Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
   Posted On :  05.01.2024 02:51 am

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

26. பின்வரும் சேர்மங்களை ஆல்கைல், அல்லைலிக், வைனைல், பென்சைலிக் ஹேலைடுகள் என வகைப்படுத்துக

i) CH3 - CH = CH - Cl

(ii) C6H5CH2I


(iv) CH2 = CH – Cl

விடை

i) CH3 - CH = CH – Cl – வைனைல் ஹேலைடு

(ii) C6H5CH2I - பென்சைலிக் ஹேலைடு

- ஆல்கைல் ஹேலைடு

(iv) CH2 = CH – Cl – வைனைல் ஹேலைடு


27. இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?

விடை

குளோரின் மூலக்கூறுகள் சீராக பிளவுற்று குளோரின் தனி உறுப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான ஆற்றலை இருளில் பெற முடியாது.


28. n-புரப்பைல் புரோமைடிலிருந்து, n-புரப்பைல் அயோடைடை எவ்வாறு தயாரிப்பாய்?

விடை

ஃபின்கெல்ஸ் டீன் வினை மூலம் தயாரிக்கலாம்.



29. பின்வரும் ஆல்கைல் ஹேலைடுகளில் எது


(i) கைரல் தன்மையுடையது

(ii) விரைவாக SN2 வினையில் ஈடுபடக்கூடியது.? எனக் கண்டறிக.

விடை :



30. குளோரோ பென்சீன் ஈதரின் முன்னிலையில் உலோக சோடியத்துடன் எவ்வாறு வினைபுரிகிறது. இவ்வினையின் பெயர் என்ன?

விடை :

குளோரோ பென்சீன் உலர் ஈதரில் உள்ள சோடியத்துடன் வினைப்படுத்தும் போது பை பீனைல் தருகிறது. இவ்வினை ஃபிட்டிக் வினை எனப்படும்.



31. ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக.

விடை :

ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது. ஆதலால் கார்பன் - ஹாலஜன் பிணைப்பானது முனைவுத் தன்மை கொண்டுள்ளது. கார்பன் அணுவானது பகுதி நேர்மின் தன்மையினையும் ஹேலஜன் பகுதி எதிர்மின் தன்மையினையும் கொண்டுள்ளன.


32. கிரிக்னார்டு வினைபொருள் தயாரிப்பில் மிகச் சிறிதளவு நீர் கூட தவிர்க்கப்பட வேண்டும். ஏன்?

விடை :

வினைத்திறன் மிக்க ஹைட்ரஜன் அணுக்களை கொண்ட நீருடன் கிரிக்னார்டு வினைபுரிந்து ஆல்கேனை தருகிறது.



33. அசிட்டைல் குளோரைடை அதிகளவு CH3MgI உடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்?

விடை :

அசிட்டைல் குளோரைடை அதிக அளவு CH3MgI உடன் வினைப்பட்டு மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலைத் தருகிறது.



34. R-Xன் பிணைப்பு ஆற்றலின் ஏறுவரிசையில் பின்வரும் ஆல்கைல் ஹாலைடுகளை எழுதுக.

CH3Br, CH3F, CH3Cl, CH3I

விடை :

ஆல்கைல் ஹாலைடின் பிணைப்பு ஆற்றலின் ஏறுவரிசையில்

CH3I < CH3Br < CH3Cl < CH3F


35. சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்சிஜனுடன் எவ்வாறு வினைபுரிகிறது?

விடை :

சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோஃபார்ம் ஆக்சிஜனுடன் ஆக்சிஜனேற்றமடைந்து நச்சுத்தன்மையுடைய பாஸ்ஜீனை தருகிறது.


36. C5H11Br என்ற சேர்மத்திற்கு அனைத்து சாத்தியமான மாற்றியங்களையும் எழுதுக. அவற்றின் பெயர் மற்றும் IUPAC பெயரினைத் தருக.

விடை :

C5H11Br அனைத்து சாத்தியமான மாற்றியங்கள்



37. ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்கள் தயாரிக்க உதவும் ஏதேனும் மூன்று முறைகளைத் தருக.

விடை :

) ஹைட்ரஜன் ஹாலைடுடன் வினை:

ஆல்கஹால்கள் ஹைட்ரஜன் ஹாலைடு உடன் வினைபுரிந்து ஹேலோ ஆல்கேன்கள் தருகின்றன.


) பாஸ்பரஸ் ஹாலைடுகளுடன் வினை

ஆல்கஹால்கள் PX3 அல்லது PX5 உடன் வினைபுரிந்து ஹேலோ ஆல்கேன்களைத் தருகின்றன.

