பண்டைய நாகரிகங்கள் | வரலாறு - சீன நாகரிகம் | 9th Social Science : History : Ancient Civilisations

   Posted On :  04.09.2023 02:09 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

சீன நாகரிகம்

மஞ்சள் ஆறு எனப்படும் ஹோவாங்ஹோ ஆறும் யாங்ட்சி ஆறும் சீனாவின் இரு பெரும் ஆறுகளாகும். அடிக்கடி தன் போக்கை மாற்றிக் கொள்வதாலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவதாலும், மஞ்சள் ஆறு சீனாவின் துயரம் எனப்படுகிறது.

சீன நாகரிகம்

மஞ்சள் ஆறு எனப்படும் ஹோவாங்ஹோ ஆறும் யாங்ட்சி ஆறும் சீனாவின் இரு பெரும் ஆறுகளாகும். அடிக்கடி தன் போக்கை மாற்றிக் கொள்வதாலும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவதாலும், மஞ்சள் ஆறு சீனாவின் துயரம் எனப்படுகிறது.

சீனாவில் தொல் பழங்காலத்து பீகிங் மனிதன் (இன்றைக்கு சுமார் 7,00,000 ஆண்டுகள் முன்னர் முதல் 2,00,000 ஆண்டுகள் வரை), யுவான்மாவோ மனிதன் வாழ்ந்தது குறித்த சான்றுகள் உள்ள . கி.மு. (பொ..மு.) 4500 முதல் 3750 வரை புதிய கற்காலச் சமூகங்கள் சீனாவில் வாழ்ந்துள்ளன. மஞ்சளாறு சமவெளியின் ஹெனான் மாகாணத்திலும், யாங்ட்சி ஆற்றுச் சமவெளியிலும் புதிய கற்கால கிராமங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சீனாவில் பல நகர அரசுகள் இருந்தன. காலப் போக்கில் இந்த அரசுகள் பேரரசின் பகுதிகளாக மாறின.


 

அரசியல் அமைப்புகளும், பேரரசர்களும்

ஷி ஹூவாங்டி (குவின் ஷி ஹுவாங் - முதல் பேரரசர் என்று பொருள்) என்பவர் குவின் (சின்) வம்சத்தைத் தோற்றுவித்தார். இந்தப் பேரரசருக்கு "சுவர்க்கத்தின்  புதல்வர்" என்ற பட்டம் இருந்தது. இவர்தான் சீனாவின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். இந்தக் காலம் (கி.மு. (பொ..மு.) 221 - 206) சீனாவின் பேரரசுக் காலம் என்று வழங்கப்படுகிறது. அவர் கி.மு. (பொ..மு.)221இல் அருகில் உள்ள பகுதிகளையும் மற்ற சிற்றரசுகளை வென்று கி.மு. (பொ..மு.) 212 வரை பேரரசராக ஆட்சி செய்தார். அவர் நிலப்பிரபுக்களை வென்று வலிமையான பேரரசை உருவாக்கினார். சீனாவை ஒரே அரசாக மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. ஷி ஹுவாங் டி பல அரசுகளின் கோட்டைகளையும் தகர்த்தார், வெளியில் இருந்து ஊடுருவும் நாடோடிகளைத் தடுக்க சீனப் பெருஞ்சுவரைக் கட்டினார். பேரரசை இணைக்கச் சாலைகளை அமைத்தார்.


ஹான் பேரரசு கி.பி (பொ.) 206-220.

இந்தக் காலகட்டத்திலேயே இந்தப் பேரரசு குறித்து எழுத்துப் பூர்வமான சீன வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஹான் பேரரசர்களில் சிறந்தவரான ஹு டி (ஹான் வூ, மகா ஹான் வூ கி.மு. (பொ..மு) 141–87) பேரரசை விரிவுபடுத்தி, பாசனக் குளங்கள் உள்ளிட்ட பல பொதுவசதிகளைச் செய்தார். கி.மு. (பொ..மு) 138இல் அவர் மேலைநாடுகளுக்கு தனது தூதராக ஜாங் குயெனை அனுப்பினார். அதன் மூலம் கி.மு. (பொ..மு) 130இல் பட்டுப் பாதையைத் (Silk Road) திறக்க வழிவகுத்தார்.

சுடுமண் பொம்மை இராணுவம்

சீனாவில் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் சுடுமண் பொம்மை சிற்பங்கள் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை முதல் சீனப் பேரரசரான குவின் ஷி ஹுவாங்கின் இராணுவத்தை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இவை கி.மு. (பொ..மு) 210-209 காலகட்டத்தில் அரசருடன் அவருடைய கல்லறையில் புதைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இவைஷான்கி மாகாணத்தில் சியான் என்ற ஊரிலிருந்து 35கி.மீ. வடகிழக்கே உள்ள லிஷான் மலையடிவாரத்தின் வடக்கில் உள்ள அரசரின் கல்லறையில் உள்ளன.


பட்டுப் பாதையினாலும், அதனால் உண்டான வணிகத் தொடர்புகளாலும் ஜாங் பேரரசர் (கி.பி (பொ.) 75-88] காலத்தில் சீனா ஏராளமான நன்மைகளை அடைந்தது. பொ.. 166இல்ரோமானியப்பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ் காலத்தில் சீனப் பட்டு ரோமானியர்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தது. சீனப்பட்டு ஒரு பகுதி தமிழக துறைமுகங்கள் வழியாகவும் ரோமாபுரி சென்றிருக்கக் கூடும்.

 

தத்துவமும், இலக்கியமும்

லாவோ ட் சு, கன்பூசியஸ், மென்சியஸ். மோ டி (மோட் ஜு), தாவோ சின் (கி.பி (பொ.) 365-427) போன்ற தத்துவ ஞானிகளும், சீனக் கவிஞர்களும் சீன நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள். இராணுவ உத்தியாளரான சன் ட்சூ 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார். தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டுக் குறிப்புகள்) என்ற நூல் அதிகாரப்பூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது. மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) என்ற நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்டது.

லாவோட்சு(கி.மு.(பொ..மு)604-521)சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாளராக இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று இவர் வாதிட்டார்.

கன்பூசியஸ் (கி.மு. (பொ..மு) 551-497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவஞானி. அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவரது பெயருக்கு "தலைவர் (குங்)" என்று பொருள். அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர் திருத்து வதை வலியுறுத்தினார் . "ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால், அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைப்படுத்தப்பட்டுவிடும், என்று குறிப்பிடுகிறார்.


மென்சியஸ் (கி.மு. (பொ..மு) 372–289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.

 

சீன எழுத்துமுறை 

மிகப் பண்டைய காலத்திலேயே சீனர்கள் ஒரு எழுத்து முறையை உருவாக்கிவிட்டனர். ஆரம்பத்தில் அது சித்திர எழுத்து முறையாக இருந்தது. பின்னர் அது குறியீட்டு முறையாக மாற்றப்பட்டது.


 

சீன நாகரிகத்தின் பங்களிப்பு

எழுத்து முறையை மேம்படுத்தியது

காகிதம் கண்டுபிடித்தது

பட்டுப் பாதையைத் திறந்தது

வெடிமருந்தைக் கண்டுபிடித்தது

Tags : Ancient Civilisations | History பண்டைய நாகரிகங்கள் | வரலாறு.
9th Social Science : History : Ancient Civilisations : The Chinese Civilisation Ancient Civilisations | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : சீன நாகரிகம் - பண்டைய நாகரிகங்கள் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்