விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பாகியல் விசை அல்லது பாகுநிலை | 8th Science : Chapter 2 : Force and Pressure
பாகியல் விசை அல்லது பாகுநிலை
செயல்பாடு 8
சிறிதளவு
தேங்காய் எண்ணெய், தேன், நீர் மற்றும் நெய் போன்ற வெவ்வேறு வகையான திரவங்களை எடுத்துக்
கொள்ளவும். இவற்றை தனித்தனி கண்ணாடித் தகடுகளில் ஒரு துளி விடவும். கண்ணாடித் தகடுகளை
ஒரு புறம் உயர்த்தி இத்திரவங்களை வழவழப்பான கண்ணாடிப் பரப்பில் ஓடுமாறு செய்யவும்.
ஓடும் அத்திரவங்களின் வேகத்தை உற்றுநோக்கவும்.
இங்கு, ஒவ்வொரு திரவமும் வெவ்வேறு வேகத்தில் நகர்வதைக் காணலாம்.
நீரானது மற்ற திரவங்களைக் காட்டிலும் வேகமாக நகர்கிறது. தேங்காய் எண்ணெய் மிதமான வேகத்திலும்,
நெய் மிகவும் மெதுவாகவும் நகர்கின்றது. திரவங்கள் இயங்கும் போது அவற்றின் திரவ அடுக்குகளுக்கு
இடையே அவற்றிற்கு இணையாக ஒரு உராய்வு விசை செயல்படுகிறது. இந்த உராய்வு விசை திரவங்கள்
இயங்கும்போது அவ்வியக்கத்தை எதிர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஒரு திரவம் பாயும்பொழுது, திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு
இடையே அவற்றின் சார்பியக்கத்தை எதிர்க்கும் வகையில் செயல்படும் விசையே பாகியல் விசை
எனப்படும். இந்தப் பண்பு பாகுநிலை என வரையறுக்கப்படுகிறது. பாகியல் விசை CGS அலகு முறையில்
பாய்ஸ் என்ற அலகாலும், SI அலகுமுறையில் Kgm's' அல்லது Nsm" என்ற அலகாலும் அளக்கப்படுகிறது.