Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire

   Posted On :  18.04.2022 07:09 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -2 : முகலாயப் பேரரசு

பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம்

பானிப்பட் போரில் (1526) இப்ராகிம் லோடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாபர் 1526இல் முகலாயப் பேரரசை நிறுவினார். ஹுமாயூனின் உறுதியற்ற இயல்பும் கன்னோஜ் போரில் ஷெர்சா அவரை வெற்றி கொண்டதும் ஷெர்ஷாவின் திறன் மிகுந்த நிலவருவாய் நிர்வாகமும் நிறுத்தல்,முகத்தல் அளவுகளை அவர் தர அளவுப்படுத்தியதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பாடச்சுருக்கம்


பானிப்பட் போரில் (1526) இப்ராகிம் லோடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாபர் 1526இல் முகலாயப் பேரரசை நிறுவினார். ஹுமாயூனின் உறுதியற்ற இயல்பும் கன்னோஜ் போரில் ஷெர்சா அவரை வெற்றி கொண்டதும் ஷெர்ஷாவின் திறன் மிகுந்த நிலவருவாய் நிர்வாகமும் நிறுத்தல்,முகத்தல் அளவுகளை அவர் தர அளவுப்படுத்தியதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 


ஹுமாயூன் பேரரசை மீட்டல், அவரின் திடீர் மரணம், பைராம்கானைப் பகர ஆளுநராகக் கொண்டு அக்பர் அரியணை ஏறுதல், சூர்வம்சத்தின் சிறந்த தளபதியான ஹெமுவை பானிப்பட் போரில் (1556) தோற்கடித்தல் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. 

அக்பருடைய இராணுவப் படையெடுப்புகளும், அவருடைய சமயக் கொள்கையும் விவரிக்கப்பட்டுள்ளன. 

அரசு நிர்வாகத்தில் ஜஹாங்கீரின் அக்கறையற்ற போக்கு முகலாய அரசவையில் அவருடைய மனைவி நூர்ஜகானின் மேலாதிக்கம் ஏற்படக் காரணமாக இருந்தது விளக்கப்பட்டுள்ளது.

முகலாயர் ஆட்சியை ஷாஜகான் தக்காணப் பகுதிக்கு விரிவுபடுத்தியதும் அதன் விளைவாக மராத்தியரோடு ஏற்பட்ட மோதலும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன. 

ஔரங்கசீப்பின் படையெடுப்புகள் முகலாயப் பேரரசின் விரிவாக்கத்திற்கு உதவிய போதிலும், ரஜபுத்திரர், மராத்தியர், சீக்கியர் ஆகியோருக்கு எதிராக அவர் பின்பற்றிய கொள்கைகள் அவர்களின் எதிர்ப்பைத் தூண்டி பேரரசின் சரிவுக்கு இட்டுச் சென்றது விவரிக்கப்பட்டுள்ளது. 

முகலாய நிர்வாகத்திற்கு அரசர் தலைமையேற்றதும் அவருக்கு உதவிய பல அதிகாரிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அக்பருடைய மன்சப்தாரி முறையும், ஜப்த் முறையின்படி ராஜா தோடர்மால் தமது நிலவருவாய் கொள்கையை வடிவமைத்ததும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பண்பாட்டு வளர்ச்சிக்கான முகலாயரின் பங்களிப்பு குறிப்பாகக் கலை, கட்டடக் கலைக்கான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சொற்களஞ்சியம் 

1. போர்ப்பயணம் - expedition - a journey undertaken with the purpose of war

2. நீண்ட – prolonged - lengthy

3. அடக்குதல் – subdued - conquered 

4. கலகக்கார – rebellious - showing a desire to resist authority

5. மதிப்பளித்தல் – bestowed – awarded

6. பாரம்பரிய – hereditary - inheritance of a title, office, or right

7. நீடித்த / நீடித்த காலம் – Enduring - lasting over a period of time



மூலாதார நூல்கள்

1. Satish Chandra, History of Medieval India 800-1700, Orient Blackswan, New Delhi, 2007, 

2. J.L. Mehta, Advanced Study in the history of Medieval India: Mughal Empire, Vol. II, 1526-1707, Sterling Publishers, 2011. 

3. Harbans Mukhia, The Mughals of India, Blackwell Publishing, New Delhi, 2009. 

4. Abraham Eraly, The Emperors of Peacock Throne, Penguin, 2007.


Tags : The Mughal Empire | Term 2 Unit 2 | History | 7th Social Science முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire : Summary, Glossary The Mughal Empire | Term 2 Unit 2 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -2 : முகலாயப் பேரரசு : பாடச்சுருக்கம், சொற்களஞ்சியம் - முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் பருவம் அலகு -2 : முகலாயப் பேரரசு