Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean

   Posted On :  23.06.2023 09:41 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

கேட்டும் பார்த்தும் உணர்க.

1.  இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்சு.

விடை

கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்தல்.

மனதில் உறுதி வேண்டும்.

வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்.

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்.

கைவசமாவது விரைவில் வேண்டும்.

தனமும் இன்பமும் வேண்டும்.

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்.

காரியத்தில் உறுதி வேண்டும்.

பெண் விடுதலை வேண்டும்.

பெரிய கடவுள் காக்க வேண்டும்.

மண் பயனுற வேண்டும்.

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

 

2.  தமிழறிஞர்களின் வானொலிதொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.

விடை

தமிழறிஞர்களின் வானொலிதொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்தல்மாணவர்கள் இச்செயல்பாட்டினைத் தாங்களே செய்து பார்க்க வேண்டும்.

 

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு திமிடம் பேசுக.

 தமிழ் எளிது

 தமிழ் புதிது

 பன்னிரண்டு

1. தமிழ் இனிது :

அனைவருக்கும் வணக்கம்நம் தாய்மொழியாம் தமிழின் இனிமைஎளிமைபுதுமை பற்றிப் பார்ப்போமாநம் தாய்மொழியாம் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பெயரிட்டபோதே அதன் சிறப்புகளை அனைவரும் அறிவர்இது தனித்து இயங்கும் மொழிசெம்மையான மொழி எனச் சிறப்பிக்கலாம்.

தமிழ் என்றால் அழகுதமிழ் என்றால் இனிமைஅதனால்தான் இதனைத் தேன்தமிழ்தீந்தமிழ் முதலான சொற்களால் அழைக்கின்றனர்தமிழ் என்ற சொல்லைத் தம்-இழ் எனப் பிரித்தோமேயானால் தம்மிடத்தில் ழ்’ ழைக் கொண்ட மொழி எனப் பொருள் கொள்ளலாம்தமிழில் மூன்று இனங்கள் உண்டுஅவை முறையே வல்லினம்மெல்லினம்இடையினம் ஆகும்.

தேனொக்கும் தமிழேநீ கனிநான்கிளி

வேறென்ன வேண்டும் இனி?”

செந்தமிழ் நாடெனும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!

இப்பாடல் வரிகள் தமிழின் இனிமையைப் பறைசாற்றும்

2. தமிழ் எளிது :

தமிழ் இனிய தமிழ் என்பதோடு எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறதுதமிழ் மொழியானது பேசவும் படிக்கவும் மிகவும் எளிதானதுஇந்தச் சிறப்பு உலகில் எந்த மொழிக்கும் இல்லாததுதமிழ் மொழியானது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிமையான மொழிஉயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள்உயிர் எழுத்துகள்மெய்யெழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் போதும்.

எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்தமிழ்மொழியை எழுதும் முறையும் எளிதானதுதமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளனதமிழ் எழுத்துகள் மேல் உதடுகீழ் உதடுமேற்பல்கீழ்ப்பல்நுனிநாக்குஅடிநாக்குநடுநாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கும்தமிழ் மிகவும் மென்மையாக ஒலிக்கக்கூடிய மெல்லோசை மொழியாகவே உள்ளதால் எழுதவும் பேசவும் படிக்கவும் எளிமையானதாக உள்ளது.

3. தமிழ் புதிது :

தமிழ் மொழி என்றென்றும் புதிதாக உள்ளதுஅதற்குக் காரணம் இன்று வளர்ந்து வரும் அறிவியல்கணினி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டே உள்ளனஅறிவியல் தமிழ்கணினித் தமிழ் என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் கலைச் சொற்கள் பெருகியுள்ளனசமூக ஊடகங்களான செய்தித்தாள்தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகிறதுஇதிலிருந்து தமிழ் இனிதுஎளிதுபுதிது என்பதை அறியலாம்.

 

சொல்லக் கேட்டு எழுதுக.

1. இன்பத்தமிழ்

2. தொல்காப்பியம்

3. சுப்புரத்தினம்

4. பன்னிரண்டு

5. பாவேந்தர்

6. அஃறிணை

7. செந்தமிழ்

8. ஆராய்ச்சியாளர்

9. உயிரினங்கள்

10. கருவூலங்கள்

 

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்புசான்றாகசுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம்.சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும்உடல்நலமே உழைப்புக்கு அடிப்படைஉழைத்துத் தேடிய பொருளால் உணவுஉடைஉறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம்இவை அனைத்திற்கும் கத்தமே அடிப்படைஇவ்விரித்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

1. பழமொழியின் சிறப்பு  --------- சொல்வது

விரிவாகச்

சுருங்கச்

பழைமையைச்

பல மொழிகளில்

விடை : சுருங்கச்

 

2. நோயற்ற வாழ்வைத் தருவது

விடைசுத்தம்

3. உடல்நலமே -------- அடிப்படை

விடைஉழைப்புக்கு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

விடைஉணவுஉடைஉறைவிடம்

5பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

விடைசுத்தம்

 

பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

விடை : எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.

விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.

 

ஆய்ந்தறிக.

பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.

S. இனியன், எஸ்.இனியன், .இனியன் - இவற்றுள் சரியானது எதுஏன்?

விடை :

இனியன்.

பெயரும் பெயரின் தலைப்பெழுத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும்.

பெயரைத் தமிழிலும் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் எழுதுவது தவறு.

 

கடிதம் எழுதுக.

விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர்

.பூங்கோதை

ஆறாம் வகுப்பு ’ பிரிவு,

அரசினர் உயர்நிலைப் பள்ளி

அண்ணாநகர்சென்னை -40.

 

பெறுநர்

வகுப்பாசிரியர் அவர்கள்

ஆறாம் வகுப்பு ’ பிரிவு,

அரசினர் உயர்நிலைப் பள்ளி

அண்ணாநகர்சென்னை -40.

மதிப்பிற்குரிய ஐயாஅம்மா,

வணக்கம்எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். .

நன்றி!

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள மாணவி,

.பூங்கோதை

 

இடம் : முகப்பேர்

நாள் : 18.06.2018

பெற்றோர் கையொப்பம்

அருணாச்சலம்.

 

 

மொழியோடு விளையாடு 


 

திரட்டுக.

'மைஎன்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.

விடை

1. கருமை

2. இனிமை

3. பொறுமை

4. பெருமை

5. இளமை

6. சிறுமை

7. கல்லாமை

8. வறுமை

9. தனிமை

10. உவமை

11. அருமை

12. உண்மை

13. இல்லாமை

14. பன்மை

 

சொல் வளம் பெறுவோம்.

1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

(.கா.) கரும்பு – கருகம்பு

கவிதை – கவிவிதைகதைதை

பதிற்றுப்பத்து – பதிபத்துபற்று

பரிபாடல் – பரிபாடல்பாபால்பாரி

 

2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

நூல்  மொழி  கோல்  மீன்  நீதி  எழுது

கண்  வெளி  தமிழ்   மணி  மாலை  விண்

(.கா.) விண்மீன்

விடை

 


பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

அழகுஏற்றம்இன்பம்ஊக்கம்இனிமைஆற்றல்ஈடுஇசைஉணர்வுஏடுகள்உரிமைஎன்றும்எளிதாய்உவகைஅன்பு

(.கா.)

 – அன்பு தருவது தமிழ்

 - ஆற்றல் தருவது தமிழ்

 - இன்பம் தருவது தமிழ்

 - ஈடு இல்லாதது தமிழ்

 - உவகை தருவது தமிழ்

 - ஊக்கம் தருவது தமிழ்

 - என்றும் வேண்டும் தமிழ்

 - ஏற்றம் தருவது தமிழ்

 

கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க


விடை :

1. பாரதிதாசன்

2. பாரதியார்

3. திருவள்ளுவர்

4. வாணிதாசன்

5. சுரதா

6. ஔவையார்

 

நிற்க அதற்குத் தக


1. நான் தாய்மொழியிலேயே பேசுவேன்.

2. தாய்மொழியிலேயே கல்வி கற்பேன்.

3. தமிழ்ப்பெயர்களையே சூட்டுவேன்.

 

கலைச்சொல் அறிவோம்

1. வலஞ்சுழி – Clockwise

2. இடஞ்சுழி – Anti Clockwise

3. இணையம் – Internet

4. குரல்தேடல் – Voice Search

5. தேடுபொறி – Search engine

6. தொடுதிரை – Touch Screen

7. முகநூல் – Facebook

8. செயலி – App

9. புலனம் – Whatapp

10. மின்ன ஞ்சல் – E-mail

 

இணையத்தில் காண்க


உனக்குப் பிடித்த தமிழ்க் கவிஞர் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடி அறிக.

இணையச் செயல்பாடுகள்

பிழை


படி 1

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திப் பிழை என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

படி 2

செயலியைத் திறந்தவுடன் நல்வரவு என்னும் திரையில் play குறியீட்டு வடிவில் இருக்கும் பொத்தானை அழுத்தவும்.

படி 3

திரையில் தோன்றும் வார்த்தைகளில் ஒற்று அல்லது எழுத்துப் பிழை உண்டாஇல்லையாஎன்பதைத் தெரிவு செய்க.

செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :

செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/details?id=com.jishyut.pizhai&hl=en

Tags : Term 1 Chapter 1 | 6th Tamil பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean : Tamil Language Exercise - Questions and Answers Term 1 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்