Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பாடச்சுருக்கம், கருத்து வரைபடம்

இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் - பாடச்சுருக்கம், கருத்து வரைபடம் | 12th Physics : UNIT 11 : Recent Developments in Physics

   Posted On :  29.09.2023 11:32 pm

12 வது இயற்பியல் :அலகு 11 : இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்

பாடச்சுருக்கம், கருத்து வரைபடம்

இயற்பியல்: இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் : பாடச்சுருக்கம், கருத்து வரைபடம்

பாடச்சுருக்கம்

* முக்கிய இயற்பியல் கொள்கைகள் (மேல்நிலை வகுப்பு இயற்பியலில் உள்ளவை) தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன.

* இயற்பியல் என்பது அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு அடிப்படைக் கட்டுமானத் தொகுதியாக உள்ளது. நானோ அறிவியல் என்பது 1-10onm பொதுவான அளவுள்ள பொருள்களின் அறிவியல்.

* நானோ என்பது ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி ஆகும். அதாவது 10-em.

* நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக் கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கிய தொழில்நுட்பம் ஆகும்.

* ஒரு திண்மத்தின், துகளின் அளவு 100 m க்கு குறைவாக இருந்தால் அது நானோ ‘திண்மம் எனப்படும்’

* துகளின் அளவு 100 m க்கு அதிகமானால் அது பேரளவு திண்மத்தை உருவாக்கிறது.

* பொருளின் நானோ வடிவம் அதன் பேரளவு வடிவத்துடன் ஒப்பிட மிகவும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.

* குவாண்டம் வரையறை விளைவுகள் மற்றும் மேற்பரப்பு விளைவுகள் ஆகியவை நானோ பண்புகளைக் கட்டுப்படுத்தும் இரு முக்கிய நிகழ்வுகள்

* நானோ அறிவியல் மற்றம் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பயன்பாடுகளைக் கொண்ட பல்துறை இயல்புடையதாகும்.

* நானோ அளவிலான வடிவங்கள் அறிவியல் அறிஞர்கள் அவற்றை ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்யத் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே இயற்கையில் அமைந்துள்ளன.

*  மேலிருந்து கீழ் மற்றும் கீழிருந்து - மேல் என்ற அணுகுமுறைகள் நானோ பொருள்களை தயாரிப்பதற்கான இரு வழிகள் ஆகும்.

* நானோ தொழில்நுட்ப பயன்பாடுகள் பல்வேறு துறைகளில் உள்ளன. * நானோ பயன்பாட்டின் முக்கிய பிரச்சனை என்னவென்றால் நாளோ துகள்கள் புரோட்டீன் போன்ற உயிரி மூலக்கூறுகளுக்கு சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளன.

* நானோ துகள்கள் உயிரினங்களின் மேற்பரப்பினுள் எளிதாக உறிஞ்சப்படுகிறது மற்றும் அவை உடலின் திசுக்கள் மற்றும் நீர்மங்களில் நுழையக்கூடும்.

* உறிஞ்சப்படும் தன்மை நானோ துகளின் மேற்பரப்பைச் சார்ந்தது.

* உடலின் எந்த ஒரு குறிப்பிட்ட செல்லிற்கும் நானோ துகளின் மேற்பரப்பை அது குறிப்பிட்ட இலக்கு செல்லின் உறிஞ்சப்படும் வகையில் வடிவமைப்பதன் மூலம் மருந்தை நேரடியாக செலுத்த இயலும்.

* சில நானோ மீட்டர் அளவுள்ள நானோ துகள்கள் உயிரி மூலக்கூறுகளுக்கு உள்ளே நன்கு சென்றடைகின்றன. ஆனால் பெரிய நானோ துகள்களால் இது இயலாது. நானோதுகள்கள் செல் சவ்வுகளையும் கடக்கும்

* உள்ளிழுக்கப்பட்ட நானோ துகள்கள் இரத்தத்தைத் அடைகிறது. மேலும் அது பிற இடங்களான ஈரல், இதயம் அல்லது இரத்த செல்களையும் அடையலாம்.

* எந்திரனியல் என்பது இயந்திர பொறியியல், மின்னணுப்பொறியியல், கணினி பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கற்றல் ஆகும்.

* எந்திர மனிதன் என்பது மின் சுற்றினால் வடிவமைக்கப்பட்ட மற்றும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய திட்டமிடப்பட்ட ஒரு எந்திர கருவியாகும்.

* எந்திரனியல் அமைப்பானது முக்கியமாக உணர்விகள், திறன் வழங்கிகள் கட்டுப்பாட்டு அமைப்புகள், கையாளும் கருவிகள் மற்றும் தேவையான மென்பொருளைக் கொண்டுள்ளது.

* ஒரு ரோபோவின் முக்கிய கூறுகள் திறன் மாற்றும் அலகு, இயக்கிகள், மின் மோட்டார்கள், காற்றழுத்த தசைகள், தசைக்கம்பிகள், பீசோ மோட்டார்கள் மற்றும் மீயொலி மோட்டார்கள், உணர்விகள் மற்றும் ரோபோ இடம் பெயரும் அமைப்பு ஆகும்.

