நோட்டா என்றால் என்ன?
(மேற்கண்டவர்களுள் எவருமில்லை)
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்களரின் உரிமை.
நமது அரசியல் முறைமையைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்னவெனில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது என்பதாகும். இதனால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 'மேற்கண்ட எவருமில்லை' (NOTA) எனும் வாய்ப்பினை வாக்காளர்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டது.
'நோட்டா' அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை எதிர்மறை வாக்கினை செலுத்த விரும்பும் வாக்காளர்களுக்கு தனி வாக்குச் சீட்டு தரப்படுவதுடன் ஓர் பதிவேட்டில் அவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961-ன் பிரிவு 49(0) கூறுவது என்னவெனில் ஓர் வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை 17A படிவத்தில் பதிவு செய்த பின்னர் எதிர்மறை வாக்கினைச் செலுத்தலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
'நோட்டாவைப்' போன்று முன்னரே வேறொரு அம்சம் இருந்ததை நீங்கள் அறிவீர்களா? அது 'எதிர்மறை வாக்களித்தல்' (Negative Voting) என அழைக்கப்படுகிறது. மேற்கண்டவர்களுள் எவருமில்லை (None of the abore - NOTA)-தேர்த லில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்களரின் உரிமை.
உங்களுக்குத் தெரியுமா?
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தரப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலின் இறுதியில் நோட்டா வாய்ப்பு தரப்பட்டள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
நோட்டாவை அனுமதிக்கும் நாடுகளை அறிவீர்களா?
கொலம்பியா, உக்ரைன், பிரேசில், வங்கதேசம், பின்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சிலி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் நோட்டாவைப் பின்பற்றின. சில சமயங்களில் அமெரிக்காவும் இதனை அனுமதித்தது. 1975-ம் ஆண்டு முதல் டெக்சாஸ் மாகாணம் இந்த அம்சங்களைப் பின்பற்றி வருகிறது.