Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | வின்டோஸின் பல்வேறு பதிப்புகள்
   Posted On :  23.09.2022 03:14 am

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

வின்டோஸின் பல்வேறு பதிப்புகள்

விண்டோஸ் இயக்க அமைப்பில், விசைப்பலகை மற்றும் சுட்டி ஆகிய இரண்டையும் உள்ளீட்டு சாதனங்களாகப் பயன்படுத்தலாம்.

வின்டோஸின் பல்வேறு பதிப்புகள்


விண்டோஸ் இயக்க அமைப்பில், விசைப்பலகை மற்றும் சுட்டி ஆகிய இரண்டையும் உள்ளீட்டு சாதனங்களாகப்  பயன்படுத்தலாம். சுட்டியை பணிக்குறிகளில் கிளிக் செய்வதன் மூலம், விண்டோஸ்-ல் கூறுகளுடன் எளிதில் செயல்பட முடியும். விசைப்பலகை, எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு  குறியீடுகளை உள்ளிடப் பயன்படுகிறது.


விண்டோஸ் இயக்க அமைப்பின் சில  செயல்பாடுகள்

 

சொற்செயலிகள், அட்டவணைச் செயலிகள், கணிப்பான், விளையாட்டுகள் போன்ற பயன்பாடுகளை இயக்குவதற்கு. 


கணிப்பொறியில் புதிய பயன்பாடுகளை நிறுவுவதற்கு. 


அச்சுப் பொறி, வருடி, சுட்டி, இலக்க வகை கேமரா போன்ற வன்பொருள்களை மேலாண்மை செய்வதற்கு. 


கோப்பு மற்றும் கோப்புறைகள் உருவாக்குதல், பதிப்பாய்வு செய்தல், சேமித்தல், அழித்தல் போன்ற கோப்பு மேலாண்மை செயல்பாடுகளை செய்வதற்கு. 


கணிப்பொறியின் அமைப்புகளான (Settings), வண்ண திட்டங்கள் (Colour Scheme), திரைக்காப்பு (Screen Savers) போன்றவற்றை திரையில் மாற்றி அமைக்க. 


அட்டவணை 5.1 ல் விண்டோஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.



வின்டோஸின் பல்வேறு பதிப்புகள் 



பதிப்புகள் : சின்னம் : ஆண்டு : முக்கிய சிறப்பியல்புகள் 

விண்டோஸ் 1.x 1985

(1) 16 பிட்டுகளில் வரைகலை பயனர் இடைமுகம் அறிமுகம் செய்யப்பட்டது. 

(2) சுட்டி, உள்ளீட்டுச் சாதனமாக அறிமுகம் MICROSOFT WINDOWS செய்யப்பட்டது. 


விண்டோஸ் 2.x 1987

சன்னல் திரையை சிறிதாக்குதல், அல்லது பெரிதாக்குதல் வசதி.

தனிப் பயனாக்குதல் விருப்பத் தேர்வுகள் (Customising Options)      மற்றும் கணிப்பொறி அமைப்பு (Computer System Setting) மாற்றுதல் போன்ற சிறப்பம்சங்களுடன் "கட்டுப்பாட்டுப் பலகம்' (Control Panel) அறிமுகம் செய்யப்பட்டது.


விண்டோஸ் 3.x 1992

விண்டோஸ்-ல் "பல்பணி கருத்துரு” (Concepts of Multitasking) அறிமுகம். 

256 வண்ணங்களை ஆதரிப்பதால், அதிநவீன வண்ணமயமான தோற்றத்தை இடைமுகத்திற்கு அளிக்கிறது.


விண்டோஸ் 95 1995

தொடக்க பொத்தான், பணிப்பட்டை விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தொடக்கப்பட்டி அறிமுகம். 

32 பிட் செயலி அறிமுகம் மற்றும் பல்பணியாக்கம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.


விண்டோஸ் 98 1998

இயக்க அமைப்புடன், ஒருங்கிணைந்த இணைய உலவி (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - Internet Explorer) அறிமுகம். 

DOS அடிப்படையிலான விளையாட்டுகள் மறையத் தொடங்கி, விண்டோஸ் அடிப்படையிலான விளையாட்டுகள் மேம்படுத்தப்பட்டது. 

செருகி (Plug and play) உபயோகித்தல் சிறப்பம்சம் அறிமுகம்,


விண்டோஸ் NT

வலையமைப்பில் சேவையகம் போல் வடிவமைக்கப்பட்டது.


விண்டோஸ் Me 2000

தானியங்கு கணிப்பொறி பரிசோதித்தல் மற்றும் மீட்புக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 



விண்டோஸ் 2000

வணிகமேசைக் கனிணி மற்றும் மடிக் கனிணிகளில் இயக்க அமைப்பாக சேவையாற்றியது. 

விண்டோஸ் 2000ல் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. 

Professional (வணிக மேசைக் கனிணி மற்றும் மடிக்கணினிகள்) 

Server (இணைய சேவையகம் மற்றும் அலுவலக சேவையகம்). 

Advanced Server (தொழில்துறை பயன்பாட்டிற்காக) 

Data Centre Server (உயர் போக்குவரத்து (high-traffic) கணிப்பொறி சேவையகம்).


விண்டோஸ் XP 2001

64-பிட் செயலிகள் அறிமுகம். 

வின்டோஸ் தோற்றம் மற்றும் நிலையான பணித்தளம் மேம்படுத்தப்பட்டது.


விண்டோஸ் Vista 2006

விண்டோஸ் தோற்றம் மேம்படுத்தப்பட்டது.


விண்டோஸ் 7  2009

கணிப்பொறியின் தொடங்குதல் நேரம் மேம்படுத்தப்பட்டது. 

ஏரோ பீக் (Aero Peek), பணிப்பட்டையில் பயன்பாடுகளை இணைத்தல் (pinning programs to taskbar), கையெழுத்து உணர்தல் (Handwriting recognition), இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 (Internet Explorer 8) போன்ற புதிய பயனர் இடைமுக வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.


விண்டோஸ் 8 2012

விண்டோஸ்-ன் முந்தைய பதிப்புகளை விட விண்டோஸ் 8 மிகவும் வேகமாக செயல்படக் கூடியது. 

தொடக்க பொத்தான் நீக்கப்பட்டது. 

விண்டோஸ் 8 - யில் "பல் அடுக்கு செயலி" (Multi Core Processing), திட நிலை இயக்கிகள், தொடுதிரை மற்றும் மாற்று உள்ளீட்டு முறைகள் போன்ற சிறந்த நன்மைகள் உள்ளன. 

கைப்பேசி மற்றும் கணிப்பொறிகளுக்கான பொதுவான பணிமேடையாக செயல்பட்டது.


விண்டோஸ் 10 2015

தொடக்க -பொத்தான மீண்டும் சேர்க்கப்பட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பு  

"செயலி அறிவிப்பு" மற்றும் "விரைவு நடவடிக்கை செயலிக்கான மத்திய அறிவிப்பு மையம்" அறிமுகம், 

கார்டானா குரல் செயலியக்க தனி உதவியாளர் வசதி (Cortana voice activated Personal assistant)

11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows : Various versions of Windows in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல் : வின்டோஸின் பல்வேறு பதிப்புகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்