வரலாறு - பாடச் சுருக்கம் - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period
பாடச் சுருக்கம்
•
இந்தியாவில் அலெக்சாண்டர் இறந்த பிறகு, அவரது தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வட மேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
• செலுசியப் பேரரசு வலுவிழந்தது. அதன் ஒரு விளைவாக, அவரை அடுத்து வந்த ஓரிருவருக்குப் பிறகு, இந்தோ - கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவரான மினாண்டர் பேரரசை ஆட்சி செய்தார்.
• இந்தோ - கிரேக்க அரசாட்சி சாகர்களாலும் அதைத் தொடர்ந்து பார்த்தியர் மற்றும் குஷாணர்களால் அகற்றப்பட்டது. தங்களின் ஆட்சிப் பகுதிகளை ஆள்வதற்கு சத்ரப்கள் அல்லது மாகாண ஆட்சியாளர்களை சாகர்கள் நியமித்தனர்.
• சாகர் ஆட்சியாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர் ருத்ரதாமன். அவருக்குப் பிறகு சாகர்களை, பார்த்தியர்கள் குடிபெயரச் செய்தனர்; பார்த்தியரைத் தொடர்ந்து குஷாணர்கள் வந்தனர்.
• குஷாணர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர். பௌத்தத்தின் மகாயானப் பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
• அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், நாகார்ஜுனர் ஆகிய பௌத்தத் தத்துவஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
• தென்னிந்தியாவில் சாதவாகனர் அரசாட்சி பொ.ஆ. முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழ்ப் பகுதியில் (சோழ, சேர, பாண்டிய) மூவேந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
• தமிழ்நாட்டுக்கும் ரோமுக்கும் இடையே வணிகம் வளர்ச்சி அடைந்தது. சோழமண்டலக் (கிழக்குக்) கடற்கரையில் புகார் நகரம் ஒரு முக்கியமான துறைமுகமாக விளங்கிற்று. யவன வணிகர்கள் துறைமுக நகரங்களில் வாழ்ந்தனர்.