வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography : Atmosphere

   Posted On :  07.09.2023 11:44 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VI. விரிவான விடையளி


1. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக.

விடை:

வளிமண்டல அடுக்குகள்:

வளிமண்டலம் கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு என ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

கீழடுக்கு: உயரம் : துருவம் 8 கி.மீ, நிலநடுக்கோடு 18 கி.மீ.)

உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

மீள் அடுக்கு: (உயரம் : 18 கி.மீ. - 50 கி.மீ.)

ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பு. ஜெட் விமானங்கள் பறக்க ஏதுவாக உள்ளது. இடையடுக்கு: உயரம் : 50 கி.மீ. - 80 கி.மீ)

உயரே செல்லச் செல்ல வெப்பம் கூடும். வானொலி ஒலிபரப்புக்கு உதவுகிறது. புவியை நோக்கிவரும் விண்கற்கள் எரிக்கப்படுகின்றன.

 வெப்ப அடுக்கு: உயரம் : 80 கி.மீ. - 600 கி.மீ)

கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராகச் காணப்படுகிறது. மேல்பகுதியில் சீரற்று காணப்படுகிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரிக்கிறது. இங்குள்ள அயனி அடுக்கில் அயனிகளும் மின்னணுக்களும் காணப்படுகின்றன.

வெளியடுக்கு: உயரம் : 600 கி.மீ-க்கு அப்பால்)

வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வாயுக்கள் மிகவும் குறைவு. மேல்பகுதி படிப்படியாக அண்டவெளியோடு கலந்துவிடுகிறது.

 

2. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக.

விடை:

புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களேகாற்று' ஆகும். காற்று

கோள் காற்றுகள்

கால முறைக் காற்றுகள்

மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்

தலக்காற்றுகள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோள் காற்றுகள்:

ஆண்டு முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள். இவைநிலவும் காற்று' எனவும் அழைக்கப்படுகிறது. 'வியாபாரக் காற்றுகள்’ ‘மேலைக்காற்றுகள்' மற்றும் 'துருவ கீழைக்காற்றுகள்' ஆகியவையும் கோள் காற்றுகளே.

வட அரைக் கோளத்தில் தென் மேற்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் வட மேற்கிலிருந்தும் வேகமாக வீசுவதால் இவைமேலைக்காற்றுகள்' எனப்படுகின்றன.

வட அரைக் கோளத்தில் வட கிழக்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்ற காற்றுகள் 'துருவ கீழைக்காற்றுகள்' எனப்படுகின்றன.

கால முறைக் காற்றுகள்:

நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் காற்று பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கிறது. எனவே, இக்காற்றுகள் பருவக்காற்றுகள் (மான்சூன்) என அழைக்கப்படுகின்றன. .கா. தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று.

மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்:

உள்ளூர் வானிலை திடீர் மாற்றம், இடையூறுகள் காரணமாக அப்பகுதி நிலையான காற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மாறுதலுக்குட்பட்ட இக்காற்றுகள் சூறாவளி, எதிர் சூறாவறி மற்றும் பெரும்புயலாக மாறுகின்றன.

அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவில் குவியும் காற்றுசூறாவளி எனப்படும்.

தலக்காற்றுகள்: ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்றுதலக்காற்று ஆகும்.

 

3. மேகங்களின் வகைகளை விவரி.

விடை:

மேல்மட்ட மேகங்கள்: (6-20 கி.மீ. உயரம் வரை)

கீற்று மேகங்கள் (8000 முதல் 12000 மீட்டர் வரை) இவை ஈரப்பதம் இல்லாதவை. மழை தருவதில்லை . (வெண்ணிற இழை).

கீற்றுத்திரள் மேகங்கள் - பனிப்படிகங்களால் உண்டானவை. (வெண்ணிற திட்டு, விரிப்பு)

கீற்றுப்படை மேகங்கள் - பால் போன்ற வெள்ளை நிறக் கண்ணாடி போன்றது மிகச் சிறிய பனித்துகள்கள் கொண்டது.

இடைமட்ட மேகங்கள்: (2.5 - 6 கி.மீ. உயரம் வரை)

இடைப்பட்ட படை மேகங்கள் - சாம்பல் அல்லது நீல நிறத்தில் மெல்லிய விரிப்பு போன்று காணப்படும். உறைந்த நீர்த்திவலைகள் கொண்டது.

இடைப்பட்ட திரள் மேகங்கள் - அலைத் திரள் அல்லது இணைக் கற்றைகள் போன்று காட்சியளிக்கும். இவை செம்றியாட்டு மேகங்கள் அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள் எனப்படும்.

கார்படை மேகங்கள் - புவி மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கடுமையான மேகங்கள். மழை, பனி, ஆலங்கட்டி மழை தரக்கூடியது.

கீழ்மட்ட மேகங்கள்: (புவி மேற்பரப்பு 25 கி.மீ. வரை)

படைத்திரள் மேகங்கள் - (2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை) சாம்பல் மற்றும் வெண்மை நிற வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் - தெளிவான வானிலை காணப்படும்.

படைமேகங்கள் - அடர்த்தியான பனி மூட்டம் போன்று காணப்படும் கீழ்மட்ட மேகங்கள். மழை அல்லது பனிப்பொழிவை தரும்.

திரள் மேகங்கள் - தட்டையான அடிபாகம், குவிமாடம் போன்ற மேல் தோற்றம் கொண்டகாலிபிளவர்' போன்ற வடிவம். தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகம்.

