பொருளாதாரம் - பெருக்கி | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions
பெருக்கி (Multiplier)
பெருக்கிக் கோட்பாட்டை முதலில் எப்.ஏ.கான் வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கினார். ஜே.எம்.கீன்ஸ் இதனை வருமானம் அல்லது முதலீட்டுப் பெருக்கியாக மாற்றி அமைத்தார்.
தேசிய வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி என்று வரையறுக்கலாம். AI என்பது முதலீட்டில் அதிகரிப்பையும், மற்றும் AY என்பது வருமானத்தில் அதிகரிப்பையும் குறிக்கின்றது, எனவே பெருக்கி K = ΔY/ΔI. என உள்ளது. முதலீடு மாற்றத்தினால் வருமானம் மாறுவதால் பெருக்கியை முதலீட்டு பெருக்கி என அழைக்கப்படுகிறது.
1. பெருக்கியின் எடுகோள்கள்
கீன்ஸின் பெருக்கியின் கோட்பாடு சில எடுக்கோள்களின் அடிப்படையில் செயல்படுகிறது. அவை:
1) தன்னிச்சையான முதலீட்டில் மாற்றம் உண்டு.
2) தூண்டப்பட்ட முதலீடு இல்லை.
3) இறுதிநிலை நுகர்வு நாட்டம் நிலையாக இருக்கும்.
4) நுகர்வு நடப்பு வருமானத்தைச் சார்ந்தே அமையும்.
5) பெருக்கியின் செயல்பாட்டில் இடைவெளி இல்லை.
6) உறுதித் தேவைகேற்ப நுகர்வு பொருள்கள் கிடைக்கும்.
7) நாடு மூடிய பொருளாதாரமாகும், அந்நிய நாட்டின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது.
8) விலையில் மாற்றம் இல்லை.
9) முழு நிலை வேலைவாய்ப்பு நிலைக்கு கீழ் பொருளாதாரம் செயல்படுகிறது.
2. இறுதிநிலை நுகர்வு நாட்டமும் பெருக்கியும்
இறுதிநிலை நுகர்வு நாட்டம் என்பது வருமானத்தில் நுகர்வுக்காக செலவிடும் பங்கைக் குaறிப்பதாகும். இறுதிநிலை நுகர்வு நாட்டம் வருவாய் (Y) மாற்றத்திற்கும், நுகர்வு (C) மாற்றத்திற்கிடையேயான தொடர்பினைக் குறிப்பிடுகிறது.
குறியீடாக (MPC = ∆C/∆Y)
பெருக்கியின் மதிப்பு MPC யைப் பொறுத்து அமையும் பெருக்கி
(K) = 1/1 - MPC)
ஒன்றிலிருந்து இறுதிநிலை நுகர்வு நாட்ட மதிப்பைக்கழித்து பெறப்படும் மதிப்பின் தலைகீழ் விகிதமே பெருக்கி ஆகும். இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தின் மதிப்பு 1 - MPC. (MPC+MPS = 1) என்பதால் பெருக்கியின் மதிப்பு 1 / MPS ஆகும். எனவே பெருக்கி என்பது MPS இன் தலைகீழ் விகிதம் ஆகும். பெருக்கி MPS க்கு தலைகீழ் விகிதத்திலும் MPCக்கு நேர்விகிதத்திலும் தொடர்புடையது.
எண் வடிவில் MPCயின் மதிப்பு 0.75 என்றால் MPS இன் மதிப்பு 0.25 ஆகவும் K மதிப்பு 4 ஆகவும் இருக்கும்.
சூத்திரத்தைப் பயன்படுத்தி K =1 / 1 - MPC
k 1/1 - 0.75 = 1/0.25 = 4
அட்டவணை 4.
கீழ்காணும் மதிப்புகளைக் கொண்டு பெருக்கி செயல்படும் விதத்தை விளக்கப்படுகின்றது.
C = 100 + 0.8 y; I = 100 I = 10
Y = C + I
= 100 + 0.8y + 100
0.2y = 200;
Y = 1000
இங்கு C = 100 + 0.8y = 100 + 0.8 (1000)
= 900;
S = 100 = I
முதலீடு 10 அதிகரித்தால், I = 110,
Y = 100 + 0.8y + 110
0.2y = 210
Y = 210 / 0.2 = 1050
இங்கு C = 100 = 0.8 (1050) = 940; S = 110 = I
வரைபட விளக்கம்
45 கோடு y = C + S
இது இரண்டு அச்சுக்களுக்கும் இணையாகச் செல்வதைக் குறிக்கிறது. இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 என அனுமானிக்கப்படுகிறது (C = 100 + 0.8y)
ஒட்டுமொத்த தேவை (C + I) தேவைக் கோடு 45° கோட்டை B என்ற புள்ளியில் வெட்டிச் செல்கிறது.
Y = 500 ஆக இருக்கும்போது C = 100 + 0.8 y
= 100 + 0.8 (500)
= 100 + 400 = 500 (புள்ளி A)
I = 100 ஆக இருக்கும்போது
Y = 1000, C = 900;
S = 100 = I
புதிய ஒட்டுமொத்த தேவை கோடு,
C + I = 100 + 0.8Y + 100 + 10
Y = 210 / 0.2 = 1050
C = 940; S = 110 = I
3. பெருக்கி செயல்படும் விதம்
அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலி, இதர பொருட்கள் வாங்குவதற்காக செலவிடகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடி உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும். இங்கு இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியை சேமிக்கவும் செய்வர். இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8. எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில் நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
∆Y = 100 + 100 × 4/5 + 100 × [4/5]2 + 100 × [4/5]3
அல்லது,
∆Y = 100 + 100 × 0.8 + 100 × (0.8)2 + 100
X (0.8)3
= 100 + 80 + 64 + 51.2..
