Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 2 : Force and Pressure

   Posted On :  09.09.2023 03:06 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்: நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• ஒரு பொருளின்மீது செயல்படுத்தப்படும் விசை அப்பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது சீரான இயக்க நிலையையோ அல்லது பொருளின் வடிவத்தையோ மாற்றுகிறது. விசையின் SI அலகு நியூட்டன் ஆகும்.

• ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே விசை செயல்படுகிறது.

• விசையின் விளைவினை அழுத்தம் எனப்படும் இயற்பியல் அளவைக் கொண்டு கணக்கிடலாம். திரவங்கள், வாயுக்கள் மற்றும் காற்று ஆகிய யாவும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன.

• பூமியின் மீதுள்ள அனைத்துப் பொருள்களும், வளிமண்டலத்தின் காரணமாக ஒரு உந்துவிசையை உணர்கின்றன.

• வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி பாதரசமானி ஆகும்.

• ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசைக்கு உராய்வு என்று பெயர்.

• ஒழுங்கற்ற பரப்புடைய பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதே உராய்விற்கான காரணமாகும்.

.• உராய்வானது தொடும் பொருள்களின் பரப்புக்களையும், அவற்றின் எடையையும் சார்ந்தது.

• உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை: நிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு. இயக்க உராய்வானது, நழுவு உராய்வு மற்றும் உருளும் உராய்வு என மேலும் வகைப்படுத்தப்படுகிறது.

• திரவ மூலக்கூறுகள் சிறுமப் புறப்பரப்பை அடைவதற்காக தங்களின் பரப்பை சுருக்கிக் கொள்ளும் தன்மையே பரப்பு இழுவிசை எனப்படுகிறது.

• திரவங்கள் இயக்கத்தில் இருக்கும்போது அவற்றினுள் உள்ள திரவ அடுக்குகளுக்கு இடையே ஒரு உராய்வுவிசை உருவாகிறது. இந்த உராய்வு விசை திரவ அடுக்குகளின் ஒப்புமை இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமைகிறது. இவ்விசை பாகியல் விசை என்றும், இந்நிகழ்வு பாகுநிலை என்றும் அழைக்கப்படுகிறது.

• பாகுநிலை CGS அலகு முறையில் பாய்ஸ் என்ற அலகாலும், SI அலகு முறையில் Kgm-1 S-1 அல்லது Nsm-2 என்ற அலகாலும் அளவிடப்படுகிறது.

 

சொல்லடைவு

விசை  பொருள்களைத் தள்ளும் அல்லது இழுக்கும் செயல்.

உந்துவிசை கொடுக்கப்பட்ட பரப்பின் மீது செயல்படும் செங்குத்து விசை.

அழுத்தம் ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை.

மிதப்பு விசை மிதக்கும் பொருளின்மீது திரவம் செயல்படுத்தும் மேல்நோக்கு விசை.

பரப்பு இழுவிசை திரவங்களின் புறப்பரப்பின் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை.

உராய்வு சார்பியக்கத்தில் உள்ள பரப்புகளின் ஒழுங்கற்ற தன்மையால் உருவாக்கப்படும் விசை.


மேற்கோள் நூல்கள்

1. Fundamentals of Physics (English, Hardcover) David Halliday & Jearl Walker.

2. Principles of Physics, International Student Version (English, Paperback) Jearl Walker, David Halliday, Robert Resnick.

3. Concepts of Physics (Volume-1) 1st Edition (English, Paperback) H. C. Verma.

4. Fundamentals of Physics (English, Hardcover) David Halliday

 

இணையதள வளங்கள்

1. https://www.youtube.com/watch?v=Oe6b

2. https://www.youtube.com/watch?v=Knd NN28OcEI

3. https://www.youtube.com/watch?v=-B5IBoZ08-I

4. https://www.stufftoblowyourmind.com/ videos/51302-stuff-to-blow-your-kids-mindatmospheric- pressure-video.htm

5. http://www.cyberphysics.co.uk/graphics/ diagrams/forces/spouting_can.gi




இணையச் செயல்பாடு

விசை மற்றும் அழுத்தம்


இச்செயல்பாட்டின் மூலம் நீர்மத்தின் அழுத்தம் மற்றும் பாஸ்கல் விதி பற்றி அறிதல்

படிநிலைகள்

படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: "Fluid Pressure and Pascal's Law”என்ற தலைப்பினைத் தெரிவுசெய்க. கீழ்க்காணும் படவிளக்கப்படி நிலை 2 இல் உள்ள படத்தைப் பார்க்கலாம்.

படி 3: கீழ்க்காணும் படவிளக்கப்படி நிலை 3 இல் குறிப்பிட்டுள்ள பொத்தானை அழுத்தி விளையாடவும்.

படி 4: இவ்வாய்வுகளின் மூலம் நீர்மங்களின் அழுத்தம் தொடர்பான பாஸ்கல் விதியை நன்கு அறிந்து கொள்க.

உரலி: https://www.youtube.com/watch?v=dx2P7i1GPaw தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Force and Pressure | Chapter 2 | 8th Science விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 2 : Force and Pressure : Points to Remember, Glossary, Concept Map Force and Pressure | Chapter 2 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்