Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 03:23 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 7 : விதைநெல் : திறன் அறிவோம்



பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

) உழவு, மண், ஏர், மாடு

) மண் , மாடு , ஏர், உழவு,

) உழவு /ஏர்/மண்/மாடு

) ஏர், உழவு, மாடு, மண்

[விடை: உழவு /ஏர்/மண்/ மாடு]

 

2. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே திருப்பதியும் திருத்தணியும்

) திருப்பதியும் திருத்தணியும்

) திருத்தணியும் திருப்பதியும்

) திருப்பதியும் திருச்செந்தூரும்

) திருப்பரங்குன்றமும் பழனியும்

[விடை: திருப்பதியும் திருத்தணியும்]

 

3. "தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்

) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

) மிகுந்த செல்வம் உடையவர்

) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

) நெறியோடு நின்று காவல் காப்பவர்

[விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்]

 

4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ----------

) நாட்டைக் கைப்பற்றல்

) ஆநிரை கவர்தல்

) வலிமையை நிலைநாட்டல்

) கோட்டையை முற்றுகையிடல்

[விடை : வலிமையை நிலைநாட்டல்]

 

5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.கருதியது சிலப்பதிகாரம்

) திருக்குறள்

) புறநானூறு

) கம்பராமாயணம்

) சிலப்பதிகாரம்

[விடை : சிலப்பதிகாரம்]

 

குறுவினா


1. பாசவர் வாசவர், பல நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

பாசவர் - வெற்றிலை விற்பவர்கள்

வாசவர் - நறுமணப் பொருட்களை விற்பவர்கள்

பல் நிண விலைஞர் - பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்.

உமணர் - உப்பு விற்பவர்

 

2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

முன்னர்தாம் நாட்டின் வளத்தையும் ஆட்சித் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் இவை அனைத்தையும் கல்லில் செதுக்கியார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்டுவதன் நோக்கமாகும்.

 

3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

• நூல் வாங்குதற்கு போதிய பணவசதியின்மையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் செல்வர்.

• விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும்

வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

• உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு

பட்டினி கிடந்திருக்கின்றார்.

• செவிவழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றிருக்கிறார்.

 

4. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

புறத்திணை - எதிர்திணை

வெட்சி - கரந்தை

வஞ்சி - காஞ்சி

நொச்சி - உழிஞை

தும்பை - வாகை

பாடாண் - பொதுவியல்

கைக்கிளை - பெருந்திணை

 

5. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

• பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார் - .பொ .சி

• பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி; சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி; சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி; விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தார் - .பொ .சி

 

சிறுவினா


1. ‘முதல் மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு..ரா. கவிபாடுகிறார்?

• முதல் மழை விழுந்தவுடன் நிலம் உழுவதற்கு பதமாகிவிட்டது

• விரைந்து சென்று, பொன் ஏரிலே காளைகளைப் பூட்டி நிலத்தை  உழுதனர். ஊக்கத்துடனும், வலிமையுடனும் உழைத்தனர். நாற்று நட்டனர்.

• மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.

 

2. அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

• இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை ஆகும்.

• மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.

• அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.

 

3. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம் சுட்டி விளக்குக?

இடம் :

இத்தொடர் சிற்றகல் ஒளி என்னும் ம.பொ.சி.யின் தன் வரலாற்றுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :

ஆந்திராவின் தலைநகரம் சென்னையாக்க வேண்டும் என்று நீதிபதி வாஞ்சுவின் கருத்து. இக்கருத்தினை எதிர்த்து ம.பொ.சி - வாதிட்டார்.

விளக்கம் :

மாநகரத்தை செங்கல்வாரயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அப்பொழுது தமிழ் மாநிலத்தின் தலைநகர் "சென்னை" என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர். முன் மொழிந்து, தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி. முழங்கினார். 25.03.1953 இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

 

4. “பகர்வனர் திர்திரு நகரவீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

கர்வனர் - ட்டினும்

) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ட்டினும் மயிரினும் - ட்டு நுண்வினா

) காருகர் - பொருள் தருக.

நெய்பவர் - நெசவாளர்

) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனமும் - அகிலும்

 

5. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வம்ச பாரம்பரியம் வியந்து ஒதுக்கப்படவில்லை; ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வம்ச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து :

இப்பத்தியானது சோழ மன்னருடைய ஆட்சி முறை ,போர் வெற்றிகள், அவனது வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறது. சாசனம் எழுந்த நிகழ்வு பற்றியும் தன் தேவியோடு நீடு வாழ்தல் போன்ற மெய்ப்புகழை எடுத்துக் கூறுகின்றது.

 

நெடுவினா


1. நாட்டுவிழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்குகுறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்

• அவையோர் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். மாணவர்களுக்கு கல்வி கற்கும் பருவத்தில். மொழி மற்றும் நாட்டுப்பற்றும் வளர வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் கல்வி கற்கும் இடத்திலிருந்து தான் உருவெடுக்கப்படுகிறது.

நம் நாட்டில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவற்றுள் முக்கியமனதாக குடியரசுத்தினம், சுதந்திர தினம் ஆகும். இவ்விரண்டையும் பெறுவதற்கு நம் முன்னோர்கள் செந்நீரையும், கண்ணீரையும் இன்னுயிரையும் இழந்ததை நாம் உணர வேண்டும்.

• நமது தேசியக் கொடி கீழே விழாமல் தாங்கிப் பிடித்த கொடிகாத்த குமரனும், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்ட வாஞ்சி நாதனும் மறக்க முடியாதவர்கள். வாஞ்சிநாதனை தமிழகத்தின் பகத்சிங்" என அழைக்கப்பட்டார்.

