Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பரப்பு இழுவிசை

விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பரப்பு இழுவிசை | 8th Science : Chapter 2 : Force and Pressure

   Posted On :  27.07.2023 12:40 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

பரப்பு இழுவிசை

பரப்பு இழுவிசை மற்றும் பரப்பு இழுவிசையின் பயன்பாடுகள்

பரப்பு இழுவிசை


செயல்பாடு 7

ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி, அதன் மீது மெல்லிய உறிஞ்சு தாளை வைக்கவும். ஒரு காகிதப் பிடிப்பு ஊசியினை (paper clip) உறிஞ்சு தாளின் மீது மெதுவாக வைக்கவும். சிறிது நேரம் கழித்து காகிதப் பிடிப்பு ஊசி மூழ்குகிறதா என்பதை உற்று நோக்கவும்.


சில நிமிடங்களுக்குப் பிறகு உறிஞ்சு தாள் நீரில் மூழ்குகிறது. காகிதப் பிடிப்பு ஊசி நீரைக் காட்டிலும் அதிக அடர்த்தியைப் பெற்றிருந்த போதிலும், அது நீரில் சிறிது மூழ்கிய நிலையில் மிதக்கத் துவங்குகிறது.

இது எவ்வாறு நடைபெறுகிறது? நீரின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் இழுத்துக் கட்டப்பட்ட ஒரு சவ்வைப் போன்று தங்களது பரப்பைக் குறைத்துக் கொள்கின்றன. அவற்றின்மீது செயல்படும் விசை நீரின் பரப்புவிசையைக் குறைக்க முயல்கிறது. நீரின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் இந்த பரப்பு இழுவிசையின் காரணமாக மீட்சித்தன்மை உடைய சவ்வு போன்று செயல்படுவதால் காகிதப் பிடிப்பு ஊசி மூழ்காமல் மிதக்கிறது.

மழைத்துளிகள் இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பது ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? மரங்கள் மற்றும் தாவரங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வேரிலிருந்து நீர் எவ்வாறு மேலே செல்கிறது? இவை யாவும் பரப்பு இழுவிசை காரணமாகவே நடைபெறுகின்றன.

பரப்பு இழுவிசை என்பது திரவங்களின் ஒரு பண்பு ஆகும். திரவ மூலக்கூறுகள் தங்களால் இயன்ற அளவு மீச்சிறு புறப்பரப்பைக் கொண்டிருக்கும்படி அவற்றின் மீது ஒரு விசை செயல்படுகிறது. திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு Nm-1,

 

1. பரப்பு இழுவிசையின் பயன்பாடுகள்

.அன்றாட வாழ்வில் நாம் காணும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பரப்பு இழுவிசையே காரணமாகும். தாவரங்களில் பரப்பு இழுவிசை காரணமாக, நீர் மேலே செல்கிறது. தாவரங்களில் சைலம் எனப்படும் மிக நுண்ணிய குழாய்கள் காணப்படுகின்றன. தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் நீர் மூலக்கூறுகள் இத்திசுக்குழாய்கள் வழியே நுண்புழை ஏற்றம் காரணமாக மேல்நோக்கிச் செல்கின்றன. இதற்கு நீரின் பரப்பு இழுவிசையே காரணமாக அமைகிறது.

• கடுமையான புயல்காற்றின்போது நீரின் பரப்பு இழுவிசை காரணமாக கப்பல்கள் சேதமடைகின்றன. தூள் அல்லது எண்ணெயை நீரில் பரப்புவதன் மூலம் அதன் தாக்கத்தை மாலுமிகள் குறைக்கின்றனர்.

• நீரின் பரப்பு இழுவிசை காரணமாக நீர்ச் சிலந்தியானது நீர்ப்பரப்பின்மீது எளிதாக நகர்ந்து செல்கிறது.


Tags : Force and Pressure | Chapter 2 | 8th Science விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 2 : Force and Pressure : Surface Tension Force and Pressure | Chapter 2 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : பரப்பு இழுவிசை - விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்