வளிமண்டல அடுக்குகள்
வளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது. இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு,
மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.
‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு மாறுதல் என்று பொருள்படும்.
இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும். இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும்,
நிலநடுக்ககோட்டுப் பகுதியில் 18கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது. இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும் இவ்வடுக்கில் தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. எனவே வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு வானிலையை உருவாக்கும் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது இந்த அடுக்கின் மேல் எல்லை ட்ரோபோபாஸ் (Tropopause) என்று அழைக்கப்படுகிறது.
கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வர பரவியுள்ளது. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால்,
இது ஓசோனோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பரப்பதற்கு ஏதுவாக உள்ளது. இவ்வடுக்கின் மேல் எல்லை ஸ்ரேடோபாஸ்(Stratopause) என அழைக்கப்படுகிறது.
இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்ட லத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வர காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை குறைகின்றது. புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன. இடையடுக்கின் மேல் எல்லை மீசோபாஸ்'
(mesopause) என்று அழைக்கப்படுகிறது.
இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கிமீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது. வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது 'ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது. ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் களவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி 'ஹெட்ரோஸ்பியர் (heterosphere) என அழைக்கப்படுகின்றது. இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்ப அடுக்குப்பகுதியில் அயனோஸ்பியர் (lonosphere) அமைந்திருக்கிறது. இங்கு அயனிகளும் மின்ன ணுக்களும் (Electron) காணப்படுகின்றன. புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன
தகவல் பேழை
வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக் கோளமாகும்.
இது புவியின் காந்த மண்டலமாகும்.
இம்மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது புவியின் மேல்பரப்பிலிருந்து சுமார் 84,000 கி.மீட்டர் வரை இக்காந்த வயல் பரவியுள்ளது.
வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிகடுக்கு என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரேரா பொரியாலிஸ் (Aurora
Boreails) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில் நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றுகின்றது. இதுவே 'அரோராஸ்' எனப்படுகின்றது.