Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (DHR)
   Posted On :  10.09.2023 11:07 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (DHR)

வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவியமனித உரிமைகள் பேரறிக்கை (Univasal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

உலகளாவிய மனித உரிமைகள்  பேரறிக்கை (UDHR)

வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவியமனித உரிமைகள் பேரறிக்கை (Univasal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற .நா பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை , அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும், அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம் பால் தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.

 

1. சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள்

சமூக, பொருளதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்குப்பின் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள் ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள் ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள். பண்பட்டு மகிழ்வில் சமத்துவம், மனித கண்ணியம், பாகுபாடின்மை ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

 

2. குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள். ஒருவர் சமூகத்தின் குடிமைமற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.

'குடிமை உரிமைகள்என்பன ஒவ்வொரு மனிதனுக்கும் இன, தேசிய நிற, பால் வயது. சமய போன்ற பாகுபாடுகளின்றி, அரசின் சட்டத்தால் தப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.

அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகளே 'அரசியல் உரிமைகள்' ஆகும், இவை சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரத்தை இவ்வுரிமைகள் அளிக்கின்றன

9th Social Science : Civics: Human Rights : Universal Declaration of Human Rights (UDHR) in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (DHR) - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்