அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தொழிலகங்கள் | 8th Social Science : Geography : Chapter 6 : Industries
அலகு -6
தொழிலகங்கள்
கற்றலின்
நோக்கங்கள்
>தொழிலகங்களின்தன்மைகள்மற்றும் அவற்றின்முக்கியத்துவத்தைப் பற்றி
புரிந்து கொள்ளல்
>பொருளாதார நடவடிக்கைகளின் பொதுவான வகைப்பாடுகளை புரிந்து கொள்ளல்
>தொழிலகங்களின் அமைவிடத்தின் காரணிகளை அடையாளம் காணல்
>தொழிலகங்களின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளல்
அறிமுகம்
அன்பு மற்றும் கபிலன் இருவரும் உங்களைப் போன்றே எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மழை பெய்யத் துவங்கியது. அவர்கள் தங்கள் வகுப்பறையை நோக்கி ஓட ஆரம்பித்தனர். மழையினால் அன்பு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ் தங்க திட்டமிட்டு கபிலனை அழைத்தான். ஆனால் கபிலன் மரத்தை மின்னல் தாக்கக்கூடும் என வரமறுத்தான். கடைசியில் இருவரும் அவர்கள் வகுப்பறையை அடைந்தனர். வகுப்பறையில் ஒரு புதிய பருத்தியினாலான துவாளையைக் கண்டனர். அவர்கள் இருவரும் தங்களுடைய தலையைப் பருத்தியினாலான துவாளையைக் கொண்டு துடைத்து கொண்டனர். வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் ஆசிரியர் கொண்டு வந்த துவாளையை நீங்கள் இருவரும் ஈரமாக்கி விட்டீர்கள் என்றனர். எனவே ஆசிரியர் தங்களைத் கண்டிக்க கூடும் என நினைத்து ஆசிரியரைத் திருப்திபடுத்தும் பொருட்டு கபிலன் ஆசிரியரிடம் சில கேள்விகளைக் கேட்டான். "மேடம்", இந்த துவாளை மிகவும் அழகாகவும் வண்ண மயமாகவும் இருக்கிறது. இதை எங்கிருந்து வாங்கினீர்கள்? இது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?" என ஆசிரியரிடம் கேட்க, ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியாக இவை எவ்வாறு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை விளக்கத் தொடங்கினார்.