Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | உதுமானியப் பேரரசு (Ottomon Empire)

இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு - உதுமானியப் பேரரசு (Ottomon Empire) | 9th Social Science : History: The Middle Ages

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்

உதுமானியப் பேரரசு (Ottomon Empire)

ஆசியாவெங்கும் மங்கோலியர் முன்னேறிக் கொண்டிருந்தபோது உதுமானியத் துருக்கியர்கள் (செல்ஜுக் துருக்கியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்) தப்பியோடி மேற்கு ஆசியாவில் செல்ஜுக் துருக்கியர்களிடம் அடைக்கலம் அடைந்தனர்.

உதுமானியப் பேரரசு (Ottomon Empire)

ஆசியாவெங்கும் மங்கோலியர் முன்னேறிக் கொண்டிருந்தபோது உதுமானியத் துருக்கியர்கள் (செல்ஜுக் துருக்கியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்) தப்பியோடி மேற்கு ஆசியாவில் செல்ஜுக் துருக்கியர்களிடம் அடைக்கலம் அடைந்தனர். செல்ஜுக் துருக்கியர்கள் வலிமை இழந்தபோது உதுமானியத் துருக்கியர்கள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தினர். அவர்கள் மேற்கு ஆசியாவைத் தாண்டி ஐரோப்பாவினுள் புகுந்து பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றி, அட்ரியாநோப்பிளை தங்களின் தலைநகராக்கினர். கான்ஸ்டாண்டிநோபிளை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்க அவர்கள் அந்நகரை சூழ்ந்து சரியான நேரம் வரும்வரை காத்திருந்தனர். கி.பி. (பொ..) -1453இல் இரண்டாம் முகமது கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றினார். இதனால் பால்கன், கருங்கடல், மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் உதுமானியத் துருக்கியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவினர்.

மிக குறுகிய காலம் உதுமானியர்கள் வலிமையாக இருந்தனர். கிறித்தவ ஐரோப்பா அவர்களைக் கண்டு அச்சம் கொண்டது. எகிப்தைக் கைப்பற்றியபின் உதுமானியர்கள் 'கலீஃபா' பட்டத்தைச் சூடிக் கொண்டார்கள். அக்காலப் பன்னாட்டு அரசியலில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். 19ஆம் நூற்றாண்டில் வலிமைகுன்றிக் காணப்பட்ட அவர்களின் அரசு, முதல் உலகப்போரின் இறுதியில் முடிவிற்கு வந்தது.


Tags : East Asia in the Middle Ages | History இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு.
9th Social Science : History: The Middle Ages : Ottoman Empire East Asia in the Middle Ages | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : உதுமானியப் பேரரசு (Ottomon Empire) - இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்