வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் - வைட்டமின்கள் | 12th Chemistry : UNIT 14 : Biomolecules

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்

வைட்டமின்கள்

ஆரம்ப காலத்தில் வைட்டமின்கள் என்பவை அமினோ சேர்மங்களாக கண்டறியப்பட்ட காரணத்தினால், vital amines' என்ற பொருள்படும் வகையில் வைட்டமின்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. சராசரி வளர்ச்சியை அடையவும், உடல் நலத்தை பேணவும் வைட்டமின்கள் மிக இன்றியமையாதவை.

வைட்டமின்கள்:

வைட்டமின்கள் என்பவை நமது உடலால் தொகுக்க இயலாத, ஆனால் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமான சிறிய கரிம சேர்மங்களாகும். எனவே, இவை உணவின் மூலமாக உட்கொள்ளப்படவேண்டும். இவற்றின் தேவை மிகக் குறைவே எனினும், இவற்றின் பற்றாக்குறை அல்லது மிகுதியளவானது நோய்களை உண்டாக்குகின்றன. கார்போஹைட்ரேட்கள் மற்றும் லிப்பிடுகள் போன்று இவை ஆற்றல் மூலங்களாக செயல்படுவதில்லை. உயிர் அமைப்புகளில் ஒவ்வொரு வைட்டமினும் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்கின்றன, பெரும்பாலும் அவை துணை நொதிகளாக செயல்படுகின்றன.

ஆரம்ப காலத்தில் வைட்டமின்கள் என்பவை அமினோ சேர்மங்களாக கண்டறியப்பட்ட காரணத்தினால், vital amines' என்ற பொருள்படும் வகையில் வைட்டமின்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. சராசரி வளர்ச்சியை அடையவும், உடல் நலத்தை பேணவும் வைட்டமின்கள் மிக இன்றியமையாதவை.


வைட்டமின்களின் வகைப்பாடு :

நீர் அல்லது கொழுப்பில் கரையும் தன்மையின் அடிப்படையில் வைட்டமின்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: இந்த வைட்டமின்கள், கொழுப்பு உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாக உறிஞ்சப்பட்டு கொழுப்பு திசுக்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் நீரில் கரைவதில்லை, எனவே இவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்றழைக்கப்படுகின்றன. வைட்டமின் A, D, E & K ஆகியன கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும்

நீரில் கரையும் வைட்டமின்கள்: வைட்டமின்கள் B (B., B., B., B., B , BA, B, & B.,) மற்றும் C ஆகியன நீரில் எளிதாக கரைகின்றன. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் போலல்லாமல் இவற்றை சேமிக்க இயலாது. அதிகப்படியாக உள்ள வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்படாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே, இவ்வகை வைட்டமின்கள் தொடர்ந்து உணவின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும். B வைட்டமின்களில் விடுபட்ட எண்களை கொண்ட வைட்டமின்கள் ஆரம்ப காலத்தில் வைட்டமின்களாக கருதப்பட்டன, ஆனால் அவை தொடர்ந்து அவ்வாறு கருதப்படாததால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட எண்கள் தற்போது இடைவெளிகளை உருவாக்கியுள்ளன. அட்டவணை 

14.2: வைட்டமின்களின் மூலங்கள், செயல்பாடுகள் மற்றும் அவற்றின் குறைபாட்டு நோய்கள்



Tags : Classification | Biomolecules | Chemistry வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 14 : Biomolecules : Vitamins Classification | Biomolecules | Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள் : வைட்டமின்கள் - வகைப்பாடு | உயிரியல் மூலக்கூறுகள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 14 : உயிரியல் மூலக்கூறுகள்