அறிமுகம் - வெப்ப இயற்பியல் | 10th Science : Chapter 3 : Thermal Physics
அலகு 3
வெப்ப இயற்பியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும்
திறன்களாவன:
* வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பநிலை
பற்றி புரிந்து கொள்வர்
* வெப்பநிலையின் தனித்த அளவுகோல்
பற்றி தெரிந்து கொள்வர்.
* வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பச்
சமநிலை பற்றி புரிந்து கொள்வர்.
* பொருள்கள் விரிவடைவதை
வகைப்படுத்துவர்.
* நல்லியல்பு வாயு விதிகளைப் பற்றி
தெரிந்து கொள்வர்
* இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு
வாயுவை வேறுபடுத்துவர்.
* நல்லியல்பு வாயுக்களுக்கான
சமன்பாட்டை நிறுவுவர்.
* மேற்காண் தலைப்புகளில் தொடர்புடைய
கணக்குகளுக்கு தீர்வு காண்பர்.
அறிமுகம்
அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்குத்
தேவையான முதன்மையான வெப்ப ஆற்றல் சூரியனிடமிருந்து கிடைக்கிறது. வெப்ப ஆற்றல்
என்பது காரணி மற்றும் வெப்பநிலை என்பது விளைவு. அனைத்து உயிரினங்களும் உயிர்
வாழ்வதற்கு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. சமையலறையில் தூண்டுதல்
அடுப்பில் வைக்கப்படும் பாத்திரத்தின் அடிப்பகுதி எஃகினால் செய்யப்பட்டிருப்பதன்
காரணம் உங்களுக்குத் தெரியுமா?.
நம்மில் அனைவருக்கும் வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பநிலை பற்றி பொதுவான
புரிதல் உண்டு. ஆனால் இப்பாடத்தில் அறிவியலின் கண்ணோடத்தில் வெப்பநிலை மற்றும்
வெப்ப ஆற்றல் ஆகியவற்றை தெரிந்து கொள்ள உள்ளோம். மேலும் வெப்ப ஆற்றல் பரிமாற்றம்
எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பற்றியும் வெப்ப ஆற்றலினால் ஏற்படும் விளைவுகளைப்
பற்றியும் படிக்க உள்ளோம்.