Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography : Atmosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

III. சுருக்கமான விடையளி

1. வளிமண்டலம் - வரையறு.

விடை:

• புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

 

2. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

விடை:

காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

• நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்

• கடல் மட்டத்திலிருந்து உயரம்

• கடலிலிருந்து தூரம்

• வீசும் காற்றின் தன்மை

• மலைகளின் இடையூறு

• மேகமூட்டம்

• கடல் நீரோட்டங்கள்

• இயற்கைத் தாவரங்கள்

 

3. வெப்பத்தலைகீழ் மாற்றம் - சிறு குறிப்பு வரைக.

விடை:

• ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

 

4. வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகளை விளக்குக.

விடை:

• கதிர்வீச்சு

• வெப்பக்கடத்தல்

• வெப்பச்சலனம்

• வெப்பக்கிடை அசைவு

 

5. கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக.

விடை:

• வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை 'நிலவும் காற்று' என்றும் அழைக்கப்படுகிறது.

 

6. சிறுகுறிப்பு வரைக.

விடை:

அ. வியாபாரக் காற்றுகள்:

• வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி, ஆண்டு முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசம் காற்றுகள் வியாபாரக்காற்று' ஆகும். இவை வியாபாரிகளின் கடல் பயணத்திற்கு உதவியாக இருக்கின்றன.

ஆ. கர்ஜிக்கும் நாற்பதுகள்:

• வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி மிகவும் வேகமாக வீசக்கூடிய காற்றுகள் ‘மேலைக்காற்று' ஆகும்.

இவை 40° அட்சங்களில் வீசும் பொழுது 'கர்ஜிக்கும்' நாற்பதுகள் என அழைக்கப்படுகின்றன.

 

7. மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

விடை:

• நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.

• சில நேரங்களில் வெப்பக்காற்றும், ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போது மேகங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

8. மழைப் பொழிவின் வகைகள் யாவை?

விடை:

• வெப்பச்சலன மழைப்பொழிவு

• சூறாவளி மழைப்பொழிவு (வளிமுக மழைப்பொழிவு)

• மலைத்தடுப்பு மழைப்பொழிவு

 

9. சிறுகுறிப்பு வரைக:

அ. சாரல்

ஆ) மழை

இ) பனி

ஈ) ஆலங்கட்டி

உ) வெப்பமாதல்

விடை:

அ. சாரல்:

• 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

ஆ. மழை :

• உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது.

• காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

இ) பனி:

• உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

ஈ. ஆலங்கட்டி:

• முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

உ. வெப்பமாதல்:

• ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : Answer the following questions briefly Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்