Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | விண்டோஸின் திரைமுகப்பு

விண்டோஸ் - ல் வேலை செய்தல் - விண்டோஸின் திரைமுகப்பு | 11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows

   Posted On :  23.09.2022 03:20 am

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

விண்டோஸின் திரைமுகப்பு

விண்டோஸின் தொடக்க திரை ”திரைமுகப்பு” (Desktop) என்று அழைக்கப்படுகிறது.

விண்டோஸின் திரைமுகப்பு


விண்டோஸின் தொடக்க திரை ”திரைமுகப்பு” (Desktop) என்று அழைக்கப்படுகிறது. உங்கள் கணிப்பொறியில் உள்ள திரை முகப்பு படம் 5.3ல் காட்டப்பட்டது போல இல்லாமல் வேறுபட்டிருக்கலாம். ஏனெனில் விண்டோஸ் அதன் தோற்றம், திரை முகப்பு ஆகியவற்றை மாற்றி அமைக்க வழி செய்கிறது.


படம் 5.3-ல் தொடக்க பொத்தான், பணிப்பட்டை, அறிவுப்புப் பகுதி , தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைத் திரைமுகப்பில் காணலாம்.


உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் எந்த பயன்பாட்டில் வேலை செய்து கொண்டிருந்தாலும் Winkey + D அல்லது ஏரோ பீக் (Aero Peak) பயன்படுத்தி எந்த நேரத்திலும் திரை முகப்புக்குச் செல்லலாம்.

பணிப்பட்டையில் ஏரோ பீக் எங்கு உள்ளது என்பதை படம் 5.4ல் அறியலாம்.



1. பணிக்குறிகள் (Icon)


விண்டோஸ்-ன் கூறுகளான கோப்பு, கோப்புறை, குறுக்குவழிகள் போன்றவற்றைக் குறிக்கும் படக்குறியீடு "பணிக்குறி" எனப்படும். வரைகலைப் பயனர் இடைமுக (GUI) பயன்பாடுகளில் பணிக்குறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.


1.1 செந்தர பணிக்குறி (Standard Icons)


விண்டோஸ் இயக்க அமைப்பு நிறுவப்படும் போது உருவாக்கப்படும் கொடாநிலை பணிக்குறிகள், "செந்தர பணிக்குறிகள்" (Standard Icons) என அழைக்கப்படுகிறது. மைகம்ப்யூட்டர் (My Computer), டாக்குமென்ட் (Documents) மற்றும் ரிசைக்கிள் பின் (Recycle Bin) போன்றவை அனைத்து விண்டோஸ் இயக்க அமைப்புகளிலும் காணப்படும் செந்தரப் பணிக்குறிகள் ஆகும். 



1.2. குறுக்கு வழி பணிக்குறிகள் :


எந்தெவாரு பயன்பாடு அல்லது கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு குறுக்கு வழி பணிக்குறிகளை உருவாக்கலாம். இதன் மீது இரு கிளிக் செய்யப்படும் போது இதற்கான பயன்பாடு / கோப்பு அல்லது கோப்புறை திறக்கப்படும். குறிப்பிட்ட பயன்பாட்டைத் திறப்பதற்கான குறுக்குவழியாக பணிக்குறிகள் பயன்படுகிறது. (படம் 5.5).



1.3. வட்டு இயக்கி பணிக்குறிகள்


வட்டு இயக்கி பணிக்குறிகள், ஐந்து வகையான வட்டு இயக்கிகளைப் படக்குறியீடாக வழங்குகிறது.

(அ) வன்வட்டு (C,D,E) 

(ஆ) CD-ROM / DVD வட்டு 

(இ) பென்டிரைவ் (Pen Drive)

(ஈ) கைப்பேசி, ஸ்மார்ட் கைப்பேசி, டேப்ளட் (Tablet) போன்ற நீக்கக்கூடிய நினைவகங்கள் (உ) உங்கள் கணிப்பொறி பிற கணிப்பொறிகளுடன் இணைக்கப்பட்டு இருந்தால், அதன் வலை இயக்கி (படம் 5.6 பார்க்க)




Tags : Working with Windows விண்டோஸ் - ல் வேலை செய்தல்.
11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows : Windows Desktop Working with Windows in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல் : விண்டோஸின் திரைமுகப்பு - விண்டோஸ் - ல் வேலை செய்தல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்