தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics
பாடச் சுருக்கம்
• பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதம் சமய
சீர்திருத்த இயக்கங்களோடு அடையாளப்படுத்தப்பட்டது, ஆரிய சமாஜம் மற்றும் பிரம்மஞான சபை
போன்றவை இந்து மதத்தையும், வாஹாபி மற்றும் கிலாபத் இயக்கங்கள் இஸ்லாம் மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தின.
• பசு பாதுகாப்பு சங்கங்கள் பசுவதையைத் தடுப்பதற்கு
எடுத்த முயற்சிகள் கலவரங்கள் ஏற்படவும், வகுப்புவாதம் பரவவும் வழிவகுத்தன.
• அரசியலில் மதம் பயன்படுத்தப்பட்டதும், வட
இந்தியாவில் அது ஏற்படுத்திய தொடர் தாக்கங்களும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே
பிரிவினையை ஏற்படுத்தியது.
• ஜின்னா தன் பிடிவாதத்தால் அமைச்சரவை தூதுக்குழுவின்
திட்டத்தை ஏற்று ஒரு முடிவுக்கு வராமல் நேரடி நடவடிக்கை நாளுக்கு அழைப்பு விடுத்ததால்
1946இல் கல்கத்தாவில் உள்நாட்டுப் போர் போன்ற நிலை உருவாகி, இறுதியில் நாட்டினை இந்தியா,
பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிவினை செய்யும் நிலைக்கு இட்டுச்சென்றது.