வரலாறு - மீள்பார்வை - பண்டைய நாகரிகங்கள் | 9th Social Science : History : Ancient Civilisations
மீள்பார்வை
● புதிய கற்காலத்திற்குப்பின், வெண்கலக் காலத்தில் நாகரிகங்கள் தோன்றின.
● திட்டமிட்ட நகரங்களில் குடியேறிய மக்கள், வணிகம், பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினர். அறிவியல், தொழிநுட்பம் வளர்ந்தது.
● நாகரிகம் என்பது ஒப்புநோக்கில் மேம்பட்ட சமூக அமைப்பு ஆகும்.
● எகிப்து நாகரிகம் கட்டடக் கலைக்குப் புகழ்பெற்ற பிரமிடுகள் அவர்களது முக்கியப் பங்களிப்பு ஆகும்.
● நாட்காட்டி உருவாக்கம், வானியல் அறிவியல் வளர்ச்சி ஆகிய துறைகளில் மெசபடோமியா நாகரிகம் பங்களிப்பு செய்துள்ளது.
● தத்துவம், கண்டுபிடிப்புகளில் சீன நாகரிகம் பங்காற்றியுள்ளது.
● சிந்துவெளி நாகரிகம் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திப் பல வகையான நுகர் பண்டங்களைத் தயாரித்தனர். அது மேற்காசியாவுடன் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.