Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Civics: Human Rights

   Posted On :  10.09.2023 10:39 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமாக விடையளி.


1. மனித உரிமை என்றால் என்ன?

விடை:

இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையேமனித உரிமை ஆகும்.


2. அடிப்படை உரிமைகள் யாவை?

விடை:

அடிப்படை உரிமைகள்.

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

சுரண்டலுக்கு எதிரான உரிமை

சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை 

சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.

அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

 

3. இதைகளுக்கான உரிமைகளாக .நா. சபை அறிவித்துள்ளவை யாவை?

விடை:

குழந்தைகளுக்கான உரிமைகள் :

வாழ்வதற்கான் உரிமை.

குடும்பச் சூழலுக்கான உரிமை

கல்விக்கான உரிமை

சமூக பாதுகாப்பு உரிமை

பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை

விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை

குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.

 

4. அரசியலமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

விடை:

ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.

ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.

 

5. போக்சா (POCSO) - வரையறு.

விடை:

போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.

சிறப்பு அம்சங்கள் :

இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன,அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.

குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

 

6. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

விடை:

குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில்

குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

 

7. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

விடை:

பெண் தொழிலாளர்கள் நலனுக்காக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பங்களிப்பு :

சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்

பெண் தொழிலாளர் நலநிதி

பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்

பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

 

8. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.

விடை:

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.

பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள்,கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.

எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

 

9. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.

விடை:

தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.

தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.

தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.

 

10. வேறுபடுத்துக - மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் :

விடை:

மனித உரிமைகள்:

1. மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத்தோடும் வாழ்கின்ற உரிமைகள்.

2. மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது.

3. மனித உரிமைகள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.

அடிப்படை உரிமைகள்:

1. அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.
2.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை - உரிமைகளில் அடங்கும்.

3. அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.

Tags : Human Rights | Civics | Social Science மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Human Rights : Give short answers Human Rights | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்