R - OH + PX5  →  R – X + POX3 + HX

.கா: C2H5OH + PCl5 → C2H5Cl + POCl3 + HCl

) தயோனைல் குளோரைடுடன் வினை

ஆல்கஹால்கள் தயோனைல் குளோரைடுடன் பிரிடின் முன்னிலை வினைபுரிந்து ஹேலோ ஆல்கேன்களைத் தருகின்றன. (டார்சன் வினை)

R - OH + SOCl2 → R – Cl + SO2 + HCl

.கா: C2H5OH + SOCl→ C2H5 Cl + SO2 + HCl


38. SN1 மற்றும் SN2 வினைகளின் வினை வழிமுறைகளை ஒப்பிடுக.

விடை :



39. பின்வரும் அட்டவணையை நிரப்புக. வினையின் பெயரினைத் தருக. சமன்பாட்டினை எழுதுக.

விடை :



40. குளோரோ பென்சீனின் அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையை விளக்குக.

விடை :

அரோமேட்டிக் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைகள்:

ஹேலோ அரீன்கள் எளிதில் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுவதில்லை. ஏனெனில் அரைல் ஹேலைடுகளில் காணப்படும் C - X பிணைப்பு குட்டையானது. மேலும் வலிமையுடையது மற்றும் அரோமேட்டிக் வளையமானது அதிக எலக்ட்ரான் அடர்வு மையத்தினைக் கொண்டுள்ளது.

ஹேலோ அரீன்களில் உள்ள ஹேலஜனானது OH-, NH3 அல்லது CN- போன்ற கருக்கவர் காரணிகளால் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பதிலீடு செய்யப்படுகின்றன.



41. பின்வருவனவற்றிற்கு காரணம் தருக

t-பியூட்டைல் குளோரைடானது நீர்த்த KOH உடன் SN1 வினை வழிமுறையில் வினைபுரிகிறது. ஆனால் n-பியூட்டைல் குளோரைடானது SN2 வினை வழிமுறையைப் பின்பற்றுகிறது

O- மற்றும் m- டைகுளோரோ பென்சீன்களைக் காட்டிலும் p-டைகுளோரோ பென்சீன் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளது

விடை :

(i) உருவாகும் t- பியூட்டைல் கார்பன் நேர் அயனி அதிக நிலைத்தன்மையால் SN1 வினை வழிமுறையைப் பின்பற்றுகிறது. உருவாகும் n- பியூட்டைல் கார்பன் நேர் அயனி நிலைத்தன்மை குறைவாக இருப்பதால் SN2 வினைவழி முறையைப் பின்பற்றுகிறது.

(ii) மற்ற மாற்றியங்களை விட p -டை குளோரோ பென்சீன் அதிக உருகுநிலைக்குக் காரணம் அதன்

சீர்மைத்தன்மை

படிகத்தில் பொதிந்துள்ள அமைப்பு

மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி விசை


42. ஈதரில் உள்ள எத்தில் அயோடைடானது மெக்னீசியத்தூளுடன் வினைபுரியும் ஒரு வினையில் மெக்னீசியம் கரைந்து விளைபொருள் உருவாகிறது

) விளைபொருளின் பெயர் என்ன? வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.

) இவ்வினையில் பயன்படுத்தும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும்

) இவ்வினையினைப் பயன்படுத்தி அசிட்டோனை எவ்வாறு தயாரிக்க முடியும்?

விடை



43. பின்வருவனவற்றை தயாரிக்க உதவும் வேதி வினைகளை எழுதுக.

i) கார்பன் டெட்ரா குளோரைடிலிருந்து ஃப்ரீயான்-12

ii) கார்பன்-டை- சல்பைடிலிருந்து கார்பன் டெட்ரா குளோரைடு

விடை




44. ஃப்ரீயான்கள் என்பவை யாவை? அவைகளின் பயன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவினை விளக்குக.

விடை

மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோ புளுரோ பெறுதிகள் ஃப்ரீயான்கள் என அழைக்கப்படுகின்றன.

பயன்கள்:

i) குளிர்விப்பானாக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்று வெப்பநிலை சீராக்கியில் பயன்படுகிறது.

ii) காற்று திவலை மற்றும் நுரைப்பில் உந்து ஆற்றல் மூலமாக பயன்படுகிறது.

iii) வாசனை திரவியங்கள், முகச்சவர கிரீம்கள், பூச்சிக் கொல்லிகள் அகியவற்றில் நுரை தெளிப்பான் உந்து ஆற்றல் மூலமாக பயன்படுகிறது.

குளோரோ புளுரோ பெறுதிகளிலிருந்து குளோரின் தனி உறுப்புகள் உருவாகின்றன. இது தொடர்ந்து தாக்குதலின் காரணமாக ஓசோன் படலம் மெலிந்து, ஓசோன் துளைகள் உருவாகின்றன.


