Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | மிகைப் பெருக்கி (K மற்றும் β ஐ இணைத்து)

பொருளாதாரம் - மிகைப் பெருக்கி (K மற்றும் β ஐ இணைத்து) | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions

   Posted On :  15.03.2022 04:28 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

மிகைப் பெருக்கி (K மற்றும் β ஐ இணைத்து)

மிகைப் பெருக்கி எளிய பெருக்கியைவிட சிறந்ததாகும், ஏனெனில் எளிய பெருக்கி தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும்

மிகைப் பெருக்கி (K மற்றும் β ஐ இணைத்து)


மிகைப் பெருக்கி எளிய பெருக்கியைவிட சிறந்ததாகும், ஏனெனில் எளிய பெருக்கி தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும், ஆனால் மிகைப் பெருக்கி தன்னிச்சை முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகிய  இரண்டையும் கொண்டிருக்கும்.

ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய ஹிக்ஸ் K மற்றும் β ஐ இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார். மிகைப் பெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.



1. நெம்புகோல் இயக்க விளைவு

பெருக்கியின் தாக்கமும், முடுக்கியின் தாக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும் தாக்கம் நெம்புகோல் இயக்க விளைவு எனப்படும். இது பொருளாதாரத்தில் அதிகமான அல்லது குறைவான வருமானம் பெருக்குவதை கூறுகின்றது.

குறியீடாகக் கூறினால்

Y= C + IA + Ip

Y = மொத்த வருவாய் 

C = நுகர்வுச் செலவு 

IA = தன்னிச்சையான முதலீடு 

IP = தூண்டப்பட்ட தனியார் முதலீடு




தொகுப்புரை

மூன்று தலைப்புகளின் அடிப்படையில் நுகர்வு சார்பு மற்றும் முதலீடு சார்பின் பகுதிகளை தொகுக்கப்பட்டுள்ளது.

நுகர்வுச் சார்பானது தேசிய வருவாய் மற்றும் நுகர்வுச் செலவுக்கிடையேயான தொடர்பினை சராசரி நுகர்வு விருப்பு (APC), இறுதி நிலை நுகர்வு விருப்பு (MPC), சராசரி சேமிப்பு விருப்பு (APS) மற்றும் இறுதிநிலை சேமிப்பு விருப்பு (MPS) என்பதன் வாயிலாக எடுத்துரைக்கிறது. உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறக் காரணிகள் நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்றன.

முதலீடு சார்பு தன்னிச்சையான முதலீட்டையும், தூண்டப்பட்ட முதலீட்டையும் உள்ளடக்கியது. முதலீட்டுச் சார்பான முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் உள்ள சார்பு தொடர்பாகும். மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனும், வட்டி வீதமும் முதலீட்டைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

பெருக்கி இறுதி நிலை நுகர்வு விருப்பு (MPC) க்கு நேரடியாகவும் மற்றும் இறுதி நிலை சேமிப்பு விருப்பு (MPS) க்கு தலைகீழ் தொடர்பாகவும் உள்ளது. முடுக்கி கோட்பாடானது நுகர்வுச் செலவில் ஏற்படும் மாற்றம் முதலீட்டின் அளவை எவ்வளவு மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. பெருக்கி, முடுக்கி ஒருங்கிணைப்பை மிகைப் பெருக்கி எனவும் கூறலாம்.




அருஞ்சொற்பொருள்



* நுகர்வுச் சார்பு : நுகர்வுக்கும் வருவாய்க்கும் உள்ள தொடர்பு

* தன்னிச்சையான நுகர்வு : அடிப்படையான தேவைகளை நிறைவேற்ற, வருமானம் இல்லாத நிலையிலும் மேற்கொள்ளப்படும் நுகர்வு வருமானத்தைச் சாரா நுகர்வு

* தன்னிச்சையான முதலீடு : வருமானத்தைச் சார்ந்திராத முதலீடு

* சராசரி நுகர்வு விருப்பு (APC) : நுகர்வுச் செலவை வருவாயால் வகுக்கச் கிடைப்பது (c/y)

* இறுதி நிலை நுகர்வு விருப்பு (MPC) : நுகர்வுச் செலவு மாற்றத்தை வருவாய் மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது (c/y).

* சராசரி சேமிப்பு விருப்பு (APS) : சேமிப்பை வருவாயால் வகுக்கக் கிடைப்பது ( s/y).

* இறுதிநிலை சேமிப்பு விருப்பு (MPS) : சேமிப்பு மாற்றத்தை வருவாய் மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது (s/y)

* உளவியல் காரணிகள் : அவரவர் மனநிலை தொடர்பான உணர்வுகள்.

* பாரபட்சமற்ற காரணிகள் : உளவியல் சார்ந்து அமையாமல் வெளியிலிருந்து ஏற்படுத்தப்படக்கூடிய மாற்றங்கள்

* வெளிக்காட்டும் விளைவு : மற்றவர்ளைப் பார்த்து மாறுகின்ற போக்கு

* தூண்டப்பட்ட முதலீடு : வருவாய் உயர்ந்ததால் உயருகின்ற முதலீடு

* பெருக்கி : வருமான மாற்றத்தை முதலீடு மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது (y/I)

* முடுக்கி : தூண்டுப்படுகின்ற முதலீடு மாற்றத்தை நுகர்வு மாற்றத்தால் வகுக்கக் கிடைப்பது

* மேம்பட்ட பெருக்கி : பெருக்கி மற்றும் முடுக்கியின் மொத்த விளைவு

Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions : Super Multiplier: (k and β interaction) Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் : மிகைப் பெருக்கி (K மற்றும் β ஐ இணைத்து) - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 4 : நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்