Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)

பணிகள்(NHRC) - இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) | 9th Social Science : Civics: Human Rights

   Posted On :  10.09.2023 11:13 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்

இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)


மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

 மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்

மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.

மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.

மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

Tags : Functions of NHRC பணிகள்(NHRC).
9th Social Science : Civics: Human Rights : National Human Rights Commission Functions of NHRC in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள் : இந்திய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) - பணிகள்(NHRC) : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : மனித உரிமைகள்