Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

பாடச் சுருக்கம்

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நடைமுறைப்படுத்திய நில, வருவாய்ச் சீர்திருத்தங்கள் இந்திய வேளாண்மைச் செயல்பாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

பாடச் சுருக்கம்

• பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நடைமுறைப்படுத்திய நில, வருவாய்ச் சீர்திருத்தங்கள் இந்திய வேளாண்மைச் செயல்பாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

• இங்கிலாந்தில் கனரக இயந்திரத் தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற்றதால் கம்பெனி இந்தியாவிலிருந்து கச்சாப் பொருட்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கு உற்பத்தி செய்யப்பட்டப் பண்டங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. இச்செயல்பாடு இந்தியக் கைவினைத் தொழில்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதனால் கைவினைத் தொழிலாளர்கள் வேலையிழந்தவர்களாக ஆக்கப்பட்டனர்.

• நிலமற்றத் தொழிலாளர்களும், வேலையில்லாக் கைவினைஞர்களும் பட்டினிச் சாவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆங்கிலப் பேரரசின் காலனிகளுக்குக் குடிபெயர்ந்தனர்.

• ஆங்கிலேயர் அறிமுகம் செய்த மேலைக்கல்வியின் விளைவாகக் கற்றறிந்த இந்தியர்கள் எனும் ஒரு வகுப்பு உருவாகி, இந்தியச் சமூகத்தின் சீர்திருத்தங்களுக்காகப் போராடியது.

• 1857ஆம் ஆண்டு பற்றிய கசப்பான நினைவுகள், இனப் பாகுபாட்டுக் கொள்கை கருத்துவேறுபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகிய காரணிகள் தேசியவாதம் வளர்வதற்குப் பங்களிப்புச் செய்தன.

• நவீன கற்றறிந்த வகுப்பினர், தங்களின் கருத்துகளையும் குறைகளையும் எடுத்துரைக்க , சென்னைவாசிகள் சங்கம் (1852) சென்னை மகாஜன சங்கம் (1884) இந்திய தேசிய காங்கிரஸ் (1885) ஆகிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினர்.

• பொதுமக்களுக்கு காலனியாட்சியின் சுரண்டலையும் அது அன்றாட வாழ்க்கையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கற்பிப்பதே தலைவர்களின் தலையாயப் பணிகளில் ஒன்றாக அமைந்தது. தாதாபாய் நௌரோஜியால் முன்வைக்கப்பட்ட செல்வச் சுரண்டல் கோட்பாடு இந்தியாவின் செல்வ வளத்தை ஆங்கிலேயர் கொள்ளையடிப்பதை வெட்டவெளிச்சமாக்கியது.

• பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நடைமுறைப்படுத்திய நில, வருவாய்ச் சீர்திருத்தங்கள் இந்திய வேளாண்மைச் செயல்பாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

• இங்கிலாந்தில் கனரக இயந்திரத் தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற்றதால் கம்பெனி இந்தியாவிலிருந்து கச்சாப் பொருட்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கு உற்பத்தி செய்யப்பட்டப் பண்டங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. இச்செயல்பாடு இந்தியக் கைவினைத்

• தொழில்களின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதனால் கைவினைத் தொழிலாளர்கள் வேலையிழந்தவர்களாக ஆக்கப்பட்டனர்.

• நிலமற்றத் தொழிலாளர்களும், வேலையில்லாக் கைவினைஞர்களும் பட்டினிச் சாவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆங்கிலப் பேரரசின் காலனிகளுக்குக் குடிபெயர்ந்தனர்.

• ஆங்கிலேயர் அறிமுகம் செய்த மேலைக்கல்வியின் விளைவாகக் கற்றறிந்த இந்தியர்கள் எனும் ஒரு வகுப்பு உருவாகி, இந்தியச் சமூகத்தின் சீர்திருத்தங்களுக்காகப் போராடியது.

• 1857ஆம் ஆண்டு பற்றிய கசப்பான நினைவுகள், இனப் பாகுபாட்டுக் கொள்கை கருத்துவேறுபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகிய காரணிகள் தேசியவாதம் வளர்வதற்குப் பங்களிப்புச் செய்தன.

• நவீன கற்றறிந்த வகுப்பினர், தங்களின் கருத்துகளையும் குறைகளையும் எடுத்துரைக்க , சென்னைவாசிகள் சங்கம் (1852) சென்னை மகாஜன சங்கம் (1884) இந்திய தேசிய காங்கிரஸ் (1885) ஆகிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினர்.

• பொதுமக்களுக்கு காலனியாட்சியின் சுரண்டலையும் அது அன்றாட வாழ்க்கையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கற்பிப்பதே தலைவர்களின் தலையாயப் பணிகளில் ஒன்றாக அமைந்தது. தாதாபாய் நௌரோஜியால் முன்வைக்கப்பட்ட செல்வச் சுரண்டல் கோட்பாடு இந்தியாவின் செல்வ வளத்தை ஆங்கிலேயர் கொள்ளையடிப்பதை வெட்டவெளிச்சமாக்கியது.

Tags : Rise of Nationalism in India | History இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு.
12th History : Chapter 1 : Rise of Nationalism in India : Summary Rise of Nationalism in India | History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி : பாடச் சுருக்கம் - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.