வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக | 9th Social Science : Geography : Atmosphere
IV. காரணம் கூறுக
1.
நிலநடுக்கோட்டு
தாழ்வழுத்த
மண்டலம்
ஒரு
அமைதிப்
பகுதி.
விடை:
• நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது. இதனால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகிறது.
• இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
2.
மேகமூட்டத்துடன்
இருக்கும்
நாள்களை
விட
மேகமில்லாத
நாள்கள்
வெப்பமாக
இருக்கிறது.
விடை:
• மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது. ஏனெனில்,
• மேகம் என்பது வளிமண்டலத்தில் கண்களுக்குப் புலப்படும் படியாக மிதந்து கொண்டிருக்கும் நீர்த்திவலைகளே மேகங்களாகும். நீர்த்திவலைகள் அதிகம் உள்ள நாளில் மேகமூட்டம் இருப்பதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகம் தெரிவதில்லை .
3.
மூடுபனி
போக்குவரத்துக்கு
ஆபத்தாக
உள்ளது.
விடை:
• மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது. ஏனெனில்,
• மூடுபனி வழியே வெளிச்சம் ஊடுருவிச் செல்லாது. இதனால் வாகனங்கள் தெளிவாக தெரிவதில்லை.
4.
வெப்பச்சலன
மழை
4 மணி
மழை
என்று
அழைக்கப்படுகிறது.
விடை:
• வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளையில் 4 மணி அளவில் வெப்பச்சலன மழை அடிக்கடி நிகழ்கிறது.
5.
துருவக்
கீழைக்காற்றுகள்
மிகக்
குளிர்ச்சியாகவும்,
வறண்டும்
காணப்படுகின்றன.
விடை:
• துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன. ஏனெனில், துருவ கீழைக் காற்றுகள் துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகிறது.