இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் - நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் | 12th Physics : UNIT 11 : Recent Developments in Physics
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம்
நானோஅறிவியல்
(Nanoscience)
நானோ அறிவியல் என்பது 1-10onm அளவுகள் வரை
கொண்ட பொருள்களின் - அறிவியல் ஆகும். நானோ என்பது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பங்கு
அதாவது 103 m ஆகும்.
பருப்பொருளானது அத்தகைய சிறு பொருட்களாக பிரிக்கப்பட்டால்
இயந்திரவியல், மின்னியல், ஒளியியல், காந்தவியல் மற்றும் பிற பண்புகள் மாறுபடுகிறது.
நானோதொழில்நுட்பம்
(Nanotechnology)
நானோ தொழிநுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட
பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கிய
தொழில்நுட்பம் ஆகும்.
நானோதுகள்கள்
(Nanoparticles)
திண்மங்கள் துகள்களால் ஆனது. ஒவ்வொரு துகளும்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டுள்ளது. மேலும் இது பொருளுக்கு பொருள்
மாறுபடலாம். ஒரு திண்மத்தின் துகளானது 100 nm ஐ விட சிறிய அளவாக இருந்தால் அது நானோ
திண்மம் (Nano solid)' எனப்படுகிறது. துகளின் அளவு 100 nm ஐ விட அதிகமெனில் அது ஒரு
'பேரளவு திண்மம் (Bulk solid) ஆகும். நானோ மற்றும் பேரளவு திண்மங்கள் ஒரே வேதியியல்
கலவையால் ஆனவையாக இருக்கலாம் என்பது கவனிக்க வேண்டியதாகும். எடுத்துக்காட்டாக, ZnO
ஆனது பேரளவு மற்றும் நானோ ஆகிய இரு வடிவிலும் இருக்கலாம். ஒரே வேதியியல் கலவையாக இருப்பினும்
பேரளவு வடிவத்தை ஒப்பிட நானோ வடிவம் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.
நானோ அளவிலான பரிமாணங்களில் (குறைக்கப்பட்ட
பரிமாணங்கள்) நானோ பண்புகளை இரு முக்கிய நிகழ்வுகள் கட்டுப்படுத்துகின்றன. அவை குவாண்டம்
வரையறை விளைவுகள் (quantum confinement effects) மற்றும் மேற்பரப்பு விளைவுகள்
(surface effects) ஆகும். மாணவர்கள் இந்த விளைவுகளை உயர்கல்வியில் ஆராயலாம் மற்றும்
அதன் விளக்கம் பள்ளிக்கல்வி அளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
நானோ தொழில்நுட்பத்தின் பல்துறை இயல்பு
நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பல்வேறு
துறைகளில் பயன்பாடுகளைக் கொண்ட பல்துறை இயல்புடையதாகும்.
இயற்கையில் உள்ள நானோ
நானோ அளவிலான வடிவங்கள் அறிவியல் அறிஞர்கள்
அவற்றை ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு வெகு காலம். முன்பே இயற்கையில்
அமைந்துள்ளன.
சில எடுத்துக்காட்டுகள்
ஓரிழை DNA
ஈரிழை DNA
ஆய்வுக்கூடங்களில் பின்பற்றுவது பொருள்கள்
செய்யப்பட்ட நானோ துகள்களின் அளவை மாற்றி பொருள் அமைப்பதன் மூலம் நிறங்களைக் கையாளுதல்
பொருள்
DNA இன் ஓரிழை ஒன்று அனைத்து உயிரினங்களின்
அடிப்படைக் கட்டமைப்பாக உள்ளது. ஏறத்தாழ மூன்று நானோமீட்டர்கள் அகலம் கொண்டது
பொருள்
மார்ஃபோ பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் உள்ள செதில்கள் நானோ அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை ஒளி அலைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரியும் வழியை மாற்றி இறக்கைகளுக்கு உலோக நீல நிறத்தையும் பச்சை சாயல்களையும் அளிக்கின்றன.
பொருள்
மயில் இறகுகள் சில பத்து நானோ மீட்டர் தடிமன்
கொண்ட 2 பரிமாண ஒளிப்படிக அமைப்புகளுடன் ஒளி இடைவினை புரிவதால் அவற்றின் மாறுபட்ட நிறங்களைப்
பெறுகின்றன.
ஆய்வுக்கூடங்களில்
பின்பற்றுவது
மயில் இறகுகள் போன்று பல்வேறு நிறங்களில் ஒளிர நானோ கட்டமைப்புகள் ஆய்வுக்
கூடங்களில் உருவாக்கப்படுகின்றன.