45. புரோமோ ஈத்தேனை பின்வருவனவற்றுடன் வினைப்படுத்தும் போது உருவாகும் விளைபொருளைக் கண்டறிக.

i) KNO2

ii) AgNO2

விடை:

(i) புரோமோ ஈத்தேன், ஆல்கஹால் கலந்த KNO2 யுடன் வினைபுரிந்து எத்தில் நைட்ரைட்டை தருகிறது.

C2H5Br + KNO2  → C2H5ONO + KBr

(ii) புரோமோ ஈத்தேன், ஆல்கஹால் கலந்த சில்வர் நைட்ரேட்டுடன் வினைபுரிந்து நைட்ரோ ஈத்தேன் தருகிறது.

C2H5Br + AgNO2 → C2H5NO2 + AgBr


46. SN1 வினை வழிமுறையினையும், அதன் புறவெளி வேதியியல் தன்மையினையும் விளக்குக.

விடை:

SN1 வினை வழிமுறை:

SN1 என்பது ஒரு மூலக்கூறு கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையினை குறிப்பிடுகின்றது.

S - பதிலீட்டினைக் குறிக்கிறது N - கருக்கவர் பொருளைக்குறிப்பது

1- மூலக்கூறு எண் ஒன்று

SN1 வினையின் வினைவேகமானது ஆல்கைல் ஹேலைடின் செறிவினை மட்டுமே பொறுத்து கருக்கவர் பொருளை செறிவை பொறுத்தது அல்ல.

வினைவேகம் K (ஆல்கைல் ஹேலைடு)

எனவே SN1 வினையானது முதல்படி வினைவேகவியலைப் பின்பற்றுகிறது. இது இருபடிகளில் நிகழ்கிகறது

SN1 வினைவழி முறை விளக்க ஒளிசுழற்சி பண்பு உள்ள ஈரிணைய பியூட்டைல் புரோமைடானது நீர்த்த KOH உடன்புரியும் வினையினை எடுத்துக்காட்டாக எடுத்துகொள்வோம்.


படி : 1 கார்பன் நேர் அயனி உருவாதல்

முனைவுள்ள C-Br பிணைப்பானது பிளக்கப்பட்டு கார்பன் நேர் அயனி மற்றும் புரோமைடு அயனி உருவாகின்றன. இந்தப்படியானது மெதுவாக நடைபெறுகிறது. எனவே இது வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படியாகும்.

கார்பன் நேர் அயனியானது இரு காலியான 2p ஆர்பிட்டால்களின் சமமான மடல்களை பெற்றுள்ளது. எனவே இரு புறங்களின் வழியேயும் சமமாக விரைந்து வினைபுரிகின்றது.

படி : 2

கருக்கவர் பொருளானது, கார்பன் நேர் அயனி இரு புறங்களின் வழியே தாக்குகின்றது. எனவே, வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழி திசைகளில் தள முனைவுற்ற ஒளியை சுழற்றும் தன்மையுடைய மாற்றியங்கள் சம அளவில் உருவாகின்றன. இதன் விளைவாக ஒளி சுழற்றும் தன்மையற்ற சுழிமாய்க் கலவை உருவாகின்றது.



47. பின்வருவன பற்றி குறிப்பு வரைக.

i) ராஷ் முறை

ii) டௌ முறை

iii) டார்சன் முறை

விடை:

) ராஷ் முறை : பென்சீன் ஆவி, காற்று மற்றும் HCl கலந்த கலவையை சூடாக்கப்பட்ட குப்ரிக் குளோரைடின் மீது செலுத்தி வணிக ரீதியில் குளோரோ பென்சீன் தயாரிக்கப்படும் முறை ராஷ் முறையாகும்.


) டௌ முறை : குளோரோ பென்சீனுடன், சோடா காரம் சேர்க்கப்பட்டு 350°C மற்றும் 300 வளிமண்டல அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது பீனால் உருவாகிறது.


இ) டார்சன் முறை : ஆல்கஹால்கள் தயோனைல் குளோரைடுடன் பிரிடின் முன்னிலையில் வினைபுரிந்து குளோரோ ஆல்கேன்கள் உருவாகும் வினை டார்சன் வினையாகும்



48. CH3 MgI ல்தொடங்கி பின்வருவனவற்றை எவ்வாறு தயாரிப்பாய்?

i) அசிட்டிக் அமிலம்

ii) அசிட்டோன்

iii) எத்தில் அசிட்டேட்

iv) ஐசோ புரப்பைல் ஆல்கஹால்

v) மெத்தில் சயனைடு

விடை:



49. பின்வரும் வினைகளை நிறைவு செய்க

விடை:


i) CH3CH2CH2Br (n-புரப்பைல் புரோமைடு)

ii) CH3CH2SH2 + NaBr (ஈத்தேன்தயால்)

iii) C6H5MgCl (பினைல் மெக்னீசியம் குளோரைடு)

iv) CCl3 NO2 +  + H2O (குளோராபிக்ரின்)

v) COCl2 + 2H2O (பாஸ்ஜீன்)


