Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மாநிலமனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission)

பணிகள்(SHRC) - மாநிலமனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission) | 9th Social Science : Civics: Human Rights

   Posted On :  10.09.2023 11:18 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

மாநிலமனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission)

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21 மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும்.

மாநிலமனித உரிமைகள் ஆணையம்  (State Human Rights Commission)

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21 மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும். மேல் அதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்று விதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.


மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்

மாநிலப்பட்டியல் பொதுப்பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.

இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைப் போன்றே உள்ளன. ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.

இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே, தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம்.

 

1.  குழந்தைகளுக்கான உரிமைகள்

அரசியலமைப்பினால் விளக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கடந்து நாம் வேறு சில உரிமைகளையும் உறுதி செய்தல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 18 வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் எனவரையறுக்கிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் காணப்படுகின்றது. இக்கொள்கைகளின் அடிப்படையில் .நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.

வாழ்வதற்கான உரிமை

குடும்பச் சூழலுக்கான உரிமை

கல்விக்கான உரிமை

சமூகப் பாதுகாப்பு உரிமை

பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை

விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை

குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை

வாழ்வதற்கான உரிமை

ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத்தகுதி பெறுகின்றது. வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை, அடிப்படைத் தேவைகளான உணவு உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

குடும்பச் சூழலுக்கான உரிமை

ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச் சூழலில், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு ஆதரவற்ற கைவிடப்பட்ட அல்லது அனாதைக் குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

சமூகப் பாதுகாப்பு உரிமை

உடல் நலமின்மை , இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால் குழந்தைகளுக்குத் தரமான வாழ்வைத் தர இயலாத சூழ்நிலையில் அக்குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

கல்விக்கான உரிமை

அரசியலமைப்பின் பிரிவு 21-ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாபாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of children to free and compulsory education) 2009, ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை .

மலாலா - நோபல் பரிசு வென்றவர் கூறுகிறார்  "நான் பள்ளியை நேசித்தேன் ஆனால் அடிப்படைவாதிகள் என் வசிப்பிடமாகிய ஸ்வாட் பள்ளத்தாக்கினை ஆக்கிரமித்தபொழுது அனைத்தும் மாறியது. பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மற்ற பெண்களுக்காகவும், எங்களது கல்வி கற்கும் உரிமைக்காவும் நான் குரல் கொடுத்தேன்.


2012 அக்டோபரில், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பொழுது துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்கள் பேருந்தில் ஏறி இதில் மலாலா யார்? என்று கேட்டு, என் தலையின் இடது பக்கத்தில் சுட்டான். பத்து நாட்கள் கழிந்து இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் கண் விழித்தேன் பல மாதங்கள் அறுவை சிகிச்சைகளிலும், மறுவாழ்வு சிகிச்சையிலும் கழிந்தது. இங்கிலாந்திலுள்ள எனது புது வீட்டில் என் குடும்பத்தினரோடு மீண்டும் சேர்ந்த நான் ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளி செல்லும் வரை என் போராட்டத்தைத் தொடர்வேன் என உறுதி பூண்டேன்.

 அனைத்து பெண்களும் 12 வருட இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் ஒவ்வொரு நாளும் போராடுகிறேன் 130 மில்லியன் பெண்கள் பள்ளியில் பயிலாத இன்றைய சூழலில், நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன கல்வி மற்றும் சமத்துவத்திற்காக என்னோடு சேர்ந்து போராடுவீர்கள் என நம்புகிறேன் நாம் இணைந்து பெண்கள் கல்வி பயின்று. வழிநடத்தும் ஓர் உலகை உருவாக்குவோம்."

நீ மலாலாவாக இருந்தால், என்ன செய்திருப்பாய்? மலாலாவின் போராட்டம் தேவையா? பெண்களுக்கு சமமான கல்வி உரிமை கொடுக்கப்பட்டு சமமாக நடத்தப்படுகின்றனரா?

குழந்தை விற்பனை அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை

குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் எனக் கருதுதல் வேண்டும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற ஏழ்மை, பாலினப்பாகுபாடு, சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கிய காரணங்களாகும்.

