பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : இன்பத்தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
ஏற்றத் தாழ்வற்ற --------- அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
[விடை : அ) சமூகம்]
2.
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு -------- ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
[விடை : ஈ) அசதி]
3.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
[விடை : ஆ) நிலவென்று]
4.
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொவ்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
[விடை : ஆ) தமிழெங்கள்]
5.
'அமுதென்று'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது +
தென்று
ஆ) அமுது +
என்று
இ) அமுது +
ஒன்று
ஈ) அமு +
தென்று
[விடை : ஆ) அமுது + என்று]
6.
செம்பயிர்'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை +
பயிர்
ஆ) செம் +
பயிர்
இ) செமை +
பயிர்
ஈ) செம்பு +
பயிர்
[விடை : அ) செம்மை + பயிர்]
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
1.
வினைவுக்கு -
பால்
2. அறிவுக்கு - வேல்
3.
இளமைக்கு -
நீர்
4.
புலவர்க்கு –
தோள்
விடை
1.
வினைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3.
இளமைக்கு - பால்
4.
புலவர்க்கு – வேல்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர் - நேர்
விடை :
பேர் – நேர் அமுதென்று – நிலவென்று
பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு
பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு
பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு
வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு
தோள் - வாள் அறிவுக்கு – கவிதைக்கு
குறுவினா
1.
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
விடை :
அமுதம், நிலவு, மணம்.
2.
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
விடை :
அமுதம், நிலவு, மணம்.தேன், தங்கம், கரும்பு, சந்தனம், அமுதசுரபி, நவமணிகள் போன்றவற்றோடு தமிழை ஒப்பிடுவேன்.
சிறுவினா
1.
இன்பத் தமிழ் பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
விடை
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
2.
சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
விடை
(i) நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.
(ii) நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.
(iii) நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்.
சிந்தனை வினா
வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?
விடை
(i) வேல் கூர்மையான ஆயுதம் அதைப்போல தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
(ii) ஆகவே தமிழ், வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அதேபோல் கத்தியின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது என்ற பழமொழியும் இதனையே விளக்கும்.
கற்பவை கற்றபின்
1.
இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக.
விடை :
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
2. தமிழை அமுது,
நிலவு,
மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
விடை :
மாணவன் 1 : வணக்கம் ! கவிஞர்கள் தமிழை அமுது, நிலவு, மணம் என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி உனக்குத் தெரியுமா?
மாணவன் 2 : தெரியும். அமுதம் என்பது வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவுப் பொருள் ஆகும். அது மிகவும் சுவை உடையது என்றும் அதனை உண்பதினால் தேவர்கள் சாகா வரம் பெற்றுள்ளார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையுள்ள உணவை நாம் உண்ணும்போது தேவாமிர்தமாக இனிக்கிறது என்றும் நாம் கூறுவோம். அதைப்போல் கவிஞர்களும் தமிழ் இனிமையானது என்ற பொருளிலும், இறவாநிலையில் உள்ளது என்ற பொருளிலும் தமிழை அமுது எனக் கூறுகிறார்கள்.
மாணவன் 3 : ஆமாம், ஆமாம் அதேபோல்தான் நிலவு என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. நிலவானது குளிர்ச்சி பொருந்தியது. அதுமட்டுமின்றி உலகின் இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருகிறது. தமிழ் தண்மையானது குளிர்ச்சி) என்பதாலும் மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி ஒளியைத் தருவதாலும் தமிழை நிலவு என்று அழைக்கிறார்கள்.
மாணவன் 4 : சரியாகச் சொன்னாய். மணம் என்று கூறுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அது என்னவெனில் பூக்களின் மணம், காற்றில் கலந்து எல்லாவிடங்களிலும் பரவுகிறது. அதேபோல் நம் தமிழ்மொழியும் – மாநிலம் கடந்து, நாடு கடந்து ஏன் உலகமெங்கும் தன் நறுமணத்தைப் பரப்பியுள்ளது. எனவேதான் தமிழை மணம் என்ற பெயரிட்டு அழைத்துள்ளனர்.
3.
தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை
மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல்.
தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்…
முதல் பருவம்
4.
தமிழ்க் கவிதைகள்,
பாடல்களைப் படித்து மகிழ்க.
(எ.கா.)
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
- காசி ஆனந்தன்