Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | இந்தியாவில் அடிப்படை உரிமைகள்
   Posted On :  10.09.2023 11:10 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

இந்தியாவில் அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் ● சமத்துவ உரிமை ● சுதந்திர உரிமை ● சுரண்டலுக்கு எதிரான உரிமை ● சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை ● சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் ● அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

இந்தியாவில் அடிப்படை உரிமைகள்

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை குடிமக்களுக்கு பேசும் உரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை போன்ற மேலும் சில உரிமைகளை வழங்கி மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

அடிப்படை உரிமைகள்

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

சுரண்டலுக்கு எதிரான உரிமை

சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை

சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

 

1. சமத்துவ உரிமை

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும். சமயம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுப்படுத்தவோ, ஒதுக்குதலோ சட்டத்திற்கு புறம்பானதாகும். அவ்வாறு நடத்தப்பட்டால் ஒருவர் நீதிமன்றத்தை அணுகலாம்.


 

2. சுதந்திர உரிமை

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன

அவை:

பேச்சுரிமை.

ஆயுதமின்றி கூடும் உரிமை

சங்கங்கள் அமைக்கும் உரிமை.

இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை

இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை

எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை


 

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எந்த ஒரு ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த முடியாது.


 

4. சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.


 

5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

அரசியலமைப்பு கூட்டம் பண்பாட்டினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமையை வழங்கியுள்ளது. கல்விக்கூடங்களை அமைக்கவும், நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் நமக்கு உரிமை உள்ளது. சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம். அரசு அதற்கு மானியங்களை வழங்குகின்றது. இருப்பினும், சாதி, நிற இனம் அல்லது சமய வேறுபாட்டினைக்காரணம் கூறி யாருக்கும் இவ்வகை நிறுவனங்களில் அனுமதி மறுத்தல் கூடாது.


நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறுசட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.

 

6. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் தரப்பட்டவை ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது. ஒருசெயல் அரசியலமைப்பு சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசியலமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன இவ்வாறு, இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும், காவலாகவும் அமைகின்றது.

அரசியலமைப்புச் சட்டங்களுக்கான உரிமையின்படி பிரத்திகா யாஷினி நீதிமன்றத்தை அணுகியதின் மூலம் தனது வேலைவாய்ப்பு உரிமையை வென்றார்.


9th Social Science : Civics: Human Rights : Fundamental Rights in India in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : இந்தியாவில் அடிப்படை உரிமைகள் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்