வரலாறு - பாடச் சுருக்கம் - பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation
பாடச்
சுருக்கம்
• இந்தியாவின் வரலாறு வரலாற்றுக்கு முந்தைய
காலகட்டத்தில் ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்குகிறது.
•
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து
ஏராளமான மக்கள் குழுக்கள் இந்நிலப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இக்குழுக்கள் சுற்றுச்சூழலுக்கு
ஏற்ப தகவமைத்துக் கொண்டு, தனிச்சிறப்புடன் கூடிய வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொண்டார்கள்.
•
கைக்கோடரிகளைப் பயன்படுத்திய மனிதர்கள்
இந்தியாவில் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார்கள். இடைக்கற்காலத்திலிருந்து
வெவ்வேறு சமூகங்கள் இந்தியாவெங்கும் பரவி, இந்தியாவின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கினார்கள்.
•
இந்த அனைத்துக்குழுக்களின் கூட்டான பங்களிப்பு
பன்மைத்துவம் வாய்ந்த இந்தியப் பண்பாட்டுக்குச் செழுமை சேர்த்துள்ளது.
•
இந்தியாவின் வெவ்வேறுபட்ட மொழிகளும்
பண்பாடுகளும் இந்திய வரலாற்றோடு தொடர்புடைய சிக்கலான செயல்முறையைச் சுட்டுகிறது.
•
முதல் நகரமயமாக்கம் சிந்து பகுதியை மையமாகக்
கொண்டு ஏறத்தாழ பொ.ஆ.மு. 2600இல் நிகழ்ந்தது. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில்
ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு,
வேறு பகுதிகளில் இருந்தன.