வெப்ப இயற்பியல் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 3 : Thermal Physics
வெப்ப இயற்பியல்
(அறிவியல்)
நினைவில் கொள்க
❖ வெப்ப ஆற்றல்
உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜுல் (J).
❖ வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் வெப்ப
நிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து இருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு
பரவும்.
❖ ஒரு பொருளில் இருக்கும் வெப்பத்தின்
அளவு வெப்பநிலை என வரையறுக்கப்படுகிறது. இதன் SI அலகு கெல்வின் (K).
❖ அனைத்துப் பொருட்களும் வெப்பப்படுத்தும்
போது கீழ்க்கண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றங்களுக்கு உட்படுகின்றன.
• பொருளின் வெப்பநிலை உயரும்.
• திட நிலையிலுள்ள ஒரு பொருள் திரவ
நிலைக்கோ அல்லது திரவ நிலையிலுள்ள ஒரு பொருள் வாயு நிலைக்கோ மாற்றம் அடையும்.
• வெப்பப்படுத்தும்போது பொருளானது விரிவடையும்.
❖ அனைத்து வகையான பொருள்களும் (திட, திரவ மற்றும் வாயு)
வெப்பப்படுத்தும் போது விரிவடையும்.
❖ ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை
உயரும் போது, திரவத்தில் ஏற்படும் விரிவு திடப்பொருளை விட அதிகமாகவும், வாயுக்களில் எற்படும் விரிவு திட மற்றும் திரவ பொருட்களில் ஏற்படும்
விரிவை விட அதிகமாக இருக்கும்.
❖ எந்த ஒரு கொள்கலன்களும் இல்லாமல்
நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் விரிவு உண்மை வெப்ப விரிவு
எனப்படும்.
❖ கொள்கலனின் விரிவினை
பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின்
தோற்ற வெப்ப விரிவு என அழைக்கப்படும்.
❖ திரவத்திற்கு குறிப்பட்ட அளவு வெப்ப
ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் உண்மை வெப்ப விரிவு, தோற்ற வெப்ப விரிவினைவிட அதிகமாக இருக்கும்.
❖ ஒன்றோடு ஒன்று இடைவினை புரியாமல்
இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்களே நல்லியல்பு
வாயுக்கள் எனப்படும்
❖ நல்லியல்பு வாயுச்சமன்பாடு PV = RT. இது
வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும் அழைக்கப்படும். இதில் R என்பது
பொது வாயு மாறிலி (8.31J mol-1 K-1) ஆகும்.