• அகிம்சை, அந்நிய துணிக்கடை மறியல், தீண்டாமை விலக்கு , கதராடை விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறந்து விடக் கூடாது. தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா, மருது பாண்டியர்கள், சுபாஷ், படேல், திலகர் போன்றோர் இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்தனர். பெண் விடுதலை வீரர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வாழ வேண்டும். அவ்வாறல்லாமல் "தன்பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம்" என்று கடுகு போன்ற உள்ளமுடையவர்களாக வாழக்கூடாது நம் சமுதாயம். வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடின்றி வாழ வேண்டும். நாட்டு விழாவில் நம் தேசியக் கொடியை உளமாற மதிக்க வேண்டும்.

• மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

• நமக்கு பிறர் எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதனை நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் தான் உள்ளது.

• நாட்டுப்பற்று உடையவர்களாலேயே பொருளாதாரம், தொழில் முதலியவற்றை வளர்ச்சி அடையச் செய்ய முடியும். மாணவர்களின் முக்கிய கடமை இன்றைய காலக்கட்டத்தில் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதேயாகும். இந்தியாவை அச்சுறுத்தக்கூடிய தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு மாணவ சமுதாயம் நல்ல பல யுத்திகளைக் கையாண்டு உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்கள் நாட்டு ஒருமைப்பாடுடன் செயல்பட்டால் நாடும் முன்னேறும் வீடும் முன்னேறும், புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

 

2. பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.

திரண்ட கருத்து

இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டுப்பேரும் ஒருருவம் பெற்றது போல் ஆட்சி செலுத்தினான் சோழன். அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை)

மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் - அதாவது கொடி உடையவனாக உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை). வண்டுகள் மட்டுமே கள் உண்ணுகின்றன - அதாவது தேன் உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை). மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது (மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை).

நீண்ட மலைகளே இருள் சூழ்ந்திருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை). இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித்தாயாரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பொதிந்து (மறைந்து) இருக்கின்றது. (யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.

அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.

மையக்கருத்து :

இரண்டாம் இராசராசன் காலத்தில் அவர் நாட்டில் வாழும் மக்கள் மற்றும் எல்லா உயிர்களும் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்ந்தனர் என்பதை இப்பாடல் தெளிவாக விளக்குகின்றது.

மோனை நயம் :

செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயமாகும்.

சான்று: மாவே யற்புலவரே

மாமலரே இசைப் புலவரே

எதுகை நயம் :

செய்யுளில் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயமாகும்.

சான்று :

ந்திரன் படியானையே கற்குலமே விழிபெற்ற

ந்தபடி வடிமணிச் இற்புலவரே மொழி பெற்ற

இயைபு நயம் :

செய்யுளில் அடி தோறும் இறுதி சீரோ இறுதி எழுத்தோ ,இறுதி அசையோ ஒன்று போல் இயைந்து வருவது இயைபுத்தொடை நயமாகும்.

சான்று : பிணிப்புண்பன

யாற்றுவ

வகுப்படுவன

கலக்குண்பன

சிறைப்படுவன

சந்த நயம் :

இப்பாடல் பாடுவதற்கு இனிமையாகவும், பொருள் புரிவதற்கும் எளிமையாகவும் அழகிய சந்த நயத்துடன் காணப்படுகிறது.

அணிநயம் :

இப்பாடலில் உயர்வு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது. இராசராசன் நாட்டைக் காக்கும் தன்மையை உயர்வாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, இப்பாடல் உயர்வு நவிற்சியாணியாயிற்று.

 

3. சிலப்பதிகார மருவூர் பக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக?

• சிலப்பதிகாரம் மருவூர்ப் பாக்கத்து வணிக வீதிகளில் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன. குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இங்கு விற்கப்படுகின்றன.

• மருவூர்ப் பாக்க வீதிகளில் பொன், மணி, பவளம், முத்து விற்பனை செய்யப்பட்டது போல இன்றைய வணிக வளாகத்திலும் நகைக் கடைகளிலும் விற்கப்படுகிறது

• அன்று வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்தது. தானிய வகைகள். இன்று அங்காடிகளில் தானிய வகைளை எடைபோட்டு விற்பனை செய்கின்றனர். மருவூர்ப்பாக்கத் தெருக்களில் செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகிறது.

• வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப் பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைப்பதைப் போல, இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது. கூடுதலாக பல நவீனப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருட்கள், நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

• மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், தையற்காரர், துணியாலும் கட்டையாளும் பொம்மை செய்பவர்கள் என பல கைவினைஞர்கள் வாழ்ந்து வந்தனர். இதைப் போலவே இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகைய தொழில் வல்லுநர்களும், அழகு மிளிர கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

 

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் : பள்ளிக் கலையரங்கம் நாள் : 8.3.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் - தலைமையாசிரியரின் வரவேற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை - மாணவத் தலைவரின் நன்றியுரை.

மகளிர் நாள் விழா

எம் பள்ளிக் கலையரங்கில் 8.3.2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவினைப் பற்றிய அறிக்கையாவது.

இடம் : பள்ளி கலையரங்கம்

நாள் : 08.03.2019

மார்ச் 8 ஆம் நாள் 2019 ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் உள்ள தியாகராசர் மேல் நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

காலை 10 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் சமுதாயத்தில் முன்னேறியுள்ள சில பெண்களைப் பற்றியும் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளையும் வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பல நடந்தன. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினரையும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வாழ்த்திப் பேசினார். பின்பு பள்ளியின் மாணவத் தலைவன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சி காலை 12.30 மணியளவில், நாட்டுப்பண் முழங்க இனிதுடன் விழா நிறைவடைந்தது.


Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Questions and Answers Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்