Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography : Atmosphere

   Posted On :  07.09.2023 11:27 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

III. சுருக்கமான விடையளி

1. வளிமண்டலம் - வரையறு.

விடை:

புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

 

2. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

விடை:

காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்

கடல் மட்டத்திலிருந்து உயரம்

கடலிலிருந்து தூரம்

வீசும் காற்றின் தன்மை

மலைகளின் இடையூறு

மேகமூட்டம்

கடல் நீரோட்டங்கள்

இயற்கைத் தாவரங்கள்

 

3. வெப்பத்தலைகீழ் மாற்றம் - சிறு குறிப்பு வரைக.

விடை:

ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

 

4. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகளை விளக்குக.

விடை:

கதிர்வீச்சு

வெப்பக்கடத்தல்

வெப்பச்சலனம்

வெப்பக்கிடை அசைவு

 

5. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக.

விடை:

வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை 'நிலவும் காற்று' என்றும் அழைக்கப்படுகிறது.

 

6. சிறுகுறிப்பு வரைக.

விடை:

. வியாபாரக் காற்றுகள்:

வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி, ஆண்டு முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசம் காற்றுகள் வியாபாரக்காற்று' ஆகும். இவை வியாபாரிகளின் கடல் பயணத்திற்கு உதவியாக இருக்கின்றன.

. கர்ஜிக்கும் நாற்பதுகள்:

வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி மிகவும் வேகமாக வீசக்கூடிய காற்றுகள்மேலைக்காற்று' ஆகும்.

இவை 40° அட்சங்களில் வீசும் பொழுது 'கர்ஜிக்கும்' நாற்பதுகள் என அழைக்கப்படுகின்றன.

 

7. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

விடை:

நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.

சில நேரங்களில் வெப்பக்காற்றும், ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போது மேகங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

8. மழைப் பொழிவின் வகைகள் யாவை?

விடை:

வெப்பச்சலன மழைப்பொழிவு

சூறாவளி மழைப்பொழிவு (வளிமுக மழைப்பொழிவு)

மலைத்தடுப்பு மழைப்பொழிவு

 

9. சிறுகுறிப்பு வரைக:

. சாரல்

) மழை

) பனி

) ஆலங்கட்டி

) வெப்பமாதல்

விடை:

. சாரல்:

• 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

. மழை :

உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது.

காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

) பனி:

உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

. ஆலங்கட்டி:

முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

. வெப்பமாதல்:

ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : Answer the following questions briefly Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்