இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் - சிறுவிடை வினாக்கள் | 12th Physics : UNIT 11 : Recent Developments in Physics
II. சிறுவிடை வினாக்கள்
1. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
நானோ அறிவியல்
1. 1−100nm அளவுகள் வரை கொண்ட பொருளின் அறிவியல் ஆகும். ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு அதாவது 10−9m ஆகும்.
2. பருப்பொருளானது அத்தகைய சிறு பொருட்களாக பிரிக்கப்பட்டால் இயந்திரவியல், மின்னியியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது
நானோ தொழில்நுட்பம்
1. நானோ தொழில் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக் கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஆகும்.
2. இது நானோ பொருட்கள் கொண்டு உருவாக்கப்படும் தொழில் நுட்பம்
2. நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது?
நானோ பொருட்கள்
1. ஒரு திண்மத்தின் துகளின் அளவு 1−100 nm அளவில் இருந்தால் அது நானோ பொருட்கள் ஆகும்.
2. இவற்றின் துகள்களை சாதாரண கண்களால் பார்க்க இயலாது.
3. எ.கா: i) நானோ சைம்ஸ்
ii) டைட்டானியம்−டை−ஆக்சைடு
iii) நானோ துகள்கள்
பேரளவு பொருட்கள்
1. ஒரு திண்மத்தின் துகளின் அளவு 100 nmக்கு அதிகமானதாக இருந்தால் அது பேரளவு பொருட்கள் ஆகும்.
2. இதன் துகள்களை சாதாரண கண்களால் பார்க்க இயலும் .
3. எ.கா: பூச்சு, மணல், சரளை, சிமெண்ட், தாது, கசடுகள், உப்புகள் போன்றவை.
3. இயற்கையில் உள்ள ‘நானோ’ பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
• மார்ஃபோ பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் உள்ள செதில்கள் நானோ அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை ஒளி அலைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரியும் வழியை மாற்றி இறக்கைகளுக்கு உலோக நீல நிறத்தையும், பச்சை சாயல்களையும் அளிக்கின்றன.
• மயில் இறகுகள் சில பத்து நானோ மீட்டர் தடிமன் கொண்ட 2 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால் அவற்றின் மாறுப்பட்ட நிறங்களைப் பெறுகின்றன.
4. எந்திரனியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
நன்மைகள்:
• ரோபோக்கள் மனிதர்களை விட மிகவும் மலிவானதாகும்.
• ரோபோக்கள் மனிதர்களைப் போல எப்போதும் சோர்வடையாது.
• மனிதர்களை விட வலிமையானவை மற்றும் வேகமானவை.
தீமைகள்:
• ரோபோக்களுக்கு உணர்வுகள் அல்லது மனசாட்சி இல்லை.
• அவை இரக்கம் அற்றதாக உள்ளது மற்றும் உணர்வற்ற பணியிடங்களை உருவாக்குகின்றன.
• வேலை வாய்ப்பின்மை பிரச்சனை அதிகரிக்கும்.
5. ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?
• ரோபோக்களுக்கு அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய உலோகங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
• அலுமினியம் ஆனது ஒரு மென்மையான உலோகம் என்பதால் அதைக் கொண்டு எளிதாக உருவாக்கலாம்.
• ஆனால் எஃகு ஆனது பல மடங்கு வலிமையானது, இவை தகடு, கம்பி, வாய்க்கால் வடிவ கம்பி மற்றும் பிற வடிவங்களாக ரோபோ உடல்பகுதிகள் கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
6. கருந்துளைகள் என்றால் என்ன?
• கருந்துளைகள் விண்மீன்களின் இறுதி நிலையாகும் மற்றும் அவை அதிக அடர்த்தி கொண்ட பெருத்த பொருளாகும்.
• அதன் நிறையானது சூரியனின் நிறையைப் போல 20 மடங்கிலிருந்து 1 மில்லியன் மடங்கு வரை உள்ளது.
• அது எந்த ஒரு துகளும் அல்லது ஒளியும் கூட அதிலிருந்து தப்பிச் செல்லாதவாறு மிக வலிமையான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளது.
• கருந்துளையை சுற்றும் விண்மீன்கள் மற்ற விண்மீன்களை விட வித்தியாசமாக செயல்படும் போது கருந்துளைகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
• ஒவ்வொரு விண்மீன் திரளும் அதன் மையத்தில் கருந்துளையைக் கொண்டுள்ளது.
7. துணை அணுத்துகள்கள் என்பவை யாவை?
• அணுவை விட சிறிய அளவிலான துகள்கள் “துணை அணுத்துகள்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
• புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் ஆகிய மூன்றும் முக்கியமான துணை அணுத்துகள் ஆகும்.