அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Civics: Forms of Government

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VI. விரிவான விடையளி.


1. ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.

விடை:

சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.

அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.

ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.

ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.

அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.

ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

 

2. அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.

விடை:

அதிபர் மக்களாட்சி முறையில் நிர்வாகத்துறை தன் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையது அல்ல.

நிர்வாகத்துறையில் செயல்பாடுகளில் சட்ட மன்றத்தின் தலையீடு இருக்காது.

இது அதிகாரப்பகிர்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ளது.

அதிபர் மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:

அதிபர் மக்களாட்சி முறை

1. குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

2 அதிபரே அதிகாரம் படைத்தவர்.

3 அதிகாரப் பிரிவினை

4 சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்.

5 மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்.

6 அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே 

7 தனிநபர் தலைமை

8 மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார்.

நாடாளுமன்ற மக்களாட்சி முறை:

1 பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார்.

2 மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது

3 அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப் படாமல் இருப்பது

4 தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள்.

5 அரசின் தலைவர் - குடியரசுத் தலைவர்.

6 அரசாங்கத்தின் தலைவர் - பிரதம அமைச்சர்

7 கூட்டுத்தலைமை

8 கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள்

Tags : Forms of Government | Civics | Social Science அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Forms of Government : Answer in detail Forms of Government | Civics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : விரிவான விடையளி - அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்