உங்களுக்குத் தெரியுமா?


ஆபத்து காலத்தில் உதவிடகாவலன் SOS செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ள இயலும்.

குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

குழந்தைக் கடத்தல் பற்றி அறிந்துள்ளீர்களா?  இத்தலைப்பினைப் பற்றி உமது வகுப்பறையில்  ஒரு கலந்துரையாடல் நடத்துவும்.

 பாலியல் தொந்தரவுக்கெதிரான உரிமை

 குழந்தைகள் உடலளவிலோ, மனதளவிலோ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும்போது, மாநில அரசு அக்குழந்தைகளைப் பாலியல் சுரண்டலிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கு எதிரான உரிமை

பல்வேறு தொழிலகங்களில் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தினையும், உடல் நலம் மற்றும் கல்வி ஆகியவற்றையும் இழக்கின்றனர். இது வறுமை மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படாத வாழ்விற்கு வழிவகுக்கும். இக்குழந்தைகள் கண்ணாடி தீப்பெட்டி, பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், குப்பை பொறுக்குதல், கம்பளம், பீடி தயாரிப்பு சுரங்க வேலை, கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

POCSO சட்டம் - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப்பாதுகாக்கும் சட்டம்.


பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act 2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.

POCSO சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது அக்குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வார்ச்சியினை உறுதி செய்கிறது.

பாலியல் வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ, குடும்ப உறுப்பினரோ, அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரே ஈடுபட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும்.

குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ, அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.

 பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும் போது, வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகைசெய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. குற்றவியல் சட்ட திருத்தச்சட்டம் 2018 இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவைாடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

1098-உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Child line) இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை ஆகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

வேலைவாய்ப்புகளில் பாலினப்பாகுபாடு காணப்படுகின்றது. பெண் குழந்தைகள் வீடு சார்ந்த வேலைகளிலும் ஆண் குழந்தைகள் கூலி வேலைகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர். இக்குழந்தைகள் விவசாய நிலங்கள், உணவகங்கள், வாகனங்களைப் பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் குடிசைத் தொழில்களில் பணிபுரிவதால், குழந்தை உழைப்பை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி, அவர் குழந்தை உழைப்பு கொத்தடிமை, கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து சுமார் 84000த்திற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் இவராலும், இவரது குழு உறுப்பினர்களாலும் மீட்கப்பட்டுள்ளனர். 1995ல் உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்பு, 80,000கிமீ. நீள குந்தை உழைப்புக்கு எதிரான உலகளவிய அணிவகுப்பை (Global March against child labour) முன்னின்று நடத்தினார்.


குறைபாடுகள் உடைய குழந்தைகளே, மற்ற குழந்தைகளை விட 3.4% அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என உலகளாவிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இந்திய அரசியலமைப்பில் குழந்தைகள் உரிமை

 பிரிவு24: பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது.

 பிரிவு45: பதினான்கு வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் தேசத்தின் அடித்தளமாக விளங்குகின்றனர். சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்போது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள் கல்வியறிவு ஆரோக்கியமான வாழ்வு போன்ற பல சலுகைகளை அவர்கள் இழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைத் திருமணங்கள் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே குழந்தைத் திருமணங்கள் அனைத்து விதத்திலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

2. பெண்களுக்கான உரிமைகள்

இந்தியாவில் பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு வண்களுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பினை மீளாய்வுசெய்து உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கான நலவாழ்வு மற்றும் வளர்ச்சி குறித்த அரசின் அனைத்து செயல் திட்டங்கள் மீதான தனது கருத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் இவ்வாணையம் பரிந்துரை செய்கிறது.

குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் எனஇந்தியாவின் முக்கிய பதவிகளில் பெண்கள் பதவி வகிக்கின்றனர். இந்திய அரசியலமைப்பாட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளில் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் ஆகியன அடங்கும். பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மேலும் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன

பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை

தமிழ் நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது

மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-இல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளில் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் ஆகியன அடங்கும். பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மேலும் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.

