Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | உயிரினங்களின் ஒருங்கமைவு

அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் ஒருங்கமைவு | 8th Science : Chapter 18 : Organisation of Life

   Posted On :  30.07.2023 04:23 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு

உயிரினங்களின் ஒருங்கமைவு

கற்றலின் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ விலங்குலகத்தில் உள்ள உயிரினங்களின் பல்வேறு அமைப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளல். ❖ செல்களின் அமைப்பு பற்றி அறிதல். ❖ திசுக்களின் வகைகளைப் புரிந்துகொள்ளல் ❖ உயிரினங்களின் அமைப்பு நிலைகளில், உறுப்பு மட்டத்திற்கு எடுத்துக்காட்டாக கண்ணின் அமைப்பைப் பற்றி அறிதல். ❖ உயிரினங்களின் அமைப்பு நிலைகளில் உறுப்பு மண்டல மட்டத்திற்கு எடுத்துக்காட்டாக சுவாச மண்டலத்தைப் பற்றி அறிதல். ❖ தன்னிலைகாத்தல், விரவல், சவ்வூடு பரவல், ஊடு பரவல் ஒழுங்குபாடு, செல் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற உடல் செயலியல் பணிகளைப் புரிந்துகொள்ளல்.

அலகு 18

உயிரினங்களின் ஒருங்கமைவு


 

கற்றலின் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:

விலங்குலகத்தில் உள்ள உயிரினங்களின் பல்வேறு அமைப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளல்.

செல்களின் அமைப்பு பற்றி அறிதல்.

திசுக்களின் வகைகளைப் புரிந்துகொள்ளல்

உயிரினங்களின் அமைப்பு நிலைகளில், உறுப்பு மட்டத்திற்கு எடுத்துக்காட்டாக கண்ணின் அமைப்பைப் பற்றி அறிதல்.

உயிரினங்களின் அமைப்பு நிலைகளில் உறுப்பு மண்டல மட்டத்திற்கு எடுத்துக்காட்டாக சுவாச மண்டலத்தைப் பற்றி அறிதல்.

தன்னிலைகாத்தல், விரவல், சவ்வூடு பரவல், ஊடு பரவல் ஒழுங்குபாடு, செல் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற உடல் செயலியல் பணிகளைப் புரிந்துகொள்ளல்.



 

அறிமுகம்

உனது சுற்றுப்புறத்தை உற்று நோக்கும் போது, எண்ணிக்கையில் அடங்காத பல்வேறு வகை விலங்கினங்களைப் பார்க்கலாம். நமது கண்களுக்குப் புலனாகாத அமீபா போன்ற விலங்குகள் நம்மைச்சுற்றி உள்ளன. மிகப் பெரிய விலங்குகளான நீலத்திமிங்கலம் மற்றும் யானைகள் போன்றவையும் உள்ளன. விலங்குகளில் காணப்படும் வேறுபாடுகள் அளவில் மட்டுமல்லாது, செல், திசு, உடல் அமைப்பு போன்றவற்றிலும் காணப்படுகின்றன. கட்டமைப்பின் அடிப்படையில் உயிரினங்கள் புரோகேரியாட்டுகள் மற்றும் யூகேரியாட்டுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோ பிளாஸ்மா போன்ற உயிரினங்களில் உட்கரு காணப்படுவதில்லை. எனவே இவ்வுயிரினங்கள் புரோகேரியாட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இருப்பினும்தாவரங்கள் மற்றும் விலங்குகளில் சவ்வினால் சூழப்பட்ட தெளிவான உட்கரு காணப்படுகிறது. இந்த உயிரினங்கள் யூகேரியோட்டுகள் என் அழைக்கப்படுகின்றன. சில உயிரிகளின் உடலானது ஒரு செல்லைக் கொண்டுள்ளதால் அவை ஒரு செல் உயிரினங்கள் (single celled organism) என்று அழைக்கப்படுகின்றன. எ.கா. ஈஸ்ட், அமீபா. மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்ற பெரிய உயிரினங்கள் பல செல்களைக் கொண்டுள்ளதால் அவை பல செல் உயிரினங்கள் (multicelluler organism) என்று இப்பாடப் பகுதியில் உயிரினங்களின் ஒருங்கமைவில் உள்ள பல்வேறு நிலைகளை உதாரணத்துடன் காண்போம்.

Tags : Chapter 18 | 8th Science அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 18 : Organisation of Life : Organisation of Life Chapter 18 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு : உயிரினங்களின் ஒருங்கமைவு - அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு