Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 03:17 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்!

படித்தும் பார்த்தும் சுவைக்க.


ஏர்பிடிக்கும் கைகளுக்கே

வாழ்த்துக் கூறுவோம் - வறுமை

ஏகும் வரை செய்பவர்க்கே

வாழ்த்துக் கூறுவோம்! என்றும்

ஊர் செழிக்கத் தொழில் செய்யும்

உழைப்பாளிகள் - வாழ்வு

உயரும் வகை செய்பவர்க்கே

வாழ்த்துக் கூறுவோம்!

- கவி.கா.மு. ஷெரீப்

 

மொழி பெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam Literature, the Marutam region was the fit for cultivations, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.

தமிழ் நாட்டில் உள்ள சங்கத்தமிழ் இலக்கியங்களில் ஐந்து புவியியல் பிரிவுகள் உள்ளன. இவற்றுள் மருத நிலப்பகுதி உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. ஆந்த நிலப்பகுதியில் உழவர்களின் வளமை, சூரிய ஒளி, பருவத்தாலே மழை, மண் வளம் முதலியவற்றை நம்பி இருந்தது. பழங்காலத் தமிழர்களின் கணிப்புப்படி இயற்கை உறுப்புகளிலும் சூரிய ஒளியே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

(வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

2. எங்கள் ஊர் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது

3. எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு சுட்டித்தனம் கொஞ்சம் அதிகம்

4. காவல் துறையினரிடம் திருடன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான்

5. எனக்குத் துரோகம் செய்தவர்களை நிரந்தரமாக மறக்க நினைக்கிறேன்.

 

தொகைச் சொற்களை பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.


தொகைச்சொல் : எண்ணுரு : தொகைச்சொல் விரி

1. இருதிணை

இரண்டு + திணை (இரண்டு – ௨)

உயர்திணை, அஃறிணை

2. முத்தமிழ்

மூன்று + தமிழ் (மூன்று – ௩)

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

3. முப்பால்

மூன்று + பால் (மூன்று – ௩)

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

4. நாற்றிசை

நான்கு + திசை (நான்கு – ௪)

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு

5. ஐந்திணை

ஐந்து + திணை (ஐந்து – ௫)

குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை, பாலைத்திணை

6. அறுசுவை

ஆறு + சுவை (ஆறு – சா)

இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு

 

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் :

இரா. மணிகண்டன்,

67 வடக்கு மாசி வீதி,

மதுரை - 1.

பெறுநர் :

ஆசிரியர் அவர்கள்,

தி இந்து நாளிதழ்,

மதுரை - 2.

மதிப்பிற்குரிய ஐயா

பொருள் :- "பொங்கல் மலரில் " என் கட்டுரையை வெளியிட வேண்டுதல் சார்பாக.

வணக்கம்

தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன் . அக்கட்டுரையைத் தங்களுக்கு அனுப்பிள்ளேன். அதனைப் படித்துப் பார்த்தால், உழவர்களைப் போற்றதும் கருத்தினை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளேன். இதன் சிறப்பினை உணர்ந்து தாங்கள் என் கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடுகின்ற சிறப்பு மலரில் வெளியிட ஆவன செய்யும் படி தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு,

இரா. கண்ணன்.

இடம் : மதுரை

நாள் - 24.4.2019

உறைமேல் முகவரி :

பெறுநர் :

ஆசிரியர் அவர்கள்,

தி இந்து நாளிதழ் ,

மதுரை - 2.

 

கவிதையை உரையாடலாக மாற்றுக.

மகள் சொல்லுகிறாள்:-

அம்மா என் காதுக்கொரு தோடு - நீ

அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாது - நான்

சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

தாய்சொல்லுகிறாள்:-

காதுக்குக் கம்மல் அழகன்று - நான்

கழறுவதைக் கவனி நன்று

நீதர் மொழியை வெகுபணிவாய் - நிதம்

நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!

மகள் மேலும் சொல்லுகிறாள்

கைகிரண்டு வளையல் வீதம் - நீ

கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!

பக்கியென் றென்னை யெல்லோரும் - என்

பாடசாலையிற் சொல்ல நேரும்!

தாய் சொல்லும் சமாதானம் :

வாரா விருந்து வந்த களையில்அவர்

மகிழ உபசரித்தல் வளையல்!

ஆராவமுதே மதிதுலங்குபெண்ணே

அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு!

பின்னும் மகள்:

ஆபரணங்கள் இல்லை யானால்என்னை

யார் மதிப்பார் தெருவில் போனால்?

கோபமோ அம்மா இதைச் சொன்னால் - என்

குறை தவிர்க்க முடியும்

அதற்குத் தாய் :

கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக்

கல் வைத்த நகைதீராத ரணம் !

கற்ற பெண்களை இந்த நாடு - தன்

கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!

- பாரதிதாசன்.

மகள் :

அம்மா! என் காதுக்கு ஒரு தோடு வாங்கித் தாங்கம்மா தோடு இல்லாமால் வெறுங்காத்தோடு என்னால் இருக்க முடியாது. சொல்லிட்டேன்.

அம்மா :

மகளே! காதுக்கு கம்மல் அழகல்ல. நான் இப்பபோது கூறுவதை நன்றாகக் கவனி - சான்றோரின் மொழிகளை பணிவுடன் கேட்டு உன் காதில் அணிந்து கொள்.

மகள் :

கைக்கு இரண்டு வளையல்கள் கடன் வாங்கியாவது எனக்கு வாங்கித்தா அம்மா. பக்கி வளையல் இல்லையா என்று பள்ளியில் என்னை எல்லோரும் கேலி செய்கிறார்கள்.

அம்மா :

மகளே! வராத விருந்தினர் கூட வந்தாலும் கையில் வளையல் அணிந்து தான் உபசரிக்க வேண்டும் என்பதில்லை. அறிவார்ந்த மகளே கேள்! அவர்கள் சொல்லும் வளையலானது உனக்கு கைவிலங்கு ஆகும்.

மகள் :

அணிகலன்கள் இல்லாமல் சென்றால் என்னை யாரும் தெருவில் மதிக்க மாட்டார்கள். யார் தான் என்னை மதிப்பர்? இதைச் சொன்னால் உனக்கு கோபம் வருகிறது நீ நினைத்தால் என் குறையைப் போக்க முடியும்.

அம்மா :

கல்விதான் பெண்களுக்கு உண்மையான அணிகலனாகும். சிவப்பு இரத்தினக்கல் வைத்த நகை ஆராத ரத்தத்தைப் போன்றது. கல்வியைக் கற்ற பெண்களை இந்த நாடு கண்ணுக்குள் வைத்துப் போற்றும் என்பதனை உணர்ந்து கொள்.

 

மொழியோடு விளையாடு

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.

புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை

எ.கா. தஞ்சாவூர் - தஞ்சை

புதுக்கோட்டை - புதுகை

திருச்சிராப்பள்ளி - திருச்சி

உதகமண்டலம் - உதகை

கோயம்புத்தூர் - கோவை

நாகப்பட்டினம் - நாகை

புதுச்சேரி - புதுவை

கும்பகோணம் - குடந்தை

திருநெல்வேலி - நெல்லை

மன்னார்குடி - மன்னை

மயிலாப்பூர் - மயிலை

சைதாப்பேட்டை - சைதை

 

படம் தரும் செய்தியை பத்தியாக தருக.


பகை கொண்ட இரு நாட்டு அரசர்களும் எதிர்த்துப் போரிட்டு பகைவர்களின் நாட்டினைக் கைப்பற்ற வேண்டும் எண்ணத்தோடு செல்வதாக அமைந்துள்ளது. கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவினைச் சூடிக் கொண்டு போர்ப் பாறையை முழங்குவது போல் காட்சி அளிக்கிறது. முப்படைகள் மட்டுமே போருக்குச் செல்வது போல் காட்சியளிக்கப்பட்டுள்ளது. இப்படம் நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூரில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு சுவரோவியம் ஆகும்.

 

அகராதியில் காண்க.

மிரியல், வருத்தனை, அதசி, துரிஞ்சில்

மிரியல் - மிளகு

அதசி - சணல்

வருந்தனை - பெருகுதல்

துரிஞ்சல் - உசில மரம், வெளவால் வகை

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


வைகறையில் துயில் எழுந்து

வயலிலே உழவு செய்து

நெற்றி வியர்வை நிலத்திலே சிந்த

பசித்தவனுக்குப் பசியாற்ற

சந்ததிகள் செழித்து வளர

கரம் நீட்டிக் கொடுக்கும் வள்ளலே உழவன்

உழைப்பவன் அழகன்

உழைப்பவன் ஒப்பில்லா அன்னையாவான்

உழைப்போம் உழவரைப் போற்றுவோம்.

 

கலைச்சொல் அறிவோம்

Consulate - துணைத்தூதரகம்

Patent - காப்புரிமை

Document ஆவணம்

Guild - வணிகக் குழு

Irrigation - பாசனம்

Territory - நிலப்பகுதி

 

நிற்க அதற்குத் தக...

அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியவர் பெயர், நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த, பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை.

அது போல கோவில்களும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும். அவைநாம் பழம் பெருமையும் வரலாற்றையும் அறியச் செய்யும் ஆவணங்கள் என்று அறிவீர்கள் தானே? இவற்றைப் பராமாரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள்...


கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை என் நண்பர்களுக்குக் கூறுவேன்.

கல்வெட்டுகள் குறித்து அவர்களைப் பெருமிதம் அடையச் செய்வேன்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுச் செய்திகளை மக்களுக்கு எடுத்துறைப்பதுடன் வரலாற்றின் பெருமைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன்.

அவற்றின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற அனுமதிக்கமாட்டேன்.

வரலாற்று சாசனம் என்பபை உணரச் செய்வேன்.

நினைவுச் சின்னங்கள் திருடு போவதற்கு அனுமதிக்க மாட்டேன்.

 

அறிவை விரிவு செய்

என் கதை – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்

நாற்காலிக்காரர் – ந. முத்துசாமி


 

இணையத்தில் காண்க.

http://www.maposi.in/ 

(.பொ.சி. யின் இணையத்தளம்)

http://www.tamilvu.org/slet/

lA100/lA100pd2.jsp?bookid = 180&pno = 40 (கு..ரா. கவிதைகள்)

http://www.varalaaru.com/

design/article.aspx?ArticleID = 124 (வரலாற்றாய்வு  மெய்கீர்த்திகள்)

http://silapathikaram.com/blog/?tag = மருவூர்ப்பாக்கம்


Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Tamil Language Exercise - Questions and Answers Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்