பொருள்
கிளி மீன் நாள்முழுதும் பவளப் பாறைகளை கடித்து
நொறுக்கி கொண்டிருக்கும். கிளி மீனின் சக்தி வாய்ந்த கடிக்கு காரணம் ஒன்றுடன் ஒன்று
பின்னப்பட்ட நானோ அமைப்பான நார்கள் ஆகும். புளுரோபடைட் என்ற கனிமத்தின் படிகங்கள் ஒன்றுடன்
ஒன்று சங்கிலித்தொடராக பின்னப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு கிளி மீனின் பற்களுக்கு அற்புதமான
நிலைப்புத்திறனை அளிக்கிறது.
ஆய்வுக்
கூடங்களில் பின்பற்றுவது
இயற்கை அமைப்பு தொடர்ந்து இயங்கி தேய்மானம்
மற்றும் தொடர்பு தகைவுக்கு உட்படும் மின்னணுவியலில் மற்றும் பிற கருவிகளில் உள்ள இயந்திரவியல்
பாகங்களுக்கு உதவும் வகையில் மிகவும் நிலைப்புத்திறன் கொண்ட செயற்கை பொருட்களை உருவாக்க
அடித்தளமாக உள்ளது.
பொருள்
தாமரை இலை மேற்பரப்பு வரிக்கண்ணோட்ட எலக்ட்ரான்
நுண்ணோக்கி (SEM) தாமரை இலையின் மேற்பரப்பில் உள்ள நானோ அமைப்பைக் காட்டுகிறது. இதுவே
தாமரை இழையின் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் செயல்பாட்டிற்கு காரணமாகும்.
ஆய்வுக்
கூடங்களில் பின்பற்றுவது
நீரை எதிர்க்கும் நானோ வர்ணங்கள் உருவாக்கப்படுகின்றன.
அத்தகைய நானோ வர்ணங்கள் பூசப்பட்டால் நிலைப்புத்திறன், கறை மற்றும் தூசிகளுக்கு எதிரான
பாதுகாப்பு அளிக்கின்றன. மேலும் இந்த நானோ வர்ணங்கள் கப்பல்களில் பூசப்பட்டால் எரிபொருளின்
பயனுறுதிறன் அதிகரிக்கிறது.
ஆரம்பகால தொடக்கம் மற்றும் வளர்ச்சி (தேர்வுக்கு உரியதன்று)
2016
ஜியான் பியேர் சவாஜ், ஃப்ரேசர் ஸ்டாடர்ட் மற்றும்
பெர்னார்டு பெரிங்கா ஆகியோர் நானோ கார் உள்ளிட்ட நானோ அளவிலான இயந்திரங்களை மேம்படுத்தும்
ஆராய்ச்சிக்காக வேதியியலில் நோபல் பரிசு பெற்றனர்.
2004
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 2004இல் ஆண்டரி
கைம் மற்றும் கான்ஸ்டன்டின் நவோஸ்லெவ் ஆகியோரால் 2D பொருள் தனிமைப்படுத்தி வகைப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வுப் பணி 2010இல் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றது.
1990-2000
நானோ தொடர்பான ஆராய்ச்சியை வழி நடத்த ஆராய்ச்சிக்
குழுக்கள் மற்றும் செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்
பயனாளர் பொருள்கள் சந்தையில் வரத்தொடங்கின.
1981
கெர்டு பின்னிங்(Gred Binning) மற்றும் ஹைன்ரிக்
ரோரர்(Heinrich Rohrer) வரிக்கண்ணோட்ட துளைக்கும் நுண்ணோக்கியை (Scaning
Tunnelling Microscope-STM) மேம்படுத்தியது நவீன நானோ தொழில்நுட்பத்தின் தொடக்கமாகும்.
ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக பொருள்களின் மேற்பரப்பில் உள்ள அணுக்களைப் பார்க்க
STM உதவியது முதல் நானோ தொழில்நுட்பம் அதன் படிப்படியான வளர்ச்சியைத் தொடங்கியது.
1989
IBM இன் அல்மேடன் ஆராய்ச்சி மையத்தில் டான்
இக்ளர் மற்றும் எர்ஹார்டு ஸ்வைசர் IBM சின்னத்தை உச்சரிக்க 35 தனியான செனான்
(Xenon) அணுக்களைக் கையாண்டனர். இந்த அணுக்களைத் துல்லியமாகக் கையாளும் திறனை காட்சிப்படுத்தியதன்
மூலம் நானோ தொழில் நுட்பத்தின் அவசியம், பயன்பாடு உலகுக்கு தெரிந்தது.
