Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | விரிவான விடையளிக்கவும்

பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : History : Ancient Civilisations

   Posted On :  04.09.2023 05:38 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

விரிவான விடையளிக்கவும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளிக்கவும்

VI. விரிவான விடையளிக்கவும். 

1. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் - இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.

விடை:  

ஹைரோகிளிபிக்ஸ் - எகிப்திய எழுத்து முறை : 

• நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் இந்த சித்திர எழுத்து முறை பயன்பட்டது. 

• இந்த எழுத்துக்கள் எகிப்தியரின் குறியீகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன. 

கியூனிபார்ம் - சுமேரிய எழுத்து முறை: 

• சுமேரியர்கள் கில்காமெஷ் என்ற காவியம் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கு இந்த ஆய்வு வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். 

• இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன. 


2. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு. 

விடை: 

தத்துவம்: 

• லாவோட்சு - தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர். 

கன்பூசியஸ்:  

• ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார். 

மென்சியஸ்: 

• சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி. 

இலக்கியம்: 

• இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ - போர்க்கலை 

அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் - திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) 

ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் - மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) 


3. சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுது. 

விடை:  

சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:

• "சிந்துவெளி நாகரிகம்" பண்டைய நாகரிகங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம். 

• ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன. 

• அவர்கள் சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் கற்களையும் கட்டமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களில் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்க கூடும். 

• மொஹஞ்சதாரோவில் உள்ள நன்கு தளமிடப்பட்ட பல அறைகள் கொண்ட மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.

• தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன. 

• அவர்கள் உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேலும் பருத்தி மற்றும் பட்டாடைகளைப் பயன்படுத்தினார்கள். செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள். 

• அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டார்கள். காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது. 

• ஹரப்பர்களின் எழுத்துக்களுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.


VI. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வெண்கலக் கால நாகரிகம் நிலவிய இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும் 

2. பிரமிடுகள் மற்றும் எகிப்தியர்களின் எழுத்துமுறை குறித்து ஒரு விளக்கப்படம் தயாரிக்கவும்.

3. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த முத்திரைகள், பானைகள் உள்ள படங்களைச் சேகரிக்கவும்


ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

 1. பழங்கால நாகரிகங்களை ஒப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரம் தயாரிக்கவும்.

2. சிந்து நாகரிகம் குறித்து துண்டுப் படங்களைச் சேகரித்து, ஒரு படத்தொகுப்பு தயார் செய்.

 

மேற்கோள் நூல்கள்

1. Chris Scarre. The Human Past: World Prehistory and the Development of Human

Societies. Thames and Hudson.

 2. G.L. Possehl. Indus Age-The Beginnings. Oxford and IBH Publications.

3. J.M. Kenoyer. Ancient Cities of the Indus Valley Civilisation. American Institute of Pakistan Studies.

 

இணையத் தொடர்புகள்

1. https://www.britannica.com

2. http://www.ancient-origins.net

3. http://humanorigins.si.edu

 

இணையச் செயல்பாடு

பண்டைய காலக் கட்டிடக் கலையைக் காண்போம்.


படிகள்:

படி 1: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி airpano' எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: திரையில் தோன்றும் Full screen என்பதைச் சொடுக்கி கட்டிடக்கலையின் முழு வடிவத்தைப் பார்க்கவும்.

படி 3: 'Open Google Map' என்பதைத் தெரிவு செய்தவுடன் உலகவரைபடத்தில் சிகப்பு நிறப் பகுதித் தோன்றும். அதை நகர்த்தி கட்டிடத்தைச் சுற்றி 360° கோணத்தில் பார்க்கவும்.

படி 4 : கட்டிடத்தின் மேல் உள்ள வினாக்குறிகளைச் சொடுக்கினால் அப்பகுதிக்கான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.

உரலி http://www.airpano.com/files/Ancient-World/2-2

Tags : Ancient Civilisations | History | Social Science பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
9th Social Science : History : Ancient Civilisations : Answer the following in Detail Ancient Civilisations | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : விரிவான விடையளிக்கவும் - பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்