* தொழிற்சாலை ரோபோக்களின் ஆறு முக்கிய வகைகள், கார்ட்டீசியன், SCARA, உருளைவடிவம், டெல்டா, துருவ வகை மற்றும் செங்குத்தாக கருதப்படுபவை ஆகும்.

* ஆறு- அச்சு ரோபோக்கள் மின்வில் பற்றவைப்பு குறிப்பிட்ட இட பற்றவைப்பு, பொருள்களைக் கையாளுதல், இயந்திரப்பராமரிப்பு ஆகியவற்றக்கு ஏற்றது.

* எந்திரனியலின் ஐந்து பெரும்பகுதிகள்: மனித ரோபோ இடைவினை, இயங்கும் தன்மை, கையாளுதல், திட்டமிடுதல் மற்றும் உணர்விகள்

* செயற்கை நுண்ணறிவின் நோக்கம் மனிதனைப் போன்ற பண்புகளை ரோபோக்களில் கொண்டுவருவது ஆகும்

* செயற்கை நுண்ணறிவின் பணிகள் முகம் அடையாளம் காணல், கணினி விளையாட்டில் விளையாடுபவரின் செயல்பாடுகளுக்கு பதில் அளித்தல், முந்தைய செயல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல், போக்குவரத்து நெரிசலை பகுப்பாய்வு செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒரு மொழியிலிருந்து மற்றொன்றிற்கு வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்தல்.

* ரோபோக்கள் தயாரிக்க பயன்படும் பொருள்கள் அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவை பொதுவாக அதிகம் பயன்படுபவை

* அலுமினியம் மென்மையான உலோகம், எனவே அதைக் கொண்டு எளிதாக உருவாக்கலாம்

* எஃகு பல மடங்கு வலிமையானது.

* உலோகத்தின் உள்ளார்ந்த வலிமையின் காரணமாக ரோபோ உடல் பகுதிகள் தகடு , கம்பி, வாய்க்கால் வடிவ கம்பி மற்றும் பிற வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ரோபோக்கள் பல பயன்பாடுகளில் நன்மைகளை கொண்டுள்ளன. ஆனால் பல தீமைகளும் உள்ளன.

* விண்வெளியின் வெளிப்பகுதியில் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய, செவ்வாயில் பாறையின் கனிமங்கள் மற்றும் மண் வகைகள் ஆய்வு செய்தல், பாறைகளிலும் மற்றும் மண் வகைகளிலும் உள்ள தனிமங்களை பகுப்பாய்வு செய்யவும் ரோபோக்கள் பயன்படுகின்றன.

* வீட்டு உபயோக ரோபோக்கள், வெற்றிட சுத்தமாக்கிகள், தரை சுத்தமாக்கிகள், கழிவுநீர் வாய்க்கால் சுத்தமாக்கிகள், புல்தரை பராமரித்தல், நீச்சல் குள சுத்திகரிப்பு மற்றும் கதவுகளைத் திறந்து மூடவும் பயன்படுகின்றன.

* தொழிற்சாலை ரோபோக்கள், பற்றவைத்தல், வெட்டுதல், ரோபோ நீர் ஜெட்மூலம் வெட்டுதல், ரோபோ லேசர் வழி வெட்டுதல், தூக்குதல், பிரித்தல், வளைத்தல், உற்பத்தி , இணைத்தல், போக்குவரத்து அணுக்கழிவு போன்ற அபாயகரமான பொருட்களைக் கையாளுதல், போர்க்கருவிகள், ஆய்வுக்கூட ஆராய்ச்சி, நுகர்வோர் மற்றும் தொழிற்சாலை பொருள்களை பெரும் அளவில் உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் பயன்படுகின்றன.

* நானோ ரோபோக்கள், இரத்த ஓட்டத்தில் சிறிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும், பாக்டீரியாவுக்கு எதிராக போராடுதல், உடலில் உள்ள தனிப்பட்ட செல்லை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

* மருத்துவ துறையின் வளர்ச்சி இயற்பியலின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளது.

* சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பமானது, மெய்நிகர் உண்மை , துல்லிய மருத்துவம் சுகாதார அணிகலன்கள், செயற்கை உறுப்புகள், முப்பரிமாண (3D) அச்சு , கம்பியில்லா மூளை உணர்விகள், இயந்திர மனித அறுவை சிகிச்சை மீத்திறன் உள் இழுப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

* துகள் இயற்பியல் இயற்கையின் அடிப்படைத் துகள்களைப் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறது. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் குவார்க்குகளால் ஆனது.

* பிரபஞ்சவியல் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை உள்ளடக்கிய துறையாகும்.

* முடுக்கப்பட்ட சாதாரண நிறைகள் வலிமை குறைந்த ஈர்ப்பு அலைகளை உமிழ்கிறது.

* கருந்துளைகள் அதிக வலிமையுள்ள ஈர்ப்பு அலைகளை வெளியிடுகிறது.


Tags : Recent Developments in Physics இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் .
12th Physics : UNIT 11 : Recent Developments in Physics : Summary, Concept Map Recent Developments in Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 11 : இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் : பாடச்சுருக்கம், கருத்து வரைபடம் - இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 11 : இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்