பெண் தொழிலாளர் நலனும் -டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும்

சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம், பெண் தொழிலாளர் நல நிதி, பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள், நிலக்கரிச் சுரங்கங்களில் சுரங்கப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தப்படவதற்கான தடையை மீட்கடுத்தல் போன்ற சட்டங்கள் பாக்டர் பி.ஆர். சம்பேத்கர் அவர்களால் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, முஸ்லிம்கள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 8% இடஒதுக்கீட்டைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.


மேலும் பெண்களுக்கு 30%, மாற்றுத் திறனாளிகளுக்கு 4% முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின்கீழும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின்கீழும் முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்

 

3. தகவல் அறியும் உரிமைச்சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டமாகும். அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 அக்டோபர் மாதம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம். தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.

நாட்டின் வலிமை வாய்ந்த சட்டங்களுள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாகும். இச்சட்டம் மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட செயல்பாட்டாளர்கள்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் அரசு ஆவணங்களன கோப்புகள், அறிக்கைகள், தாள்கள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் போன்றவைகள் கிடைக்கப்பெறலாம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளன எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மத்திய மேக் காவல் படை (CRPR) மற்றும் உளவுத்துறைப் பணியகம் (intelligence Bureau) ஆகிய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பத்தில் உங்கள் முழுபெயர், முகவரி எழுதி கையெழுத்திட்டு தேதியுடன் பதிவு தபாலின் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

அனுப்பப்பட்ட அஞ்சலுக்கு 30 நாட்களுக்குள் பதில் பெறப்படவில்லை எனில் 1 விண்ணப்பத்தை மேல்முறையீடுக்கு அனுப்பலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

பத்து ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில் ஏறக்குறைய 12-14 மணிநேரம் நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.

கடைகளிலிலும், வணிக வளகங்களிலிலும் வேலை செய்யும் பெண் பணியாளர் அமர்ந்தோ, சுவரில் சாய்ந்தபடியோ பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு இருமுறை 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த மனித தன்மையற்ற செயலுக்காக நீண்ட நாள்களாக பெருத்த கண்டனக் குரல்கள் ஒலித்து வந்தன.

இப்பிரச்சனையைப் பரிசீலித்து குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில், 2018 ஜூலை மாதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் பெண்கள் இத்துயர் நீங்கி வெற்றி கண்டுள்ளனர்.

தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர்.சம்பேத்கரின் பங்களிப்புகள்


தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு

தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.

 இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்

  தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)

  தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.

  நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி

 

4. தொழிலாளர் உரிமைகள்

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறதுஎன்றார் ஜான். எஃப் கென்னடி, உலகின் நாகரிகமடைந்த நாடுகள் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. சமத்துவத்தை உறுதி செய்ய நாடுகள் மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துகின்றன இது ஒரு நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

செயல்பாடு

கிழே கொடுக்கப்பட்ட அட்டவணையில், பல்வேறு வகையான வேலைகளையும் அதற்கு அளிக்கபடும் சம்பளத்தையும் எழுதவும்.




மீள்பார்வை

பாகுபாடு என்பது மக்களின் ஒரு பகுதியினரைப் பாரபட்சமாக நடத்துவது ஆகும்.

  .நா வின் மனித உரிமைகள் பற்றிய வரையறை.

மனித உரிமைகளின் வரலாறு இரண்டாம் உலகப் போரின் பின் விளைவுகளை வேராகக் கொண்டது.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிவிப்பு

இந்திய  அரசியலமைப்பு 6 அடிப்படை உரிமைகளை உறுதி செய்து கடமைகளை குடிமக்களுக்கு குறிப்பிடுகின்றது.

"தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள்.

 நீட்டிக்கப்பட்ட உரிமைகளான குழந்தைகள் உரிமை, SC மற்றும் ST உரிமை, பெண்கள் உரிமை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் தொழிலாளர் சட்டங்கள்.

Tags : Functions of SHRC பணிகள்(SHRC).
9th Social Science : Civics: Human Rights : State Human Rights Commission(SHRC) Functions of SHRC in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : மாநிலமனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission) - பணிகள்(SHRC) : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்