மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics: Human Rights

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி.

V. விரிவான விடையளி


1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

விடை:

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR) :

வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

• 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற .நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் :

ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள்

ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள். ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் :

அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள்.

ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.

 

2. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

விடை:

அடிப்படைக் கடமைகள் :

அடிப்படை கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன.

• 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை .

• 1976ம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.

செயல்படுத்தும் விதம் :

சின்னங்களை மதித்தல்

இயக்கங்களில் இணைதல், செயல்படுதல்

சூழல், பொருட்கள் பாதுகாத்தல்

அனைவரும் கற்க வழி செய்தல்

ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு செயல்படுத்த முடியும்.

 

3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?

விடை:

தேசிய மனித உரிமைகள் ஆணையம் :- (இந்திய மனித உரிமைகள் ஆணையம்)

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒரு இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :

மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.

மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல். • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.

மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

 

4. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?

விடை:

தொழிலாளர் உரிமைகள் :

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருபாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் :

தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.

தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.

தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI).

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.

நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

 

5. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

விடை:

அடிப்படை உரிமைகளை கீழ்க்கண்டவாறு என்(நம்) வாழ்க்கையில் அனுபவிக்கின்றேன் (அனுபவிக்கின்றோம்)

ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.

அடிப்படை உரிமைகள் :

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

சுரண்டலுக்கு எதிரான உரிமை

சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை

சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவ உரிமை :

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.

சுதந்திர உரிமை :

சுதந்திரமாகப் பேச, ஆயுதமின்றிக் கூட, சங்கங்கள் அமைக்க, இந்தியாவில் எந்த பகுதியிலும் வகிக்க, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாட, எந்த தொழிலையும் வணிகத்தையும் செய்ய உரிமை   வழங்கப்பட்டுள்ளது.

சுரண்டலுக்கெதிரான உரிமை :

• 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை :

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் :

அரசமைப்பு சட்டம் கல்விக்கூடங்களை அமைக்கவும். நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை :

ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.


VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பாலியியல் ரீதியான துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் கடத்தல்களில் இருந்து நீ எவ்வாறு உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.

2. "என் நாடு என் உரிமைகள்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.



Tags : Human Rights | Civics | Social Science மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Human Rights : Answer in detail Human Rights | Civics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : விரிவான விடையளி - மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்