50. பின்வரும் சேர்மங்களின் தயாரிப்பினை விளக்குக.

i) DDT

ii) குளோரோஃபார்ம்

iii) பை பீனைல்

iv) குளோரோ பிக்ரின்

v) ஃப்ரியான்-12

விடை:

i) DDT : அடர் H2SO4 முன்னிலையில் குளோரோ பென்சீன் டிரை குளோரோ அசிட்டால்டிஹைடுடன் (குளோரால்) வினைபுரிந்து DDT கொடுக்கிறது.


ii) குளோரோஃபார்ம் : ஆய்வகத்தில், எத்தில் ஆல்கஹாலை சலவைத்தூளுடன் வினைப்படுத்தி பின் அதனைத் தொடர்ந்து வாலைவடித்தல் மூலம் குளோரோஃபார்ம் பெறப்படுகின்றது

இவ்வினை 3 படிகளில் நிகழ்கிறது. (CaOCl2 + H2O → Cl2 + Ca(OH)2 

படி 1: ஆக்ஸிஜனேற்றம் : CH3CH2OH+Cl→ CH3 CHO+HCl

படி 2 : குளோரின் ஏற்றம் : CH3 CHO + 3Cl2 → CCl3 CHO + 3HCl

படி 3: நீராற்பகுத்தல் : 2CCl3 CHO + Ca(OH) 2  → 2CHCl3 + (HCOO)2Ca

iii) பையினைல் : குளோரோ பென்சீன் உலர் ஈதரில் உள்ள சோடியத்துடன் வினைப்படுத்தும் போது பைபினைல் பெறப்படுகிறது. (ஃபிட்டிக் வினை)


iv) குளோரோபிக்ரின் : குளோரோஃபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைப்பட்டு குளோரோபிக்ரின் (ட்ரைகுளோரோ நைட்ரோ மீத்தேனை) தருகிறது.


v) ஃப்ரீயான் - 12: ஹைட்ரஜன் புளுரைடை கார்பன் டெட்ரா குளோரைடுடன் சிறிதளவு ஆன்டிமனிபென்டா குளோரைடு வினைவேக மாற்றி முன்னிலையில் வினைப்படுத்தும் போது ஃப்ரியான் – 12 உருவாகிறது. (ஸ்வார்ட்ஸ் வினை)



51. C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் நீரிய KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.

விடை:


தீர்வு: மூலக்கூறு வாய்பாடுபடி, சேர்மம் (A) எத்தில் குளோரைடு,

எத்தில் குளோரைடு (A) நீர்த்த KOH யுடன் வினைபுரிந்து சேர்மம் (B) எத்தில் ஆல்கஹாலை தருகிறது


எத்தில் குளோரைடு (A) ஆல்கஹால் கலந்த KOH யுடன் ஹைட்ரோ ஹேலஜன் நீக்க வினைக்கு உட்பட்டு எத்திலீனை (C) தருகிறது.


முடிவு:



52. A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C) யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.

விடை:

கொடுக்கப்பட்டவை:


53. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H8O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

விடை:


தீர்வு:

மூலக்கூறு வாய்ப்பாடுபடி, (A) ஒரு அல்கீன் அதாவது புரோப்பீன் சேர்மம் (A) HBr யுடன் வினைபுரிந்து ஐசோபுரப்பைல் புரோமைடு (B) யை தருகிறது.

ஐசோபுரப்பைல் புரோமைடு (B) நீர்த்த KOH யுடன் வினைபுரிந்து ஐசோபுரப்பைல் ஆல்கஹால் (C) தருகிறது.



54. (A) மற்றும் (B) ஆகியன C2H4Cl2 என்ற வாய்ப்பாடுடைய இரு மாற்றியங்கள் சேர்மம் (A) ஆனது நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. சேர்மம் (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H6O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (D) ஐத் தருகிறது. A, B, C மற்றும் D கண்டறிக, வினைகளை விளக்குக.

விடை


தீர்வு:

சேர்மம் (A) ஒரு டை ஹேலைடு ஆகும். மூலக்கூறு வாய்ப்பாட்டின் படி இரண்டு மாற்றியங்கள் சாத்தியங்கள் உள்ளன. அவை.


சேர்மம் (A) 1,1 டை குளோரோ ஈத்தேன் நீர்த்த KOH யுடன் நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு ஆல்டிஹைடு (B) யை தருகிறது.


சேர்மம் (B) 1,2 டை குளோரோ நீர்த்த KOH யுடன் நீராற்பகுத்தலுக்கு உட்படும் போது டை ஆலைத் தருகிறது.




11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes : Brief questions and answers: Chemistry: Haloalkanes and Haloarenes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்