Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமான விடை தருக

பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சுருக்கமான விடை தருக | 9th Social Science : History : Ancient Civilisations

   Posted On :  04.09.2023 05:35 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

சுருக்கமான விடை தருக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : சுருக்கமான விடை தருக

V. சுருக்கமான விடை தருக. 

1. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக

விடை: 

• பாரோக்கிகளின் சாதிகளான பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

எ.கா: கெய்சோ அருகிலுள்ள கிஸா பிரமிடுகள். 

• பிரமிடுகள் எகிப்தியரின் பொறியியல், கட்டுமானம், மனித ஆற்றல் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்துகின்றன.

• 73 மீட்டர் நீள 20 மீட்டர் உயர சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக் படிமம் ஸ்பிங்க்ஸ், உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று.


2. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.  

விடை: 

• சுமேரிய நாகரிகத்தில் (மெஸபடோமியா நகரின் மத்தியில் கட்டப்பட்ட செங்குத்தான பிரமிடுகள் வடிவ கோவில்கள் சிகுராட்' எனப்படும். உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. 

• சிகுராட்டைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், விருந்து அரங்குகள், தொழிற்கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள், கல்லறைகள் அடங்கிய வளாகங்கள் இருந்தன. புகழ்பெற்ற சிகுராட் இருக்குமிடம் உர்). 


3. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி

விடை: 

• சுமேரியர்களின் குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி குறித்த 282 குற்றப்பிரிவுகளுக்கான சட்டங்களைக கூறும் முக்கியமான சட்ட ஆவணம். 

•  “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப்பல்” என்ற பழிக்குப்பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பழைய சட்டங்களின் தொகுப்பு.

Tags : Ancient Civilisations | History | Social Science பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
9th Social Science : History : Ancient Civilisations : Answer the following briefly Ancient Civilisations | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : சுருக்கமான விடை தருக - பண்டைய நாகரிகங்கள் | வரலாறு | 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்