்டமானது குறுக்குக்கம்பியுடன் பொருந்தும் நிலையில் அளவீடு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
• வெர்னியர் நுண்ணோக்கியால் ஊசியின் முனை நோக்கப்பட்டு மீண்டும் அளவீடு குறிக்கப்படுகிறது.
• செங்குத்து அளவு கோலின் இரு அளவீடுகளுக்கான வேறுபாடு நுண்புழைக்குழாயில் மேலேறிய நீர்மத்தின் உயரம் h ஆகும்.
• நுண்புழைக்குழாயின் ஆரத்தைக் கணக்கிட நகரும் மேடையின் உயரத்தை தாழ்த்தி முகவையானது அகற்றப்படவேண்டும். நுண்புழைக்குழாயைக் கவனமாக சுழற்றி மூழ்கியிருந்த கீழ்முனைப்பகுதி உங்களை நோக்கி இருக்குமாறு செய்யவேண்டும்.
• வெர்னியர் நுண்ணோக்கியால் குழாயானது நோக்கப்பட்டு குழாயின் உட்சுவர் தெளிவாகத் தெரியும்படி சரி செய்யப்படுகிறது.
• குழாயின் இடப்புற உட்சுவர் வெர்னியர் நுண்ணோக்கியின் செங்குத்துக் குறுக்கு கம்பியுடன் பொருந்துமாறு சரி செய்யப்படுகிறது. இந்த அளவு L1 என குறித்துக் கொள்ளப்படுகிறது.
• நுண்ணோக்கியின் திருகுகளைத் திருகி கிடைத்தளத்திசையில் நகர்த்தி குழாயின் வலப்புற உட்சுவர் நோக்கப்படுகிறது. இதன் அளவு R1, குறித்துக் கொள்ளப்படுகிறது. எனவே குழாயின் ஆரத்தை ½(L1-R1). என்ற வாய்ப்பாட்டின் மூலம் கணக்கிடலாம்.
• இறுதியாக கொடுக்கப்பட்ட வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி பரப்பு இழுவிசை கணக்கிடப்படுகிறது.
காட்சிப்பதிவுகள்
திரவத்தின் உயரத்தைக் காணல் 'h'
நுண்ணோக்கியின் மீச்சிற்றளவு (LC) = .......................
நுண்புழைக்குழாயின் ஆரம்
கணக்கீடு
நுண்புழைக்குழாயினுள் திரவத்தின் சராசரி உயரம் h = ----- × 10-2 m
நுண்புழைக்குழாயின் விட்டம் 2r = ------------- × 10-2 m
நுண்புழைக்குழாயின் ஆரம் r = ----------- × 10-2 m
நீரின் அடர்த்தி σ = 1000 kg m-3
புவிஈர்ப்பு முடுக்கம் g = 9.8 m s-2
பரப்பு இழுவிசை T = hrσg/2
= ____________Nm-1
முடிவு
நுண்புழை ஏற்றமுறையில் கொடுக்கப்பட்ட திரவத்தின் பரப்பு இழுவிசை T =________N m–1