கார்திரள் மேகங்கள் - இடியுடன் கூடிய மழை தரும் மேகங்கள். மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன் காணப்படும். (கனமழை, அதிக பனிப்பொழிவு தரும். சிலவேளை கல்மாரி, சுழற்காற்றுடன் மழை தரும்),

 

4. சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.

விடை:

 அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி எனப்படும்.

வெப்பச் சூறாவளிகள்:

நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால், வெப்பமண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும் பகுதிகளில்வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுத்துகின்றன.

மிதவெப்பச் சூறாவளிகள்:

• 35° முதல் 65° வட மற்றும் தென் அட்சங்களில் வெப்பம் மற்றும் குளிர் காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. இவை நிலத்தை அடைந்தவுடன் வலுவிழப்பதில்லை.

வட அட்லாண்டிக் பெருங்கடல், வடமேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் சூறாவளி ரஷ்யா மற்றும் இந்தியா வரை வீசுகின்றன. இந்தியாவை அடையும் போதுமேற்கத்திய இடையூறு காற்று' எனப்படும்.

கூடுதல் வெப்பச் சூறாவளிகள்:

• 30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. உயர் அட்ச வெப்ப மாற்றங்களிலிருந்து ஆற்றலை பெறுகின்றன. ‘மைய அட்ச சூறாவளிகள்' எனவும் அழைக்கப்டுகின்றன.

இச் சூறாவளிகள் லேசான சாரல் மழை, பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழைப்பொழிவு, பனிப்பொழிவு, சுழல் காற்று ஆகியவற்றை அளிக்கின்றன.

 

5. பொழிவின் வகைகளை விவரி.

விடை:

சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே 'பொழிவு' எனப்படும். .

சாரல் மழை. பனிப்பொழிவு . பனிப்படிவு . ஆலங்கட்டி மழை ஆகியவை பொழிவின் பல்வேறு வகைகள் ஆகும்.

சாரல்: 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடைதல்சாரல்' எனப்படும்.

மழை: உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் பொழுது மழை பொழிகிறது. காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருக்க வேண்டும். (மழைத்துளி விட்டம் 5 மி.லி-க்கு மேல்).

பனிப்பொழிவு: உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.

பனிப்படிவு: பகுதியாகவோ, முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்கள் பனி என அழைக்கப்படுகின்றது.

ஆலங்கட்டி மழை: முழுமையாகவோ அல்லது பகுதியாகவே ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச் சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவேஆலங்கட்டி மழை' எனப்படும்.


VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களைப் படம் வரைக.

2. மேகங்கள் மற்றும் மழைக்குத் தொடர்புடைய பழமொழிகளைச் சேகரிக்கவும்.

3. “மேகங்கள் மற்றும்மழை" பற்றி கவிதை எழுதுக.

4. தங்கள் பகுதியில் ஒரு வார காலத்திற்கு வானத்தில் உள்ள மேகங்களின் வடிவம் மற்றும் வண்ணங்களை உற்று நோக்கி அறிக்கை தயார் செய்க.

5. மழை மானி, காற்று திசை மானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக. 6. பட்டை விளக்கப்படம் வரைக.

) கன்னியாகுமரி, புதுடெல்லி, அலகாபாத் மற்றும் இட்டாநகர் இடங்களின் ஒரு நாள் வெப்ப அளவை சேகரிக்கவும்.

) ஜெய்சல்மர் (இராஜஸ்தான்), மௌசின்ராம் (மேகாலயா), நாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஒரு நாள் மழை அளவின் தரவுகளைச் சேகரிக்கவும்.

7. அரும்பும் வானவியலாளராக ஆகுக. தங்கள் பகுதியின் ஒரு வார காலத்தில் நிகழும் வானிலை நிகழ்வுகளை பதிவு செய்க.



மேற்கோள் நூல்கள்

1. Meteorology Dr. A. Natarajan. The tamil ndu text book society, chennai, tamil nadu. First edition april1973, Climatology.

2. Climatology Dr. K. Kumarasamy: Grace publicatians, kumbakonam, Tamil nadu.

 

இணையத் தொடர்புகள்

1 www.imd.gov.in

2. www.indpune.gov.in

3. https://www.isro.gov.in

 4 https://www.india.gov.in

 

இணையச் செயல்பாடு

பனிப்பாறை அமைவுகள் - உருகு நிலை

பனிப்பாறை வீழ்ச்சியால் ஏற்படும் நிலத்தோற்றத்தை அறிவோமா!


படிகள்:

படி 1: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி 'Gachers flash file தரவிறக்கம் செய்யவும்.

படி 2: 'Glacier type' தெரிவு செய்து அம்பு குறியீட்டின் மூலம் மாற்றி பனிப்பாறை ஏற்படுத்தும் நில தோற்றங்களை அறியவும்

 படி 3: 'Anatomy of Glaciers' ஐதெரிவு செய்து பனிப்பாறையின் இயங்குரு படத்தை இயக்கவும்.

படி 4: 'Glacier Erosion' மற்றும் 'Move Glacier' வாத்தானைப் பயன்படுத்தி பனிப்பாறை வீழ்ச்சியால் ஏற்படும் நில அரிப்பை அறியவும்.

உ்ரலி :

https://ees.as.uky.edu/sites/default/files/

elearning/module13swf.sef


Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : Paragraph Questions Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : விரிவான விடையளி - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்