= 500
அதாவது 100 × 1/1 - 4/5
100 × 1/1/5
100 × 5 = ₹ 500 கோடிகள்
உதாரணமாக C = 100 + 0.8Y, I = 100,
என்றால் Y = 100 + 0.8Y + 100
0.2Y = 200
Y = 200 / 0.2 = 1000 → புள்ளி B I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால்
0.2Y = 210
Y = 210/0.2 = 1050→ புள்ளி D
I, ₹10 அதிகரித்தால், Y ₹ 50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100 + 0.8 (500) = 500; S=0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = 1/0.2 = 5
4. பெருக்கியின் வகைகள்
இயங்கா மற்றும் இயங்கும் பெருக்கி
i) இயங்கா பெருக்கி
இது உடன்நிகழ் (Simultaneous) பெருக்கி யெனவும், காலமில்லா பெருக்கி, தர்க்க ரீதி பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதலீடு மாற்றமும் வருமான மாற்றமும் உடன் நிகழ்பவை. காலதாமதம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. பொருளாதாரம் ஒரு சமநிலையில் இருந்து மறுசமநிலை வருமானத்திற்குப் போகும் போது MPC மாறாது என கருதப்படுகிறது.
ii) இயங்கும் பெருக்கி
இது தொடர் நிகழ் (SEQUENCE) பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது. உண்மையில் முதலீடு செய்த உடனே வருவாய் கூடிவிடுவதில்லை . ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் பணம் செல்ல காலதாமதம் ஆகலாம். வருமானம் கூடுவதற்கும் நுகர்வு கூடுவதற்கும் இடையில் கால இடைவெளி இருக்கலாம். அந்தக் கால இடைவெளியையும் கருத்தில் கொள்கிறது இயங்கும் பெருக்கி
5. பெருக்கியின் கசிவுகள் (LEAKAGES)
பெருக்கியின் எடுகோளானது அதிகரித்த வருமானத்தின் ஒரு பகுதி நுகர்விற்காக செலவிடப்படுகின்றது என்பதே. ஆனால் நடைமுறையில் மக்கள் அதிகரித்த வருமானத்தை வேறு ஒரு பொருட்களின் மீதும் செலவு செய்வார்கள். இவ்வகைச் செலவுகளே கசிவுகள் எனப்படும்.
பழைய கடன்களை திரும்ப செலுத்துதல்
பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக அதிகரித்த வருமானம் பயன்படுமானால், MPC குறைந்து அதன் காரணமாக பெருக்கியின் மதிப்பு தடைப்படும்.
செல்வத்தை வாங்குதல்
அதிகரித்த வருமானம் நடைமுறையில் உள்ள செல்வங்களாக நிலம், கட்டிடம் மற்றும் பங்குகளை வாங்குவதற்காக பயன்படுத்தினால் பணம் மக்களிடையே சுழன்றுக் கொண்டு இருக்கும். நுகர்வுக்குள் வராது. இதன் விளைவாக பெருக்கியின் மதிப்பு பாதிக்கும்.
பண்டங்களையும், பணிகளையும் இறக்குமதி செய்தல்
இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும், பணிகளுக்காகவும் வருமானத்தை செலவு செய்தால் நாட்டை விட்டு பணம் வெளியேறும். இது நாட்டின் குறிப்பிட்ட அளவு வருவாய் ஓட்டத்தில் திரும்பி வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆதலால் இறக்குமதி பெருக்கியின் மதிப்பை குறைக்கும்.
நுகர்வு பொருட்களின் கிடைக்காமை
பெருக்கி கோட்பாடு தேவை ஏற்பட்டவுடன் நுகர்வதற்கு பொருட்கள் அளிக்கப்படுவதாக அனுமானம் கொண்டுள்ளது. சில நேரங்களில் கால இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளியில் தேவைக்கேற்ப அளிப்பு இருக்காது. அதனால் பணவீக்கம் ஏற்படும். இது நுகர்வுச் செலவையையும், பெருக்கியின் மதிப்பையையும் குறைத்துவிடும்.
முழு வேலை வேலை வாய்ப்பு நிலை
முழு வேலை வாய்ப்பு நிலையில், பெரும்பாலும் எல்லா வளங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆதலால் அதிகரிக்கின்ற வருமானம் பணவீக்கத்திற்கு வழி வகுத்து உண்மை வருமானம் ஏற்படாமல் செய்து விடும்.
6. பெருக்கியின் பயன்கள்
1. வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு கோட்பாட்டில் முதலீட்டின் முக்கியத்துவத்தை பெருக்கி சுட்டிக் காட்டுகிறது.
2. வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது.
3. சேமிப்பு (S) மற்றும் முதலீடு (I) இடையே சமநிலை ஏற்பட உதவுகிறது.
4. அரசாங்க கொள்கைகளை வழிவகுக்க உதவி புரிகிறது.
5. வேலையில்லா நிலையை போக்கவும், முழு வேலைவாய்ப்பு நிலையை அடையவும் உதவுகின்றது.
பெருக்கியின் வகைகள்
1. வரி பெருக்கி
2. வேலைவாய்ப்பு பெருக்கி
3. வெளிநாட்டு வர்த்தக பெருக்கி
4. முதலீடு பெருக்கி