இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Physics : UNIT 11 : Recent Developments in Physics
அலகு−11
இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்
1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. ZnO பொருளின் துகள் அளவு 30 nm. இந்த பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.
a) பேரளவு பொருள்
b) நானோ பொருள்
c) மென்மையான பொருள்
d) காந்தப்பொருள்
விடை: b) நானோ பொருள்
2. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?
a) மயிலிறகு
b) மயில் அலகு
c) மணல் துகள்
d) திமிங்கலத்தின் தோல்
விடை: a) மயிலிறகு
3. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது.
a) தாமரை இலை
b) மார்ஃபோ பட்டாம்பூச்சி
c) கிளிமீன்
d) மயிலிறகு
விடை: c) கிளிமீன்
4. அணுக்களை ஒன்று திரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது.
a) மேலிருந்து−கீழ் அணுகுமுறை
b) கீழிலிருந்து−மேல் அணுகுமுறை
c) குறுக்கு கீழ் அணுகுமுறை
d) மூலை விட்ட அணுகுமுறை
விடை: b) கீழிலிருந்து−மேல் அணுகுமுறை
5. 'ஸ்கி மெழுகு' என்பது நானோ பொருளின் பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை
a) மருத்துவம்
b) ஜவுளி
c) விளையாட்டு
d) வாகன தொழிற்சாலை
விடை: c) விளையாட்டு
6. எந்திரனியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
a) அலுமினியம் மற்றும் வெள்ளி
b) வெள்ளி மற்றும் தங்கம்
c) தாமிரம் மற்றும் தங்கம்
d) எஃகு மற்றும் அலுமினியம்
விடை: d) எஃகு மற்றும் அலுமினியம்
7. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள்
a) வடிவ நினைவு உலோகக்கலவைகள்
b) தங்கம் தாமிர உலோகக் கலவைகள்
c) தங்கம் வெள்ளி உலோகக் கலவைகள்
d) இரு பரிமாண உலோகக்கலவைகள்
விடை: a) வடிவ நினைவு உலோகக்கலவைகள்
8. மூளையானது வலியைச் செயலாக்குவதை நிறுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
a) துல்லிய மருத்துவம்
b) கம்பியில்லாமூளை உணர்வி
c) மெய்நிகர் உண்மை
d) கதிரியக்கவியல்
விடை: c) மெய்நிகர் உண்மை
9. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்
a) ஹிக்ஸ் துகள்
b) ஐன்ஸ்டீன் துகள்
c) நானோ துகள்
d) பேரளவு துகள்
விடை: a) ஹிக்ஸ் துகள்
10. ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர்
a) கான்ராட் ரோன்ட்ஜென்
b) மேரி கியூரி
c) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
d) எட்வார்டு பர்ச்செல்
விடை: c) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்