Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 06:30 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6 : நிலா முற்றம் : திறன் அறிவோம்



பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ...........

) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

[விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்]

 

2. ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

[விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.]

 

3. மலர்கள் தரையில் நழுவும், எப்போது?

) - அள்ளி முகர்ந்தால்

) தளரப்பிணைத்தால்

) இறுக்கி முடிச்சிட்டால்

) காம்பு முறிந்தால்

[விடை: தளரப்பிணைத்தால்]

 

4. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

) கரகாட்டம் என்றால் என்ன?

) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?

) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

[விடை: கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?]

 

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) நல்ல உள்ளம் உள்ளவர்கள் இல்லாதவர்கள்

) ஊரில் விளைச்சல் இல்லாததால்

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

) அங்கு வறுமை இல்லாததால்

[விடை: அங்கு வறுமை இல்லாததால்]

 

குறுவினா


1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற் பொருள் :

• நிலம் - முல்லை (காடும் காடு சார்ந்த இடம்)

• பொழுது - பெரும் பொழுது - கார்காலம்

• சிறுபொழுது - மாலை

• கருப்பொருள் - உணவு - வரகு

 

2. "நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!'' என்று சேகர் என்னிடம் கூறினான் - இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.

• அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும் சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினார்.

 

3. "உறங்குகின்ற கும்பகர்ணன் எழுந்திராய் எழுந்திராய்

காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் ''

- கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

கும்பகர்ணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்" என்று சொல்லி எழுப்பினார்கள்.

வில்லைப்பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

 

4. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்" - இக் கவிதை அடிகள் உணாத்தும் உள்ளழகை எழுதுக.

மலரின் ஒல்லியான தண்டுகள் அமைதியானதொரு உலகத்தைச் சுமப்பதாக இந்த அடிகள் கூறுகின்றன. அதாவது மலரை ஒரு பிரபஞ்சமாக இந்தப் பாடலில் ஆசிரியர் உருவகிக்கிறார்.

 

5. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

) உழவர்கள் மாலையில் உழுதனர்

) முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

• மருத நிலம் - வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். உழவர்கள் வயலில் உழுதனர்

நெய்தல் தாழைப் பூவைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

 

சிறுவினா

 

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்திய நாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு:

• கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கினிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

• இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

• பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பந்தாடியது.

• கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடின.

• உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடியது.

 

2. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப்பாடலில் வெளிப்படுகிறது ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்

காம்புகளின் கழுத்து முறியும்.

தளரப் பிணைத்தால்

மலர்கள் தரையில் நழுவும்.

வாசலில் மரணம் நிற்பதறிந்தும்

வருந்தாமல் சிரிக்கும்

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான் நவீன கவிதை

கையாலே பூவெடுத்தா - மாரிக்குக்

காம்பழுகிப் போகுமின்னு

விரலாலே பூவெடுத்தா - மாரிக்கு

வெம்பி விடுமென்று சொல்லி

தங்கத்துரட்டி கொண்டு - மாரிக்குத்

தாங்கி மலரெடுத்தார் நாட்டுப்புறப் பாடல்


• நவீன கவிதையில் "பூவை" என்ற சொல் மலரையும் பெண்ணையும் குறிக்கிறது. நாட்டுப்புறப்பாடல் பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டு பாடப்பட்டுள்ளது.

• நவீன கவிதையில் பூக்களை இறுக்கமாக முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும். நாட்டுப்புறப் பாடலில் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்பவரால் கையால் பூப்பறிப்பதில்லை.

• நவீன கவிதையில் தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண்ணின் தளர்ந்த வாழ்வும் நழுவும் விரலால் பூப்பறித்தால் பயனற்று வெம்பி விடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை. வாசலில் மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப்போல பெண்ணும் வருத்தப்படாமல் சிரிக்கின்றனர். இந்தப் பெண்ணாகி பூவைத் தொடுப்பது எப்படி? நாட்டுப்புறப்பாடலில் மாரியாகிய பெண் தெய்வத்திற்கு தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

 

3. ‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப்பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்டைத் தமிழரின் திணை நிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.


நிலம் - தொழில் உணவுப்பயிர் :

குறிஞ்சி - திணை, நெல், தேன், கிழங்கு, மலை நெல்

இன்றைய வளர்ச்சிகள்: ஏற்றுமதிப் பொருளாக உள்ளன. தேன் மருத்துவப்பொருளாகப் பயன்படுகின்றன.

நிலம் - தொழில் உணவுப்பயிர் :

மருதம் - செந்நெல் வெந்நெல்

இன்றைய வளர்ச்சிகள்: ஏற்றுமதிப் பொருளாக உள்ளன. மக்களின்

உணவுப்பொருளாக பயிரிடப்படுகிறது.

நிலம் - தொழில் உணவுப்பயிர் :

நெய்தல் - உப்பு, மீன்

இன்றைய வளர்ச்சிகள்: மீன்களைப் பதப்படுத்துதல் தொழில் உள்ளன. இத்தொழில் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.  ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உப்பு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

 

4. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்கலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.


• கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுதல்.

• கரகச் செம்பின் அடிப்பாகத்தை உபுறமாகத் தட்டி ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி செய்கின்றனர்.

• தலையில் செம்பு நிற்கும் அளவிற்கு செம்பின் உள்ளே மணலையோ பச்சரிசியையோ நிரப்புவர்.

• கண்ணாடியிலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில் கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியைச் செருகி வைப்பார்.

 

நெடுவினா


1. நெகிழிப் பைகளில் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

நெகிழிப் பைகளால் மண்ணின் வளம் குன்றுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது என்ற தகவலை பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்து பாராட்டுதலுக்குரியது. நெகிழியே நெகிழியே ஒடிப்போ! என்ற பாடலை இசையுடன் பாடியது அனைவர்க்கும் விழிப்புணர்வைத் தூண்டியது.

மரங்களின் மீது நெகிழிப்பைகள் சிக்கிக் கொள்வதால் ஒளிச்சேர்க்கை நடைபெறாது என்பதையும் வெளிப்படுத்தினார்கள். நெகிழியால் நீர்நிலை மாசடைவதையும், நீர் வாழ் உயிரினங்கள் துன்புறுவதையும் பொம்மலாட்டம் மூலம் அருமையாக விளக்கிக் கூறிய குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன். கழிவு நீர்ப் பாதையில் அடைத்து விடுவதால் பல்வேறு நோய்கள் பரவுவதையும், எரிப்பதால் வெளிவரும் நச்சு வாயு புற்று நோய் ஏற்படுத்துவதையும் பாடல்கள் மூலம் எடுத்துரைத்தது சிறப்பாக அமைந்தது இக்குழுவினருக்கும் மனமாரப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

2. நிகழ்கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் -இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்யவேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நிகழ்கலையின் வடிவங்கள்

ஒப்பனைகள்

சிறப்பும் பழைமையும்

குறைந்து வருவதற்கான காரணங்கள்

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன

முடிவுரை

முன்னுரை:-

ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன.

நிகழ்கலையின் வடிவங்கள்:-

பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும், இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், தெருகூத்து போன்றன.

ஒப்பனைகள்:-

கரகாட்டம் – ஆண், பெண் வேடமிட்டு ஆடுதல்

மயிலாட்டம் – மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்தல்

ஒயிலாட்டம் – ஒரே நிறத்துணியை முண்டாசு போலக்கட்டுதல், காலில் சலங்கை, கையில் சிறுதுணி

தேவராட்டம் – வேட்டி, தலையிலும் இடுப்பிலும் சிறு துணி, எளிய ஒப்பனை

சிறப்பும் பழைமையும்:-

வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாது, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது.

பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம் முன்னோர் காலத்திலில் இருந்த பழமை வாய்ந்த கலையாகும்.

குறைந்து வருவதற்கான காரணங்கள்:-

நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் திரைத்துறை வளர்ச்சினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன.

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:-

நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியில் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்து கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும்.

முடிவுரை:-

நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம்.

 

3. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே வணக்கம் இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கட்டும் கவி.. தண்டலை மயில்கள் ஆட...

இவ்வுரையைத் தொடர்க!

கம்பராமாயணத்தில் கம்பர் பெரும்பாலான பாடல்களில் சந்தநயம் விரவிக்காணப்படுகின்றன. கற்பவர்க்கு இனிமையும், கவிச்சுவையும் நிறைந்தவையாக இருக்கும்.

"தண்டலை மயில்களாட தாமரை விளக்கந்தாங்க,

கொண்டல்கள் முழவினோங்க குவளை கண் விழித்து நோக்க

தென்டிரை யெழினி காட்ட, தேம்பிழி மகரயாழின்

வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றி ருக்கும் மாதோ"

சோலையை நாட்டிய மேடையாகவும் மயிலை நடன மாதராகவும் குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும் தாமரை மலரை விளக்காகவும் மேகக்கூட்டங்களை மத்தளமாகவும் வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும் பார்வையாளர்களை குவளை மலர்களாகவும் சித்தரித்து தன் கவித்திறத்தை கம்பர் சிறப்பாகக் கூறுகிறார். இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறமும், தான் கையாண்ட விளக்கமும், கம்பன் தமிழுக்குக் கிடைத்த வரம் எனலாம்.

"வெய்யொன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?

ஐயோ! இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையன;"

இராமனின் அழகையும் சீதையையும் வருணிக்கும் போது சந்தநயம் சிறப்பாக அமைந்துள்ளது. இராமனது நிறம் மையோ? பச்சை நிற மரகதமோ? மறிக்கின்ற நீலநிறக்கடலோ? கார்மேகமோ? என்று இராமனின் ஒப்பந்த அழியாத அழிகினை எடுத்துக்கூறுகிறார் கம்பர்.

"ஆழ நெடுந்திரை ஆறுகடந்து அவர் போவாரோ

வேழ நெடும் படை.......

எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம் உரலில் இடிக்கும் காட்சியினை எடுத்துரைக்கும் கம்பரரின் கவித்திறம் தான் என்னே!

மேலும், உறங்குகின்ற கும்பகர்ணனை எழுப்பும் போது கீழ்க்கண்டவாறு பாடிய கம்பனின் கவித்திறம் மறக்க முழயாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

"உறங்குகின்ற கும்பகர்ணன் உங்கள் மாய வாழ்வெலாம்

இறங்குகின்றது ! இன்று காண் எழுந்திராய் ! எழுந்திராய்!

கறங்கு போல் வில்பிடித்த கால தூதர் கையிலே

உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்!


கற்பவை கற்றபின்....

1. புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயையும்

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில்,

தள்ளி நிற்கும் பிள்ளை

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்....

"அத்தனைக் காய்களையும் விற்றால்தான்

மீதி ஐந்நூறாவது மிஞ்சும்என்ன செய்ய..."

காய்கறி வாங்கியவர்

கவனக் குறைவாகக் கொடுத்த

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டுப்

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம்

என்பதை அடுத்தபடி யோசிக்கும் அவர் மனம்!

குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

2. குறிப்புகள் உணர்த்தும் குறளின் கருத்துகள் குறித்துக் கலந்துரையாடுக.

அ) அவருக்கு அறிவும் அதிகம்படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்படமுடியாது.

ஆ) எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர்யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம்.

இ) அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.

ஈ) வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக நினைத்தவர்களின் வாயை அடைக்கும்.

உ) அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது உதவ யாருமின்றித் திண்டாடுகிறார்.

 

குறுவினா


1. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர் என்பது இத்தொடரின் பொருள்

 

2. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

தஞ்சம் - நேர் நேர் - தேமா

எளியர் - நிரை நேர் - புளிமா

பகைக்கு - நிரை நேர் - புளிமா

 

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்து குறளின் கருத்து என்ன?

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் உதவி செய்ய வேண்டும். பொருள் கொடுக்க வேண்டும். இப்போது உதவி பெறுபவரின் (இருப்பவரின்) உள்ளத்தில் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 

 

4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப் போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக?

பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

• இக்குறளில் கூரான ஆயுதம் உழைத்ததால் கிடைத்த ஊதியம் ஆகும்.

• மற்ற உலக ரீதியான ஆயுதங்கள் எல்லா நேரங்களிலும் கூர்மையாக செயல்படுவதில்லை நிலையாக இருப்பதில்லை. ஆனால்உழைத்து ஈட்டிய செல்வமே எப்போதும் கூரான ஆயுதமாகத் திகழ்கிறது.

 

சிறுவினா


1. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைப் குறள் வழி விளக்குக?

தொழில் செய்வதற்கு தேவையான கருவி அதற்கு ஏற்ற காலம். செயலின் தன்மை செய்யும் முறை ஆகிறவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பரே அமைச்சர் ஆவர்.

• மனவலிமை குடிகளைக் காத்தல் ஆட்சிமுறைகளைக் கற்றல் நூல்களைக் கற்றல் விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவர்.

• ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

• மேற்கூறிய பண்புகள் நம் வாழ்விலும் இருந்தால் தான் நாமும் நம்மை ஆள முடியும்.

 

2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர். அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

• சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமல் பொருந்திய துணை இல்லாமலும் வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர் கொள்வார்?

• மனத்தில் துணிவு இல்லாதவராய் அறிய வேண்டியவற்றை அறியாதவராய் பொருந்தும் பண்பு இல்லாதவராய் பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

 தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.

 

 

 

Tags : Chapter 6 | 10th Tamil இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Questions and Answers Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்