வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography : Atmosphere

   Posted On :  07.09.2023 11:28 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : வேறுபடுத்துக

V. வேறுபடுத்துக

1. வானிலை மற்றும் காலநிலை

விடை:

வானிலை:

1. ஒரு நாளில் குறிப்பிட்ட பகுதி வளிமண்டல நிகிழ்வுகள்.

2. ஒவ்வொரு மணிக்கும் மாறக்கூடியது.

3. ஒரே நாளில் வானிலை மாறுபடும்

4. ஒவ்வொரு நாளும் விபரங்கள் கணக்கிடப்படும்

5. வானிலைப் பற்றிய படிப்பு வானிலையியல்

காலநிலை:

1. நீண்ட கால வானிலையின் சராசரி நிகிழ்வுகள்.

2. மாறுதலுக்கு உட்படாது

3. ஒரே நாளில் காலநிலை மாறாது.

4. வானிலைத் தகவல்களின் சராசரி

5. காலநிலைப் பற்றிய படிப்பு காலநிலையியல்

 

2. நிலக்காற்று மற்றும் கடற்காற்று

விடை:

நிலக்காற்று:

1. இரவு வேளை நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசும்.

2. இரவில், கடலை விட நிலம் விரைவாக குளிர்வதால் வீசுகிறது.

கடற்காற்று:

1. பகல் வேளை கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும்

2. பகலில், கடலை விட நிலம் விரைவாக  சூடாவதால் வீசுகிறது.

 

3. காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப்பக்கம் 

விடை:

காற்று மோதும் பக்கம்:

1. வீசும் காற்றின் எதிர் திசையிலுள்ள மலைப் பகுதி காற்று மோதும் பக்கம் எனப்படும்

2. இங்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கின்றது.

காற்று மோதாப்பக்கம்:

1. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை

காற்று மோதாப்பக்கம் என்று அழைக்கிறோம்.

2. இங்கு மிகவும் குறைவாக மழை கிடைக்கிறது.

 

4. வெப்பச்சூறாவளி மற்றும் மிதவெப்பச் சூறாவளி

விடை:

வெப்பச் சூறாவளி:

1. வெப்பமண்டலங்களுக்கு இடையேயான  காற்றை ஒரு முகப்படுத்தும் பகுதிகளில் உருவாகின்றன.

2. நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.

மிதவெப்பச் சூறாவளி:

1. 35° - 65° வடக்கு மற்றம் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்ப மற்றம் குளிர் காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் உருவாகின்றன.

2. மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள்  போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது.

Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : Distinguish between the following Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : வேறுபடுத்துக - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்