1974
மிது துல்லிய இயந்திரங்களை மேம்படுத்தும் பணியின்
போது பேராசிரியர் நோரியோ டனிகுச்சி (Norio Taniguchi) COTIT தொழில்நுட்பம் என்ற வார்த்தையை
உருவாக்கினார்.
1959
இந்த நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம்
ஆகிய சொற்களை உருவாக்குவதற்கு வெகுகாலம் முன்பே 1959 இல் ரிச்சர்டு ஃபைன்மேன் என்ற
அமெரிக்க இயற்பியலாளர் அவரது அடிமட்டத்திலேயே இன்னும் நிறைய அறைகள் உள்ளன என்ற உரையில்
அவற்றை வரையறை செய்யும் கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். ஃபைன்மேன் அவரது உரையில் எதிர்காலத்தில்
அறிவியல் அறிஞர்கள் ஒவ்வொரு அணுவையும், ஒவ்வொரு மூலக்கூறையும் எவ்வாறு தனித்தனியாக
கையாளவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது போன்ற செயல்முறைகளை விவரித்தார்.
ஆய்வுக்கூடங்களில் நானோ
ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட நானோ அமைப்புகள்
இயற்கையின் அற்புதமான நானோ அமைப்புகளைப் பின்பற்றி அமைந்துள்ளன. நானோ அமைப்புகள் மிகவும்
சிறியதாக உள்ளதால் இந்த அளவிலான பொருள்களை உற்பத்தி செய்ய சிறப்பு முறைகள் தேவைப்படுகின்றன.
நானோ பொருள்களை தயாரிக்க இரு வழிகள் உள்ளன. மேலிருந்து கீழ் மற்றும் கீழிருந்து மேல்
அணுகுமுறைகள்.
நானோ
துகள்கள் உருவாக்கம்
மேலிருந்து-
கீழ் அணுகுமுறை
பேரளவு திண்மங்களை நானோ அளவுக்கு உடைப்பதன்
மூலம் நானோ பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பந்துகளால் அரைத்தல்
(Ball milling), கூழாக்கும் முறை (sol-gel), கல் அச்சு (Lithogrophy)
கீழிருந்து
மேல் அணுமுறை
நானோ பொருள்கள் அணுக்கள்/ மூலக்கூறுகளை ஒன்றாக
கூட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அணுக்கள் அமைப்பை உருவாக்குமாறு
ஒன்று சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பிளாஸ்மா பொறித்தல் (Plasma etching) மற்றும்
வேதி நீராவி - படிவு (chemical vapour deposition) -
நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
பல்வேறு துறைகளில் நானோ அடிப்படையிலான பொருள்களின்
பயன்பாடுகள்
வாகன
தொழிற்சாலை
• குறைந்த எடை கட்டமைப்பு
• வர்ணப்பூச்சு (நிரப்பிகள், அடித்தளப்பூச்சு,
தெளிவான பூச்சு)
• வினையூக்கிகள்
• டயர்கள் (நிரப்பிகள்)
• உணர்விகள்
• கார் கண்ணாடி மற்றும் கூண்டிற்கான பூச்சுகள்
வேதித்
தொழிற்சாலை
• வர்ணப்பூச்சு அமைப்பின் நிரப்பிகள்
• நானோ கூட்டுப்பொருள்களால் ஆன பூச்சு அமைப்புகள்
• காகிதங்களை செறிவூட்டல்
• மாற்றக்கூடிய பசைகள்
• காந்தப் பாய்மங்கள்
பொறியியல்
• கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கான தேய்மானப் பாதுகாப்பு (தடுப்பு எதிர்ப்பு பூச்சுகள், நெகிழிப் பாகங்களில் கீரல் எதிர்ப்பு பூச்சுகள் ஆகியன)
• உயவு எண்ணெய் இல்லா பேரிங்குகள்
மின்னணுவியல்
தொழிற்சாலை
• தரவு நினைவகம்
• காட்சிப்படுத்திகள் (Displays)
• லேசர் டையோடுகள்
• கண்ணாடி இழைகள்
• ஒளியியல் சுவிட்சுகள்
• வடிப்பான்கள் (IR தடுத்தல்) கடத்தக்கூடிய
நிலைமின் எதிர்ப்புப் பூச்சுகள்
கட்டுமானம்
.
• கட்டுமானப் பொருள்கள் .
• வெப்பக் காப்பு
• தீத் தடுப்பான்கள்
• மரம், தரைகள், கல், கட்டிட முகப்புகள், ஓடுகள்,
கூரை ஓடுகள் ஆகியவற்றின் மேற்பரப்பு சார்ந்த கட்டுமானப் பொருட்கள்
• கட்டிட முகப்பு பூச்சுகள்
• பள்ளம் நிரப்பும் கலவை
மருத்துவம்
• மருந்து விநியோக அமைப்புகள்
• செயல்படும் காரணிகள்
• மாறுபட்ட ஊடகம்
• மருத்துவ விரைவுச்
• சோதனைகள் செயற்கை உறுப்புகள் பொருத்துதல்
• நுண்ணுயிர் எதிர்ப்பு பொருள்கள் மற்றும்
பூச்சுகள்
• புற்றுநோய் சிகிச்சை பொருள்கள்
ஜவுளி
/ துணிகள்/ (நெய்யப்படாதது)
• மேற்பரப்பு- பதப்படுத்தப்பட்ட ஜவுளிகள்
.
• ஸ்மார்ட் ஆடைகள்
ஆற்றல்
• எரிபொருள் கலன்கள்
• சூரிய மின் கலன்கள்
• மின்கல அடுக்குகள்
• மின்தேக்கிகள்
அழகு
சாதனப் பொருட்கள்
• சூரிய ஒளிப் பாதுகாப்பு
• உதட்டுச் சாயங்கள்
• தோல் பூச்சுகள்
• பற்பசை
உணவு
மற்றும் பானங்கள்
• தொகுப்புப் பொருள்கள் .
• சேமிப்பு வாழ் உணர்விகள்
• கூட்டுப்பொருள்கள்
• பழ ரசங்களை தெளிவுபடுத்துதல்
வீட்டு
உபயோகம்
• இரும்புக்கான பீங்கான் பூச்சுகள்
• வாசனையூட்டிகள்
• கண்ணாடி , பீங்கான், தரை, சன்னல்கள் அகியவற்றிற்கான
சுத்தப்படுத்தி
விளையாட்டு/
வெளிப்புறம்
• ஸ்கி மெழுகு .
• கண்ணாடிகள்/ நீச்சல் கண்ணாடிகளின் பனித்தடுப்புகள்
• கப்பல்கள்/படகுகளுக்கான சிதிலத்தடுப்பான்
பூச்சுகள்
• வலுப்படுத்தப்பட்ட டென்னிஸ் மட்டைகள் மற்றும்
பந்துகள்
நானோ துகள்களின் சாத்தியமான தீங்குவிளைவிக்கும் விளைவுகள்
நானோ தொழில்நுட்பம் பயன்பாட்டின் தீங்கு விளைவிக்கும்
விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சியும் சம அளவான முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் அது வேகமாகவும்
வளர்ந்துவரும் ஆராய்ச்சி துறையாகும். இங்கு முக்கிய பிரச்சனை என்னவென்றால் நானோ துகள்கள்
புரோட்டீன் போன்ற உயிரி மூலக்கூறுகளுக்கு சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளன. அவை உயரினங்களின்
மேற்பரப்பினுள் எளிதாக உறிஞ்சப்படலாம் அல்லது உடலின் திசுக்கள் மற்றும் நீர்மங்களில்
நுழையக்கூடும்.
உறிஞ்சப்படும் தன்மை நானோ துகளின் மேற்பரப்பைச்
சார்ந்தது. உடலில் உள்ள குறிப்பிட்ட செல், மருந்தை நேரடியாக உறிஞ்சும் வகையில் நானோ
துகளின் மேற்பரப்பை வடிவமைக்க இயலும்.
உயிர்வாழ் அமைப்புகளுடன் ஏற்படும் இடைவினையையும்
நானோ துகள்களின் பரிமாணங்கள் பாதிக்கின்றன. உதாரணமாக, சில நானோ மீட்டர் அளவுள்ள நானோதுகள்கள்
உயிரி மூலக்கூறுகளுக்கு உள்ளே நன்கு சென்றடைகின்றன, ஆனால் பெரிய நானோதுகள்களால் இது
இயலாது. நானோ துகள்கள் செல் சவ்வுகளையும் கடக்கும். உள்ளிழுக்கப்பட்ட நானோ துகள்கள்
இரத்தத்தை அடைய இயலும். மேலும் இவை ஈரல், இதயம் அல்லது இரத்த செல்கள் ஆகிய உறுப்புகளையும்
அடையும் வாய்ப்பு உள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் பல்வேறுபட்ட அளவு, வடிவம்,
வேதி அமைப்பு மற்றும் மேற்பரப்பு பண்புகள் கொண்ட நானோதுகள்களை உயிரின உறுப்புகளில்
செலுத்தும் போது அதன் எதிர்செயலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர்.