உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 18 : Organisation of Life
நினைவில் கொள்க
• செல் என்பது உயிரினங்களின் அடிப்படையான, அமைப்பு மற்றும் செயல்
அலகு ஆகும். அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆக்கப்பட்டவை.
• செல்கள் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபடுகின்றன. செல்லின்
அளவானது மைக்ரோமீட்டர் (um) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
• செல்கள் ஒன்றாக இணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. திசுக்கள்
ஒன்றாக இணைந்து உறுப்புகளையும், உறுப்புகள் ஒன்றாக இணைந்து உறுப்பு மண்டலத்தையும் உருவாக்குகின்றன.
• கண் என்பது ஒரு புலனுறுப்பு ஆகும்.
• சுவாசித்தல் என்பது உணவுப் பொருள் ஆக்சிகரணம் அடைந்து, ஆற்றலை
வெளிப்படுத்தும் நிகழ்வு ஆகும். இது உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசம் (செல்சுவாசம்)
ஆகியவற்றை உள்ளடக்கியது.
• ஆக்சிஜனின் பயன்பாட்டைப் பொருத்து சுவாசித்தலில் காற்றுள்ள
சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் என் இருவகைகள் உள்ளன.
• பிளாஸ்மா சவ்வின் தேர்வு கடத்தும் திறனானது செல்லின் தன்னிலை
காத்தலைப் பராமரிக்க உதவுகிறது.
• பரவல் என்பது கரைப்பான் மூலக்கூறுகள் அதிக செறிவுடைய பகுதியிலிருந்து
குறைவான செறிவுடைய பகுதிக்கு நகரும் செயல்பாடு ஆகும்.
• சவ்வூடு பரவல் என்பது அரைகடத்து சவ்வின் வழியாக அதிக செறிவுடைய
பகுதியிலிருந்து குறைவான செறிவுடைய பகுதிக்கு கரைப்பான் மூலக்கூறுகள் நகர்வது ஆகும்.
• தன்னிலை காத்தல் என்பது, உடலின் உட்புறச் சூழலை நிலையாகப்
பராமரிக்கும் நிகழ்ச்சியாகும்.
• வளர்சிதை மாற்றம் எனப்படும் மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை
வெளிப்படுத்தும் மற்றும் பயன்படுத்தும் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாறிக் கொள்ளும்
நிகழ்ச்சியை உள்ளடக்கியதாகும். இந்நிகழ்ச்சி வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றம் என இரு
வகைப்படும்.
• வளர்சிதைமாற்றத்தின் தொடர்ச்சியான வினைகளான வளர் மாற்ற மற்றும்
சிதை மாற்ற வினைகள் உடலின் தன்னிலை காத்தலைப் பராமரிக்கின்றன.
சொல்லடைவு
காற்று நுண்ணறைகள் நுரையீரல்களில் உள்ள விரைவான வாயுப் பரிமாற்றத்திற்கு
உதவும் எண்ணற்ற நுண்ணிய காற்றுப்பைகள்
யூகேரியாட்டிக் மரபுப்
பொருள்களைப் பெற்றுள்ள, தெளிவான உட்கருவைக் கொண்ட செல்களை உடைய உயிரினம்.
செல்
நுண்ணறைகள் குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக செல்லினுள் அமைந்துள்ள சிறப்பான
அமைப்புகள்
மைக்ரான் நீளத்தை
அளக்கும் மிகச்சிறிய ஒரு அலகு. இது ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும்.
மோகுளோபின்
முதுகெலும்பிகளின்
இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்பு அணுக்களால் ஆன இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை
அளிக்கக்கூடிய நிறமி.
புரோகேரியாட்டிக் செல் தெளிவான உட்கரு மற்றும் சவ்வினால் சூழப்பட்டுள்ள
செல் நுண்ணுறுப்புகளற்ற ஒருசெல் நுண்ணுயிரிகள்
உதரவிதானம்
மார்பறையையும்
வயிற்றையும் பிரிக்கும் தசை புளூரா நுரையீரல்களைப் பாதுகாக்கும் சவ்வு
வளர்சிதைமாற்றம் உயிரினங்கள்
தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்வதற்காக நடத்தும் மொத்த வேதிவினைகள்.
பிற நூல்கள்
1. The science of biology by Raven, Johnson, McGraw Hill.
2. Histology and cell biology by Kierstenburm
3. Elsevier's Dictionary of the Genera of life
4. Cell biology Organelle structure and function.
இணைய வளங்கள்
1. https://sciencing.com/levels-organization- biology-8480388.html
2. http://www.biologyreference.com/Gr-Hi/History-
of-Biology-Cell-Theory-and-Cell-Structure.html
3. http://www.biologyreference.com/A-Ar/ Animalia.html