வரலாறு - பாடச் சுருக்கம் - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் | 11th History : Chapter 18 : Early Resistance to British Rule
பாடச் சுருக்கம்
• கம்பெனி அரசுக்கு எதிராக ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் எதிர்ப்பும் அது எவ்வாறு ஆங்கிலேய மைசூர் போர்களுக்கு இட்டுச் சென்றது என்பதும் விளக்கப்பட்டுள்ளன.
• புலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், அனைத்து தென்பகுதிப் பாளையக்காரர்கள், கொங்கு பகுதியின் தீரன் சின்னமலை ஆகியோரின் கிளர்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
• வேலூரில் சிறைவைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்களின் ஆதரவோடு தென்பகுதிப் பாளையக்காரர்கள் தென்னிந்தியாவின் அரசபதவி பறிக்கப்பட்ட அரசர்களோடு இணைந்து இறுதிப் போரை நடத்தியது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
• அரசுரிமை பறிக்கப்பட்ட அரசர்கள், பதவி இழந்த ஜாகீர்தார்கள், ஜமீன்தார்கள், விவசாயிகள் 1857 இல் மேற்கொண்ட பெருங்கிளர்ச்சியும் அது எவ்வாறு ஆங்கிலப் பேரரசின் அடித்தளத்தை ஆட்டங்காண வைத்தது என்பதும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
• 1858 ஆம் ஆண்டு ராணியாரின் பிரகடனத்தின் அடிப்படையில் இந்தியா ஆங்கில முடியரசுக்கு மாற்றப்பட்டதும், பிரகடனத்தின் சிறப்பியல்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.