உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 18 : Organisation of Life
செயல்பாடு 1
கோழிமுட்டையை வேக வைத்து அதன் ஓட்டினை நீக்கு. என்ன காண்கிறாய்? மஞ்சள் கருவைச் சூழ்ந்து வெள்ளைக்கரு உள்ளது. வெள்ளைக் கருவானது ஆல்புமின் எனப்படும். அது வேகவைக்கும் போது திடப்பொருளாக மாறுகிறது. இது ஒற்றைச் செல்லின் ஒரு பகுதிப்பொருள் ஆகும். இந்த ஒருசெல் முட்டையை வெறும் கண்ணாலேயே நம்மால் காண முடியும்.
செயல்பாடு 2
நேராக நின்று உனது கைகளை பக்கவாட்டில் அசைக்கவும். மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டு உனது விலா எலும்புகளின் இயக்கத்தைக் கவனி பிறகு, சுமார் நூறு மீட்டர் தொலைவிற்கு ஓடிவிட்டு விலா எலும்புகளின் இயக்கத்தை உற்றுநோக்கு. நீ உற்றுநோக்கியதைப் பற்றி உனது வகுப்பில் கலந்துரையாடு.
உருவாக்கும் முறை
நெகிழி பாட்டிலைக் குறுக்காகப் பாதியில் வெட்டவும். Y வடிவ குழாயின் முனையில் இரு சிறிய பலூன்களைப் பொருத்தவும். தக்கையின் மையத்தில் ஒரு துளையிட்டு படத்தில் காட்டியுள்ளவாறு, கூடிவக்குழாயை இணைக்கவும். பெரிய பலூனை, இரண்டாக வெட்டியெடுத்து நெகிழிப் பாட்டிலின் திறந்த முனையில் இறுக்கமாகக் கட்டவும்.
வேலை செய்யும் விதம்
பெரிய பலூனின் மையப்பகுதியை படத்தில் காட்டியவாறு கீழ் நோக்கி இழுக்கவும். பாட்டிலின் உட்புறத்தில் உள்ள பலூன்களில் ஏற்படும் மாற்றத்தை உற்று நோக்கவும். தற்போது பலூனை பழைய நிலைக்கு விடவும்.
செயல்பாடு 3
நுரையீரல் மாதிரியைத் தயாரித்தல். தேவையான பொருள்கள்
Y வடிவ குழாய், ஒரு பெரிய பலூன், இரு சிறிய பலூன்கள், ஒரு லிட்டர் நெகிழிபாட்டில் [botle] தக்கை.
நமது உடலானது கருமுட்டை (சைகோட் என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது. கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது. கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும் மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர். செல்களில் மிகப் பெரிய செல், நெருப்புக் கோழியின் முட்டை ஆகும். 0.0001 மி.மீ அளவுடைய மைக்கோ பிளாஸ்மாவே மிகச்சிறிய பாக்டீரியம் ஆகும்.
ஓய்வு
நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 15 - 18 முறை மூச்சை உள்ளிழுத்து
வெளி விடுகின்றான். கடும் உடற்பயிற்சியின்போது இச்சுவாச வீதம் நிமிடத்திற்கு 25 முறைகளுக்கும்
இருக்கும்.
புகைபிடித்தல்
நரையீரல்களை சேதப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் புற்று நோய்க்குக் காரணமாவதால் அது
தவிர்க்கப்பட வேண்டும்.
உங்களுக்கு
தும்மல் ஏற்படும்போது நீங்கள் நாசித் துவாரங்களை மூடிக் கொள்ள வேண்டும். இதன்மூலம்
நீங்கள் வெளியேற்றும் அயல் பொருள்கள் அருகில் இருப்பவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.
மேலும் அறிந்து கொள்வோம்
காற்றுள்ள
சுவாசமானது காற்றில்லா சுவாசத்தினை விட 19 மடங்கு அதிக ஆற்றலை ஒரே அளவு குளுக்கோஸிலிருந்து
வெளிப்படுத்துகிறது.
காற்றுள்ள
சுவாசத்தின்போது ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் 36 மூலக்கூறுகளை உருவாக்கும்.
மேலும் அறிந்து கொள்வோம்
ஒருவர்
உணவு சாப்பிட்டபிறகு 12 - 18 மணி நேரத்திற்குப் பின் மிதமான வளிமண்டலச் சூழலில் முழுமையான
ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அவருக்கு ஒரு குறைந்த அளவிலான ஆற்றல் தேவைப்படும்.
அந்த ஆற்றலே அடிப்படை வளர்சிதை மாற்றம் எனப்படும்.